Published:Updated:

அமித் ஷாவின் காலணியைக் கையால் எடுத்துக்கொடுத்த பாஜக மாநிலத் தலைவர் செயலுக்கு டிஆர்ஸ் சாடல்!

காலணியை கையால் எடுத்துக்கொடுத்த பாஜக மாநிலத் தலைவர்

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் காலணி தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவர் கையால் எடுத்துக்கொடுத்ததற்கு ராமா ராவ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெலங்கானா மாநிலம், செகந்தரபாத்திலுள்ள உஜ்ஜயினி மகாகாளி மாதா கோயில் தரிசனத்துக்கு இன்று வந்திருந்தார். கோயிலில் அமித் ஷாவின் காலணியை தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவர் பந்தி சஞ்சய் குமார் கையில் தூக்கிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது. இந்த வீடியோவை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் அமைச்சரும், முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனுமான ராமாராவ் பகிர்ந்து பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தெலங்கானாவுக்குப் பெருமை என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் ராமாராவ், ``குஜராத்தின் அடிமைகளை மாநில மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தெலங்கானாவின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் எந்தவித முயற்சியையும் முறியடிப்போம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

காலணியை கையால் எடுத்துக்கொடுத்த பாஜக மாநிலத் தலைவர்
காலணியை கையால் எடுத்துக்கொடுத்த பாஜக மாநிலத் தலைவர்

கோயிலுக்கு வெளியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வீடியோ குறித்து பா.ஜ.க தரப்பில் இன்னும் எந்த பதிலும் இல்லை.

தெலங்கானாவில் நலகொண்டா மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் பிரசாரத்துக்காக அமித் ஷா, தெலங்கானா வந்திருந்தபோது கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் இப்படி நடந்திருக்கிறது.

முன்னதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜகோபால் ரெட்டி பா.ஜ.க-வில் இணைந்தார். தெலங்கானாவில் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ``பா.ஜ.க-வில் ராஜகோபால் இணைந்திருப்பது சந்திரசேகர் ராவ் அரசை அப்புறப்படுத்துவதற்கான தொடக்கம்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு, மாநில மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டது. சந்திரசேகர் ராவ் அரசு குடும்ப அரசியலை ஊக்குவிக்கிறது. பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவதாகச் சொன்னார்கள். ஆனால் செய்யவில்லை" என்று குற்றம்சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் கூட்டும் எந்தக் கூட்டத்துக்கும் சந்திரசேகர் ராவ் செல்வதில்லை. தெலங்கானாவுக்கு பிரதமர் வந்தாலும் அவரை வரவேற்கச் செல்வதில்லை. இருவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்துவருகிறது என்கிறார்கள்.