Published:Updated:

பா.ஜ.க-வுக்கு நெருக்கமான 'கல்வித்தந்தை'... கு.க.செல்வம் மனதைக் கரைத்ததில் 'பங்கு'!

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

ஸ்டாலின் குடும்பத்துக்கு கு.க.செல்வம் எவ்வளவு நெருக்கமானவர் என்பது ஊரறிந்த விஷயம். அவர் இப்படி மாறுவார் என்று பா.ஜ.க தலைவர்களே நினைக்கவில்லையாம்

"தமிழக அரசியல் களைகட்ட ஆரம்பித்துவிட்டதே!" என்றபடி வந்தார் கழுகார்.

"கு.க.செல்வம் கொளுத்திப் போட்ட வெடி சரசரவென வெடிக்கிறதோ?" என்றபடி, வாழையிலையில் சுடச்சுட கேரட் அல்வாவை நீட்டினோம். அல்வாவை வாயில் போட்டுக்கொண்ட கழுகார், அதே சூட்டுடன் செய்திகளைக் கொட்டினார்.

"தி.மு.க-விலுள்ள வன்னியர், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பா.ஜ.க இழுக்க ஆரம்பித்திருப்பதை, சில மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்தேன். நான்கு பேர்கொண்ட ஆர்.எஸ்.எஸ் அணி இதற்காகக் களத்தில் இறங்கியிருப்பதையும் சொல்லியிருந்தேன். அதுதான் இப்போது நடக்கிறது.

தி.மு.க-வின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ-வான கு.க.செல்வம், திடீரென டெல்லிக்குச் சென்று பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்திருப்பது தமிழக அரசியலை தகிக்கவைத்துவிட்டது.

ஸ்டாலின் குடும்பத்துக்கு கு.க.செல்வம் எவ்வளவு நெருக்கமானவர் என்பது ஊரறிந்த விஷயம். அவர் இப்படி மாறுவார் என்று பா.ஜ.க தலைவர்களே நினைக்கவில்லையாம். சரியான நேரத்தில் காய்நகர்த்தி கு.க.செல்வத்தை காவித்துண்டு போடவைத்துள்ளார் வி.பி.துரைசாமி."

"ஓஹோ..."

"சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருக்கான ரேஸ் நடந்து கொண்டிருந்தபோதே கு.க.செல்வத்தை அழைத்த ஸ்டாலின், 'பொறுப்புக்குழு போடலாம்னு இருக்கேன்யா. உன்னைத் தலைவராகவும், ராஜா அன்பழகன் உள்ளிட்டவங்களை உறுப்பினர்களாகவும் நியமிக்க முடிவு செஞ்சிருக்கேன்' என்றாராம். இதில் கொஞ்சம் உற்சாகமாக இருந்துள்ளார் செல்வம்.

ஆனால், திடீரென உதயநிதி தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டு சிற்றரசுவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்துவிட்டனர். இந்த நியமனத்தை டி.வி-யில் பார்த்துத்தான் செல்வம் தெரிந்துகொண்டாராம். பிறகு வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் இல்லை என்பதையும் சூசகமாகத் தெரிந்துகொண்டிருக்கிறார். இந்தக் கோபத்தில்தான் அறிவாலயம் செல்வதைத் தவிர்த்துள்ளார். தி.மு.க-வினர் போன் செய்தால்கூட எடுக்கவில்லையாம்."

பா.ஜ.க-வுக்கு நெருக்கமான 'கல்வித்தந்தை'... கு.க.செல்வம் மனதைக் கரைத்ததில் 'பங்கு'!

"சரிதான்..."

"கு.க.செல்வத்துக்குச் சொந்தமாக மதுரவாயலில் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் சில சிக்கல்கள் இருப்பதால், விற்க முடியாமல் தவித்தாராம். அந்த நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில் 'கல்வித்தந்தை' ஒருவரிடம் அந்த இடத்தைக் கொடுத்து பெரும் தொகை ஒன்றையும் செல்வம் பெற்றுள்ளார்.

ஒருகட்டத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளது 'கல்வித்தந்தை'த் தரப்பு. அதைக் கொடுக்க முடியாமல், இடத்தையும் விற்க முடியாமல் செல்வம் திண்டாடியுள்ளார். அந்தக் 'கல்வித்தந்தை' பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர். கு.க-வின் மனதைக் கரைத்ததில், அவரது பங்கும் இருக்கிறது என்கிறார்கள்!"

- அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க-வின் அடுத்தடுத்த உள்ளரசியல் மூவ்கள் குறித்து கழுகார் பகிர்ந்த தகவல்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2XFhcPQ > "டொக்கு டொக்குன்னு நெஞ்சைப் பதறடிக்குது சார்!" - முதல்வரிடம் கெஞ்சிய தி.மு.க மூத்த தலைவர் https://bit.ly/2XFhcPQ

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு