Published:Updated:

ஜம்மு - காஷ்மீர் முதல் கார்கில் வரை... சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!

சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!

சுதந்திர இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் சந்தித்த போர்கள் பற்றி அலசுகிறது இந்த சிறப்புக் கட்டுரை..!

ஜம்மு - காஷ்மீர் முதல் கார்கில் வரை... சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!

சுதந்திர இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் சந்தித்த போர்கள் பற்றி அலசுகிறது இந்த சிறப்புக் கட்டுரை..!

Published:Updated:
சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!
ஜம்மு - காஷ்மீர் போர் (1947, அக்டோபர் 22 - 1948, டிசம்பர் 31)

சுதந்திரம் பெற்றோம் என மகிழ்ந்துகொண்டிருந்த தறுவாயில், மீண்டும் போர்ச் சூழல் என்பது பேரிடியைத் தந்தது. அப்போது காஷ்மீர் நிலப்பகுதி இந்தியாவுக்கா, பாகிஸ்தானுக்காக என்ற கருத்து மோதல் ஏற்பட்டது.. காஷ்மீரைக் கைப்பற்ற முனைந்த பாகிஸ்தான், தங்கள் பகுதியிலுள்ள பழங்குடி இன மக்களைத் தூண்டி காஷ்மீர் மக்களுக்குத் தொல்லை கொடுத்தது. அந்தச் சூழலில் சிக்கல் வரக் கூடாது என நினைத்த காஷ்மீர் மன்னர் ஹரி சிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொள்வதற்கு இசைவு தெரிவித்தார். எனவே, காஷ்மீருக்கு ஆதரவாக இந்தியா போரில் இறங்கியது. இந்தப் போர் 1947 அக்டோபர் 22-ல் தொடங்கி 1948 டிசம்பர் 31 வரை நடைபெற்றது.

சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!
சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!

பின்னர் ஐ.நா சபை தலையிட்டு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. போரின் முடிவில் பாகிஸ்தான், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலப் பகுதிகளைத் தன்வசப்படுத்திக்கொண்டது. இந்தியா, காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இந்தப் போரில் இந்தியா தரப்பில் சுமார் 1,500 வீரர்கள் இறந்ததாக இந்திய அரசு தெரிவித்தது. பாகிஸ்தான் தரப்பில் சுமார் 6,000 வீரர்கள் இறந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இந்தியா - சீனா போர் (1962, அக்டோபர் 20 முதல் நவம்பர் 20 வரை)

இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டை சீனா ஏற்க மறுத்து முரண்டுபிடித்தது.

1962, செப்டம்பர் மாதம் இந்திய ராணுவப் படைத் தளபதி இந்திய எல்லையில் சுருள்வேலிகள் அமைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு சீனாவை மேலும் எரிச்சலூட்டியது. எனவே,1962, அக்டோபர் 20-ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையைக் கடந்து தாக்குதலை நிகழ்த்தியது. இந்தியாவும் போரில் இறங்கி தக்க பதிலடி கொடுத்தது.

சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!
சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!

சரியாக ஒரு மாதம் கழித்து சீனா போர் நிறுத்தம் செய்தது. இந்தப் போரில் சுமார் 1,300 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது. சீன வீரர்கள் சுமார் 720 பேர் இறந்ததாக சீன அரசாங்கம் தெரிவித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இரண்டாம் காஷ்மீர் போர் (1965, ஆகஸ்ட் 5 - 1965, செப்டம்பர் 22)

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது போரும் காஷ்மீரை மையமிட்டே மூண்டது. 1962-ல் நிகழ்ந்த இந்தியா - சீனா போரைப் பகுமானமாக கவனித்துவிட்டு, இந்தியாவை எளிதில் வீழ்த்திவிடலாம் என பாகிஸ்தான் எண்ணியது. 1965-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி சுமார் 33,000 பாகிஸ்தான் வீரர்கள் காஷ்மீர் உள்ளூர்வாசிகளைப்போல உடை அணிந்து காஷ்மீருக்குள் ஊடுருவினர். இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க போர்க்களம் கண்டது. 17 நாள்கள் நடந்த இந்தப் போரில் பேரிழப்புகள் அரங்கேறின.

சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்
சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்

சோவியத் யூனியன், அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து இந்தப் போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் இந்திய வீரர்கள் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் சுமார் 3,800 பேர் கொல்லப்பட்டனர்.

