Published:Updated:

தூத்துக்குடி: ``ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - துரை வைகோ

துரை வைகோ

”ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கிட முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்” என ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: ``ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - துரை வைகோ

”ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கிட முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்” என ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Published:Updated:
துரை வைகோ

தூத்துக்குடியில் ம.தி.மு.க மாநில தொண்டரணி இணைச் செயலாளர் பேச்சிராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய பின் ம.தி.மு.கவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலுள்ள பெரும்பாலான மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்களாகவே உள்ளன. அதனால், மின் உற்பத்திக்கு முக்கியத் தேவையான நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என மத்தியரசு முடிவு எடுத்தது. தற்போது நிலக்கரியால் மின்பற்றாகுறை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து, ’கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல், தற்போது நிலக்கரி இறக்குமதி செய்யலாம் என்ற முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு காலம் கடந்தது.

செய்தியாளர் சந்திப்பில் துரை வைகோ
செய்தியாளர் சந்திப்பில் துரை வைகோ

இருந்த போதும் நிலக்கரியை கொண்டு செல்வதற்கு போதுமான சரக்கு ரயில்கள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மின் பற்றாக்குறை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களில் உள்ளது. மின் பற்றாக்குறைக்கு மத்தியரசுதான் காரணம். பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பதுபோல் தமிழக அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகத்தில் தற்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. மின் பற்றாக்குறை இன்னும் 3 வாரத்தில் முடிவுக்கு வரலாம். தமிழகத்தில் கொரோனா உச்சம், நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொடுத்த வாக்குறுதிளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளார் இன்னும் நான்காண்டுகள் உள்ள நிலையில் மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். நீட் தேர்வு , ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை என எந்த முடிவானாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்ற தீர்மானக் கோப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது ஜனநாயக படுகொலை.

செய்தியாளர் சந்திப்பில் துரை வைகோ
செய்தியாளர் சந்திப்பில் துரை வைகோ

தமிழக ஆளுநர் ரவி, பா.ஜ.கவின் ஆளுநராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உறுதியாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக இயங்காததால், நிலத்தடி நீர்,காற்று சுத்தமாக இருப்பதாக ஆலையைச் சுற்றியுள்ள மக்களே என்னிடம் கூறியுள்ளார்கள். அதனால் மக்கள் பயப்பட தேவையில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க முதல்வர் அனுமதிக்க மாட்டார்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism