Published:Updated:

`ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கையாளாகத்தான் இருக்கிறார்!’ - சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

பாரதி சிலைக்கு மாலை அணிவித்த பாலகிருஷ்ணன்
பாரதி சிலைக்கு மாலை அணிவித்த பாலகிருஷ்ணன்

``ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கையாளாகத்தான் இருக்கிறார். ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்கிற கேள்வியெல்லாம் இருக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாகவி பாரதியாரின் 100-வது நினைவுநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் இருக்கும் பாரதியார் இல்லம் மற்றும் நினைவு மண்டபத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது தமிழக மக்களை, தனது பாடல்களால் தட்டி எழுப்பியவர் புரட்சிக் கவிஞர் பாரதியார் என்று சொன்னால் அது மிகையாகாது.

பாரதி சிலைக்கு மாலை அணிவித்த பாலகிருஷ்ணன்
பாரதி சிலைக்கு மாலை அணிவித்த பாலகிருஷ்ணன்

தனது பேனா முனையால் ஆங்கிலேயர்களுக்கு அதிர் வேட்டுக்களை உருவாக்கியவர். அவர், இந்திய விடுதலைக்காகப் போராடிய கவிஞர் மட்டும் கிடையாது. சமூகநீதிக்காகவும் போராடியவர். அவர் இடதுசாரி சிந்தனையாளர். பாரதியாரை நினைவுகூரும் வகையில், அவருடைய பெயருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார்.

பாரதியார் நினைவு நூற்றாண்டு: தற்காலத் தமிழகத்திலும் பாரதியின் தேவை என்ன? - சமூக ஆர்வலர்களின் பார்வை

இந்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. முதல்வரின் இந்த அறிவிப்பால் தமிழக மக்களின் இதயத்தில் பாரதியார் என்றென்றும் நிலைத்து வாழ்வார். எட்டயபுரத்தில் பாரதியார் பேரில் நுழைவு வாயில் மற்றும் கலை அரங்கம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பொதுவாக ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கையாளாகத்தான் இருக்கிறார். ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்கிற கேள்வியெல்லாம் இருக்கிறது.

பாரதி பிறந்த இல்லத்தில் பாலகிருஷ்ணன்
பாரதி பிறந்த இல்லத்தில் பாலகிருஷ்ணன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள்தான் செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர, ஆளுநர் என்ற மத்திய அரசின் எடுபிடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப்படைத்து ஆளுவது என்பது பொருத்தமற்றது. அதில் இவரா, அவரா என்ற பாகுபாடு இல்லை. எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு