Published:Updated:

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ``நாடு வளராது; நாட்டு மக்கள் உங்களை விட மாட்டார்கள்" - அசோக் கெலாட்

அசோக் கெலாட்

"ராகுல் காந்தியை நள்ளிரவு 12 மணி வரை விசாரிப்பதன்பேரில் துன்பப்படுத்துவது தவறு." - அசோக் கெலாட்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ``நாடு வளராது; நாட்டு மக்கள் உங்களை விட மாட்டார்கள்" - அசோக் கெலாட்

"ராகுல் காந்தியை நள்ளிரவு 12 மணி வரை விசாரிப்பதன்பேரில் துன்பப்படுத்துவது தவறு." - அசோக் கெலாட்

Published:Updated:
அசோக் கெலாட்

டெல்லியிலுள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ராகுல் காந்தி நேற்று ஆஜரானபோது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்களால் பெரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால் 400-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள், 26 எம்.பி-க்கள், ஐந்து எம்.எல்.ஏ-க்கள் போராட்டம் நடத்தியதற்காக டெல்லியிலேயே கைதுசெய்யப்பட்டனர். மேலும், நேற்று நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருந்தார்.

ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் இது தொடர்பாகக் கூறுகையில், ``நான் மோடியிடம் சொல்ல விரும்புகிறேன்... கடவுள் உங்களுக்கு நாட்டின் பிரதமராகும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், சி.பி.ஐ., வருமான வரி, அமலாக்கப் பிரிவு போன்றவற்றின் மூலம் நாட்டு மக்களை இப்படி நடத்தாதீர்கள். சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் நள்ளிரவு 12 மணி வரை விசாரிப்பதன்பேரில் துன்பப்படுத்துவது தவறு.

இதனால் நாடும் வளராது, நாட்டு மக்களும் உங்களை விட மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்-ஸின் பா.ஜ.க., நாட்டைக் கொள்ளையடிக்கிறது. அதை யாரும் கவனிக்கவில்லை. பிரதமர் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், பதற்றம், வன்முறை போன்ற முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் எஸ் ஹூடா,
காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் எஸ் ஹூடா,
ட்விட்டர்

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் எஸ் ஹூடா, “இந்த வழக்கை அமலாக்கப் பிரிவு கையாளும்விதமும், எத்தனை மணி நேரம் ராகுல் காந்தி கேள்வி கேட்கப்பட்டார் என்பதும், மீண்டும் மறு விசாரணைக்கு அழைக்கப்பட்டதும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதும் தெளிவாகத் தெரிகிறது... இந்த நடவடிக்கைகளால் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் குரல் ஓய்ந்துவிடாது" எனக் கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism