Published:Updated:

சைலன்ட் மோடில் ரஜினி ரசிகர் மன்றங்கள்... பின்னணி என்ன?

ரஜினி
ரஜினி

ரஜினியிடமிருந்து இன்னும் அழுத்தமான அறிவிப்பு வராத கோபம் ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டிருப்பதுதான், ரியாக்‌ஷன் மிஸ்ஸானதற்கு முக்கிய காரணம்.

"முன்பே பார்த்துவிட்டேன். 'சிறைக்குள் இருந்துகூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனத்தை நீக்காவிட்டால், வழக்கு தொடரப்படும்' என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறிய பின்புதான், அதை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த வசனம் ரஜினியின் விருப்பத்தின் பேரிலேயே இடம் பெற்றிருக்கிறது என்று நினைக்கும் அ.ம.மு.க-வினர், ரஜினியைக் கண்டித்து போஸ்டர் அடித்துள்ளனர்."

"ஆனால், அ.ம.ம.க உள்பட பல கட்சிகளுடனும் ரஜினி கூட்டணி வைக்கக்கூடும் என்று பேச்சிருக்கிறதே?"

"உண்மைதான். அ.ம.மு.க-வை ரஜினியின் கூட்டணியில் சேர்ப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு கல்வித்தந்தைகள் முயற்சி மேற்கொண்டனர். அது அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான், அந்த வசனங்களை நீக்குவதற்கு ரஜினி தடையேதும் சொல்லவில்லையாம். அவருடைய ஒப்புதலுடன்தான் அதை நீக்கியுள்ளனர்."

"ஓ... அ.ம.மு.க-வின் போஸ்டர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பெரிதாக ரியாக்‌ஷன் காட்டாததன் காரணம் இதுதானோ?"

அவர் சொன்னதைப் பார்த்தால், அரசியலுக்கு வருவதில் அவருக்கு விருப்பமே இல்லை என்பதைப் போலிருந்ததாம். ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் அந்த விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

"ஓரளவுக்கு உண்மை. ஆனால், ரஜினியிடமிருந்து இன்னும் அழுத்தமான அறிவிப்பு வராத கோபம் ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டிருப்பதுதான், ரியாக்‌ஷன் மிஸ்ஸானதற்கு முக்கிய காரணம்.

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ஒரு படம், பிருத்விராஜுடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களுக்கு ரஜினி 'புக்' ஆவதில், அவருடைய அரசியல் என்ட்ரியை எதிர்பார்க்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் ரஜினி, அதற்கான எந்த வேலையையும் செய்யாமல் இருக்கிறார் என்று அவர்கள் மத்தியில் புலம்பல் சத்தம் அதிகமாகக் கேட்கிறது. அதோடு, இன்னொரு தகவலும் பரவிக்கொண்டிருக்கிறது..."

"என்ன தகவல்?"

"நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசிய ரஜினி, 'நீங்க எல்லோரும் உங்களுடைய வேலையையும் தொழிலையும் பாருங்கள். மன்ற வேலைகள் வேறு எதையும் பெரியளவில் செய்யவேண்டாம்' என்று கூறினாராம். அவர் சொன்னதைப் பார்த்தால், அரசியலுக்கு வருவதில் அவருக்கு விருப்பமே இல்லை என்பதைப் போலிருந்ததாம். ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் அந்த விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். அதுதான் இப்போது மற்றவர்களுக்கும் பரவியிருக்கிறதாம்." விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2FOwMiV

"என்ன தகவல்?"

"நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசிய ரஜினி, 'நீங்க எல்லோரும் உங்களுடைய வேலையையும் தொழிலையும் பாருங்கள். மன்ற வேலைகள் வேறு எதையும் பெரியளவில் செய்யவேண்டாம்' என்று கூறினாராம். அவர் சொன்னதைப் பார்த்தால், அரசியலுக்கு வருவதில் அவருக்கு விருப்பமே இல்லை என்பதைப் போலிருந்ததாம். ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் அந்த விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். அதுதான் இப்போது மற்றவர்களுக்கும் பரவியிருக்கிறதாம்."

"அதனால்தான் ரசிகர் மன்றங்கள் சைலன்ட் மோடில் இருக்கின்றனவா?"

சைலன்ட் மோடில் ரஜினி ரசிகர் மன்றங்கள்... பின்னணி என்ன?

"அப்படித்தான் தெரிகிறது. தன்னைச் சந்திக்கும் யாரிடமும் அரசியலில் தன்னுடைய நிலைப்பாடு பற்றி எதையுமே அவர் பகிர்வதில்லை என்கிறார்கள்."

"இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்தாரே... என்ன விசேஷம்?"

"ரஜினியை விக்னேஸ்வரன் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, இலங்கையிலும் விநோதமாகத்தான் பார்க்கப் படுகிறது. விசாரித்ததில், ரஜினி தரப்பிலிருந்துதான் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு போயிருக்கிறது."

"என்ன பேசினார்களாம்?"

"இலங்கையில் தற்போதுள்ள நிலையைப் பற்றி விக்னேஸ்வரன் விளக்கியிருக்கிறார். இந்திய அரசு என்னென்ன செய்தால் அங்குள்ள தமிழர்களுக்கும் இங்குள்ள அகதிகளுக்கும் பலனளிக்கும் என்பதையும் விவரித்திருக்கிறார். 'இதுபற்றி பி.ஜே.பி தலைவர்களிடம் நீங்கள் பேசவேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்த விக்னேஸ்வரன், 'இலங்கைக்கு வந்து வடக்கு மாகாணத்தின் நிலைமையை நீங்கள் நேரில் பார்க்கவேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தாராம்."

"ரஜினி என்ன சொன்னாராம்?"

"எல்லாவற்றுக்கும், 'முயற்சி செய்கிறேன்' என்று சொல்லியிருக்கிறாராம். அநேகமாக இலங்கைத் தமிழர்கள், இங்குள்ள அகதிகள் தொடர்பாக பி.ஜே.பி தலைவர்களிடம் ரஜினி பேசுவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்."

- தமிழக அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்கு கள் விரைவில் சூடுபிடிக்கும் என்கிறார்களே... உள்ளாட்சி அமைப்புகளின் மறைமுகத் தேர்தலில் தி.மு.க-வுக்கு பொங்கல் வைத்தது அ.தி.மு.க-வா? காங்கிரஸா? - ஜூனியர் விகடன் இதழில் கழுகார் தந்த தகவல்களை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டு... தி.மு.க கூட்டணிக்கு காங்கிரஸ் வேட்டு?! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-jan-19

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு