Published:Updated:

விராலி மலை: `அமைச்சரால் தொகுதிக்குக் கெட்ட பெயர்!’ - விஜயபாஸ்கரை டார்கெட் செய்த ஸ்டாலின்

மக்கள் கிராமசபைக் கூட்டம்
மக்கள் கிராமசபைக் கூட்டம்

`அண்ணா, எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்புக்கான காரணத்தை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தார். ஜெயலலிதா இறப்பின்போது, அதற்கான காரணத்தை தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.’

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தனியார் கல்லூரி வளாகத்தில் தி.மு.க சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இனி `எடப்பாடி’ என்ற பெயருடன் சேர்த்து அழைக்க மாட்டேன். எடப்பாடி தொகுதி கிராமசபைக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். அங்கே இருந்தவங்கல்லாம், "முதல்வர் பழனிசாமியை நீங்க விமர்சிக்கும்போது எங்க ஊர் பேரையும் சேர்த்து விமர்சிக்கிறீங்க. எங்க ஊரை அசிங்கப்படுத்தாதீங்கன்னு சொன்னாங்க. அதனால இனிமே முதலமைச்சர் பழனிசாமின்னுதான் சொல்லப்போறேன். நம்ம உடன்பிறப்புகள் எல்லாம் அப்படித்தான் சொல்லணும்.

விராலி மலை: `அமைச்சரால் தொகுதிக்குக் கெட்ட பெயர்!’ - விஜயபாஸ்கரை டார்கெட் செய்த ஸ்டாலின்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை யார் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன். `குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என நான்தான் பட்டம் கொடுத்தேன். அவர் பிறந்த ஊருக்கும், அவரைத் தேர்ந்தெடுத்த இந்தத் தொகுதிக்கும் கெட்ட பெயரை மட்டும்தான் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார். கொரோனா வருவதற்கான சூழல் இருக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எடுத்திருக்கீங்கன்னு சட்டமன்றத்தில் முதன்முதலில் நான் கேள்வி எழுப்பியிருந்தேன். விஜயபாஸ்கர் எழுந்திரிச்சு, ``இது அம்மா ஆட்சி, கொரோனாவெல்லாம் நமக்கு வராது. ஒரு உயிரைக்கூட இழக்க மாட்டோம்’’ என்றார்.

ஆனா, தமிழ்நாட்டில் மட்டும் எட்டு லட்சம் பாதிக்கப்பட்டிருக்காங்க. ஆயிரம் பேர் இறந்துபோயிருக்காங்க. கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் ஆட்சிதான் தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தல்ல பணப் பட்டுவாடா நடைபெற்றது எல்லாருக்கும் தெரியும். அந்த நேரத்துலதான் வருமான வரித்துறை ரெய்டு முதல்வர் பழனிசாமி, விஜயபாஸ்கர் உட்பட எட்டு மந்திரிகள் வீடுகளில் நடந்துச்சு. 89 கோடி ரூபாய் வரையிலும் அவர்கள் மூலமாகப் பணப் பட்டுவாடா நடந்திருப்பதாக ஆவணங்களை எடுத்துச் சென்றனர். (அமைச்சரின் ஓட்டுநர், ஆவணங்களை எடுத்துச் செல்வது போன்ற காட்சியைக் குறும்படமாகப் பொதுமக்களிடம் திரையில் காண்பிக்கப்பட்டது)

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க ஆட்சியில் விலைவாசி உயர்ந்தாலும், அதைக் கட்டுக்குள் வைத்திருந்தோம். இன்னிக்கு விலைவாசி ரொம்பவே உயர்ந்துபோச்சு. தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா. அவரது இறப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்று கண்டுபிடிக்கவில்லை. அண்ணா, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது தான் இறந்தனர். அவர்களது இறப்புக்கான காரணத்தை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தார். அம்மா இறப்பின்போது, அதற்கான காரணத்தைத் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் வெளியிடவில்லை. மத்த மந்திரிங்க ஒவ்வொருத்தரும் அம்மா இட்லி சாப்பிட்டாங்க, கையெழுத்துப் போட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு மட்டும்தான் இருந்தாங்க.

எதிராகக் களமிறங்க சீமான், குஷ்பு, ஜெயக்குமார் ரெடி... ஈஸி டார்கெட் ஆகிறாரா ஸ்டாலின்?#TNElection2021

விசாரணை கமிஷன்வெச்சு மூணு வருஷமாச்சு. மூணு வருஷத்தில் எட்டு முறை அழைப்புவிடுத்தும் விசாரணை கமிஷனுக்கு ஓ.பி.எஸ் செல்லவில்லை. அம்மா ஆட்சி நடத்துகிறோம் என்று கூறுபவர்கள், ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணத்தையே கண்டறியவில்லை. தி.மு.க ஆட்சி வந்தவுடன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி, குற்றம் செய்யப்பட்டவர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்கள்" என்றார்.

கிராமசபைக் கூட்டம்
கிராமசபைக் கூட்டம்

முன்னதாக, தொகுதிக்குள், மகளிர் கலைக் கல்லூரி அமைத்துத்தர வேண்டும், சமுதாயக்கூடம் ஏற்படுத்த வேண்டும். மேம்பாலம் அமைக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை முறையாகக் கிடைக்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் முழுவதுமாக வேலை கிடைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஸ்டாலினிடம் பொதுமக்கள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய ஸ்டாலின், ``ரூ.4-க்குக் கிடைக்கும் மாஸ்க்கை அரசு ரூ.30 கொடுத்து வாங்குகிறது. ரூ.4,000-க்கு கிடைக்கும் கிருமி நாசினி தெளிப்பானை 17,500 -க்கும், ரூ.400 மதிப்புமிக்க பிளீச்சிங் பவுடர் மூட்டையை ரூ.1,500 என கணக்கு காட்டுகின்றனர். கொரோனா காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் ஆட்சியாக அதிமுக ஆட்சி நடக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு