Published:Updated:

சாவி இப்போது எடப்பாடி வசம்... ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த திட்டம் என்ன?!

ஓபிஎஸ்

சீல் வைக்கப்பட்ட அலுவலக சாவியை எடப்பாடியிடம் வழங்கிய நீதிமன்றம், கட்சியின் மீதான உரிமையைக் கேள்வி எழுப்பி, ஓ.பி.எஸ் தரப்பை மேலும் பலவீனமாக்கியிருக்கிறது.

சாவி இப்போது எடப்பாடி வசம்... ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த திட்டம் என்ன?!

சீல் வைக்கப்பட்ட அலுவலக சாவியை எடப்பாடியிடம் வழங்கிய நீதிமன்றம், கட்சியின் மீதான உரிமையைக் கேள்வி எழுப்பி, ஓ.பி.எஸ் தரப்பை மேலும் பலவீனமாக்கியிருக்கிறது.

Published:Updated:
ஓபிஎஸ்

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த 11-ம் தேதி அ.தி.மு.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வர முயன்ற ஓ.பி.எஸ்-ஸை, அங்கிருந்த இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

அதிமுக தலைமைக் கழக அலுவலகம்
அதிமுக தலைமைக் கழக அலுவலகம்

சிறிது நேரத்தில் அந்தப் பகுதியே கலவரமானது. இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்குக் கோட்டாட்சியர் சீல் வைத்தார். மேலும், இது குறித்து இரு தரப்பும் விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகிய இரு தரப்பும் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், "ஓ.பி.எஸ் அலுவலகம் சென்றிருக்கக் கூடாது என்றும், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால், அலுவலகம் மீதான சுவாதீன உரிமையைக் கோர முடியாது" என்றும் கருத்து தெரிவித்தார்.

அதிமுக
அதிமுக

அதேபோல, 1988-ல் சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகம் ஜானகி-யிடம் ஒப்படைக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அலுவலகத்தின் சாவியை உடனடியாக பழனிசாமியிடம் கோட்டாட்சியர் ஒப்படைக்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பை ஓ.பி.எஸ் தரப்பு எதிர்பார்க்கவே இல்லை. அதேபோல, கட்சியின் மீதான உரிமையை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, ஓ.பி.எஸ் தரப்பை மேலும் பலவீனமாக்கியிருக்கிறது.

இது குறித்து ஓ.பி.எஸ் தரப்பு வக்கீல் திருமாறனிடம் பேசினோம்:

"அலுவலகம் முன்பாக நடந்த களபேரத்துக்கு முன்பாக காலை 8:30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போது, ஓபிஎஸ் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர்தான். எதிர்த்தரப்பின் வாதத்தின்படி பார்த்தாலும், ஓ.பி.எஸ் பொருளாளராகவே இருந்தார். அப்படி இருக்கும்போது, தலைமை அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் செல்வதில் எந்தத் தவறுமில்லை. அதேபோல, அலுவலகத்தைப் பூட்டவே கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டித்தான் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அதன்படி, அலுவலக சுவாதீனம் யாரிடம் இருக்கிறது என்று இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தவேண்டிய அதிகாரியின் பணியைச் செய்யவில்லை.

எடப்பாடி - ஓபிஎஸ்
எடப்பாடி - ஓபிஎஸ்

அதிகாரியின் பணியில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது. சட்டவிதிகள் 145, 146-ன் படி கோட்டாட்சியருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்த அதிகாரத்தை நீதிமன்றமே எடுத்திருக்கிறது. உதாரணமாக, பட்டா சுவாதீனம் தொடர்பாக பிரச்னை வரும்போது தாசில்தார்தான் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிப்பார்.

இந்த விசாரணை நடைபெறாமல், நீதிமன்றத்துக்கு வரக் கூடாது. உயர் நீதிமன்றத்தால் நேரடியாகப் பட்டா வழங்க முடியாது. அதேபோலத்தான், சீல் வைக்கப்பட்ட அதிகாரி விசாரணை நடத்தாமல், நீதிமன்றத்தால் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. இந்த உத்தரவை மேற்கோள் காட்டி, தமிழ்நாட்டில் இனி சுவாதீனம் தொடர்பான பல வழக்குகளை உயர் நீதிமன்றம் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

திருமாறன்
திருமாறன்

நியாயமாக, இந்த வழக்கை அரசே ஏற்று நடத்தியிருக்க வேண்டும். எடப்பாடி இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற தீர்மானத்தைத் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ்-ஸுக்குத்தான் சாவி கிடைத்திருக்க வேண்டும். இந்நிலையில், அலுவலகம் எடப்பாடிக்கு சுவாதீனம் செய்தது தவறு. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், எங்கள் தரப்புக்கு சாவி கிடைத்துவிடும். அதைத்தான் நாங்கள் செய்யப்போகிறோம்" என்றார்.