Published:Updated:

`விஜய் ரசிகர் மன்றத்தின் வெற்றியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது!’ - சொல்கிறார் முத்தரசன்

முத்தரசன்
News
முத்தரசன்

``மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் விரைவிலேயே நடைபெற இருக்கிறது. அதில், தலைவர் பதவிக்கு மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்யும் நடைமுறையை அரசு அறிவிக்க வேண்டும்” - முத்தரசன்

புதுக்கோட்டையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்ற அரசுக்கு மக்கள் கொடுத்த பரிசு, மேலும் அவர்கள் அறிவித்துள்ள நலத்திட்ட உதவிக்கான பாராட்டும் கூட. இந்த வெற்றியைக் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் விரைவிலேயே நடைபெற இருக்கிறது.

`விஜய் ரசிகர் மன்றத்தின் வெற்றியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது!’ - சொல்கிறார் முத்தரசன்

அதில், தலைவர் பதவிக்கு மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்யும் நடைமுறையை அரசு அறிவிக்க வேண்டும். இதற்காகச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானத்தையும் நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும்.

மறைமுக தேர்தல் பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வரலாறு படிப்பினைகளால் தான் இந்தக் கருத்தை முன்வைக்கிறோம். நேரடி தேர்தலுக்கான அவசியத்தை உணர்ந்து அரசு தீர்மானத்தை நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களுக்கும் சட்ட முன் வடிவு உள்ளிட்டவற்றுக்கும் மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக பரிசீலனை செய்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை முதலில் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

`விஜய் ரசிகர் மன்றத்தின் வெற்றியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது!’ - சொல்கிறார் முத்தரசன்

தோல்வியை ஒரு பாடமாக அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த கால அலங்கோல ஆட்சியால்தான் அவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டுள்ளது. விஜய் ரசிகர் மன்றத்தினர் தற்போது ஊராட்சித் தேர்தலில் உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். அது நல்ல விஷயம் தான். ஆனால், விஜய் ரசிகர் மன்றத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ரஜினிகாந்த் வருகிறேன், வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அவர் வரவில்லை. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றார்.