Published:Updated:

`பாலியல் குற்றச்சாட்டு; மூத்த தலைவரின் சூழ்ச்சி?’ - சச்சின் பைலட் வெளியேற்றத்தின் பின்னணி

 சச்சின் பைலட்
சச்சின் பைலட்

காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் தன் மீது இருக்கும் பாலியல் குற்றச்சாட்டை மறைக்கவே கிளர்ச்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிச் சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்த மோதல் ஆட்சிக் கவிழ்ப்பு வரை சென்று தற்போது ஓரளவு அமைதியாகியுள்ளது. இருவருக்கும் இடையேயான மோதல் தீவிரமானதை அடுத்து காங்கிரஸ் மேலிடம், கட்சி மற்றும் அரசு பதவியிலிருந்து சச்சின் பைலடை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டது.

இதைப் பயன்படுத்திக்கொண்ட பா.ஜ.க அங்கு ஆட்சியைக் கவிக்க முயற்சி செய்தது. ஆனால், சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடித்துள்ளார்.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்

தான் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் பா.ஜ.க போன்ற எந்தக் கட்சியிலும் இணையப்போவதில்லை என சச்சின் கூறிவருகிறார். நல்ல முறையில் சென்றுகொண்டிருந்த ராஜஸ்தான் ஆட்சியில் திடீரென சச்சின் பைலட் எதற்காக மோதல் போக்கை கையாண்டார் என்பதற்கு இதுவரை முழுமையாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சச்சின், மோதல்போக்கை உருவாக்கியபோது கட்சி மேலிடத்துக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்துள்ளது. பெரும்பாலான மூத்த தலைவர்கள் இது அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்க விரும்பிய பா.ஜ.க-வின் சதி என்றே நினைத்தனர்.

ராஜஸ்தான்: `எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?' - கொதிக்கும் சச்சின் பைலட் ஆதரவாளர்கள்

இந்நிலையில் சச்சின் தன் மீது இருக்கும் பாலியல் விவகாரம் வெளியில் வருவதைத் தவிர்க்கவே கிளர்ச்சி செய்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சச்சினின் எதிரிகள் சிலர் அவர் மீது இருக்கும் பாலியல் விவகாரம் குறித்து வெளியில் சொல்ல இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதை அறிந்த சச்சின் தன் மீது அப்படி எந்தக் குற்றச்சாட்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்

ராஜஸ்தான் காங்கிரஸில் முக்கிய பொறுப்பிலிருந்த சச்சின் பைலட் தற்போது அம்மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்தார். இந்தநேரத்தில் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தால் தன் பெயருக்கும் வருங்கால அரசியலுக்கும் பெரும் களங்கமாக இருக்கும் என எண்ணி அதைப் போக்கவே அசோக் மீது அதிருப்தி தெரிவித்து தன் மீதான குற்றச்சாட்டை மறைக்க நினைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, துங்கர்பூர்- பன்ஸ்வாடா பிராந்தியத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரால் சச்சின் வீழ்த்தப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சச்சினுக்கு மிக நெருக்கமாக இருந்து அவரது முழு விசுவாசத்தையும் பெற்றுள்ளார் அந்தத் தலைவர். சச்சின் அவரை தனது விசுவாசிகளில் ஒருவராகக் கருதியுள்ளார். இந்தக் காரணத்தினாலேயே அவரது பெயர் எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் முதல் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சச்சினின் எதிரிகளின் விருப்பப்படி அவர், சச்சினுக்கு ஆதரவாகச் செயல்பட்டு தற்போது கடுமையான நேரத்தில் தன் உண்மை முகத்தைக் காட்டி சச்சின் பற்றிய உண்மைகளை வெளியில் சொல்லி, அவருக்கு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாகவே சச்சின் காங்கிரஸ் ஆட்சியில் குளறுபடி செய்தார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News credits : The Daily Guardian

அடுத்த கட்டுரைக்கு