சோலா மோதல் (Cho La Clash) - (1967, அக்டோபர் 1 - அக்டோபர் 10)

சீன ராணுவம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிக்கிம் மாநிலத்துக்குள் மெல்ல ஊடுருவத் தொடங்கியது. இதன் விளைவாக அக்டோபர் 1, 1967 அன்று இரண்டாம் இந்திய-சீனப் போர் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற இந்தப் போரில் ஆக்ரோஷமான தாக்குதல்கள் நிகழ்ந்தன.

சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!
சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!

இப்போரில் இந்திய வீரர்கள் 88 பேர் கொல்லப்பட்டனர். சீன வீரர்கள் 340 பேர் கொல்லப்பட்டனர்

வங்கதேசப் போர் (1971, டிசம்பர் 3 - டிசம்பர் 16)

சுதந்திரத்துக்குப் பிறகு, இன்றைய பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும், இன்று தனி நாடாக இருக்கும் வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தானுடன் இணைய மறுத்தது. தன்னைத் தனி நாடாக அறிவிக்கும்படி கோரிக்கை வைத்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்தக் கோரிக்கைக்கு முழு ஆதரவு அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் 1971, டிசம்பர் 3-ல் `ஆபரேஷன் செங்கிஸ் கான்’ என்ற பெயரில் இந்தியாவின் விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தயது.

இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க முனைந்து போரில் இறங்கியது. தரைவழி, வான்வழி, கடல்வழி என்று மும்முனைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன. கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசமாகப் பரிணமித்தது.

சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!
சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!

இந்தப் போரில் இந்திய வீரர்கள் சுமார் 2,500-3,500 பேர் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது. பாகிஸ்தான் வீரர்கள் 9,000 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. மேலும் வங்கதேசப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

கார்கில் போர் (1999, மே -ஜுலை)

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் மேற்கொண்ட அணு ஆயுதச் சோதனைகள் நாட்டு எல்லையில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தின. இந்தப் பதற்றத்தைத் தணிக்கவும் இரு நாடுகளும் அமைதியான முறையில் இணங்கியிருக்கவும் உலக நாடுகள் வலியுறுத்தின. எனவே, இரு நாடுகளும் பிப்ரவரி 1999-ல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

இந்த உடன்படிக்கையை மீறி ,1999 மே மாதத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், காஷ்மீர் பிரிவினைவாதப் போராளிகளும் எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவி கார்க்கிலைக் கைப்பற்றினர். கார்கிலை மீட்க இந்தியா போரில் இறங்கியது.

இந்திய ராணுவம் `ஆபரேஷன் விஜய்’ என்ற மிஷனை திட்டமிட்டுச் செயல்படுத்தியது. பாகிஸ்தான், தனக்கும் கார்கில் ஆக்கிரமிப்புக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என முதலில் கூறியது. போரில் உயிரிழந்த வீரர்கள் வைத்திருந்த ஆவணங்களின் மூலம் பாகிஸ்தான் மறைமுகமாகக் காய்நகர்த்தியது அம்பலப்படுத்தப்பட்டது.

சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!
சுதந்திர இந்தியா சந்தித்த போர்கள்!

இந்தப் போர் இரண்டு மாதங்கள் நீடித்தது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த டைகர் ஹில், திரஸ் ஆகிய பகுதிகளை இந்தியா மீட்டது. உலக நாடுகளின் பேச்சுவார்த்தைகளின் மூலமாகவும், பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின.

இந்தப் போரில் இந்திய வீரர்கள் சுமார் 527 பேர் மரணமடைந்ததாக இந்திய அரசு குறிப்பிடுகிறது. பாகிஸ்தான், தன்னுடைய வீரர்கள் சுமார் 3,000 பேர் மரணமடைந்ததாக கூறுகிறது. திரஸ் பகுதியிலுள்ள தோலோலிங் மலையடிவாரத்தில் இந்தப் போரின் நினைவுச் சின்னம் நிறுவப்பட்டது. கார்கில் போர் பற்றி ஏராளமான திரைப்படங்களும் நாடகங்களும் எடுக்கப்பட்டன.

இந்தியா இப்படிப் பல போர்களைச் சந்தித்திருக்கிறது. எல்லைப் பிரச்னையை அதாவது நிலவுடைமையை மையமிட்டே இந்தியா போர் சூழல் பூண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகள் போராடி சுதந்திரம் பெற்றோம் என அக மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா கடந்து வந்த பாதையை வருடா வருடம் நினைவுகூர்ந்துகொண்டிருக்கிறோம். அது போன்று சுதந்திரம் பெற்ற பின்பும் இந்தியா கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கவேண்டியது மிக அவசியமானது!