Published:Updated:

சீர்காழி: கொரோனா தடுப்பூசிப் பணியில் சிறப்பான செயல்பாடு; ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது
ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது

சீர்காழியில் கொரோனா தடுப்பூசிப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக ஒன்றியக்குழுத் தலைவருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விருது வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசிப் பணியில் மாவட்டத்திலேயே சிறப்பாகப் பணியாற்றிய கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது வழங்கப்பட்டிருப்பது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது
ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளில் சுமார்  200 கிராமங்கள் இருக்கின்றன. அனைத்துக்  கிராமங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வட்டார சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வட்டார சுகாதாரத்துறையினர் ஊராட்சிப் பிரதிநிதிகளுடன் இணைந்து அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. கிராமங்களில் உள்ளவர்களை அந்தந்த முகாம்களுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருவது; மாற்றுத்திறனாளிகள், முதியோர்களைத் தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச்செல்வது; தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு மீண்டும் அவர்களை வீட்டுக்குக் கொண்டு வந்துவிடுவது; மாவட்டத்திலேயே கொரோனோ தடுப்பூசி குறித்த தீவிர பிரசாரப் பணி மேற்கொண்டது... எனப் பல பணிகளைச் செய்திருக்கிறார் கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ். அவரைப் பாராட்டி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த  கடைக்கண் விநாயகநல்லூர், கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த புதுப்பட்டினம், திருமுல்லைவாசல், கொடியம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளிலுள்ள அனைவருக்கும் 100 சதவிகித கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஜெயபிரகாஷ்  தீவிரமாகச் செயல்பட்டார்.

ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது
ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது

இதைப் பாராட்டி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெயபிரகாஷுக்கு மாவட்டத்திலேயே சிறப்பாக கொரோனா ஒழிப்புப் பணியில் பணியாற்றியமைக்கான விருதையும் சான்றிதழையும் மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கியிருக்கிறார். அவரோடு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமாருக்கும் சிறப்பாக பணியாற்றியதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு