Published:Updated:

``திமுக அரசுக்கு `விஷன் பிளான்' கிடையாது!" - அண்ணாமலை தாக்கு

அண்ணாமலை

`தி.மு.க அரசு கடைசியாக நம்பியிருப்பது டாஸ்மாக் கடையைத்தான். குவாட்டர் விலையையும், பீா் விலையையும் உயர்த்தினால் அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கொண்டாடிக் வருகின்றனர்.' - அண்ணாமலை

``திமுக அரசுக்கு `விஷன் பிளான்' கிடையாது!" - அண்ணாமலை தாக்கு

`தி.மு.க அரசு கடைசியாக நம்பியிருப்பது டாஸ்மாக் கடையைத்தான். குவாட்டர் விலையையும், பீா் விலையையும் உயர்த்தினால் அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கொண்டாடிக் வருகின்றனர்.' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் தமிழக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மேக்கேதாட்டூ அணை கட்டும் விவகாரம் குறித்து மத்திய அரசு மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. `கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டூ அணையைக் கட்டமுடியாது’ என அதன் துறையைச் சேர்ந்த அமைச்சர் கஜேந்திரசிங் சேகா தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கார்நடக காங்கிரஸ் கட்சியினர் மேக்கேதாட்டு பாதயாத்திரையைக் கையில் எடுத்துள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

காங்கிரஸ் கட்சி இதைத் தொடர்ந்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இதுவரை மேக்கேதாட்டூவைப் பற்றி வாய் திறக்காதது அதிர்ச்சியாக அளிக்கிறது. அதன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க அரசும் காங்கிரஸின் கா்நாடாகப் போக்கை கண்டிக்கவில்லை. இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சராக நமது முதல்வர் மாறியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும் கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸுக்கும் ரகசிய ஒப்பந்தம் இருக்கிறதா? இங்கிருக்கும் தி.மு.க அரசு ஆதரிக்கிறதா? என்பதை பத்திரிகைகள்தான் கேட்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரதமர் மோடி, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் கொடுக்காத நிதியை தமிழகத்திற்கு கொடுத்துள்ளார். தி.மு.க அரசுக்கு ’விஷன் பிளான்’ கிடையாது. அவா்கள் கடைசியாக நம்பியிருப்பது டாஸ்மாக் கடையைத்தான். குவாட்டர் விலையையும், பீா் விலையையும் உயர்த்தினால் அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கொண்டாடிக் வருகின்றனர்.

தூத்துக்குடி விமான நிலையம்
தூத்துக்குடி விமான நிலையம்

ஆவினில் கிடைக்கும் அனைத்து பொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பொய்யை மட்டும் பேசிக் கொண்டு தனது காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் நமது தமிழக முதல்வர். தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் அ.தி.மு.க அரசில் போடப்பட திட்டங்களைத்தான் திறந்து வைத்துள்ளார். மத்திய அரசு நிதி வழங்கும் பல திட்டத்திற்கு இவர்களது பெயரை வைத்துவிட்டு இப்போது மத்திய அரசை குறை சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்றார்.