Published:Updated:

சிவசேனா: அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மனைவிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே மனைவி!

கணவருடன் ரேஷ்மி தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் மனைவிகளை தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே மனைவி ஈடுபட்டுள்ளார்.

சிவசேனா: அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மனைவிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே மனைவி!

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் மனைவிகளை தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே மனைவி ஈடுபட்டுள்ளார்.

Published:Updated:
கணவருடன் ரேஷ்மி தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் சிவசேனா முழுமையாக ஈடுபட்டுள்ளது. சிவசேனாவச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 40 பேர் அஸ்ஸாம் மாநிலத்தில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தங்கியிருக்கின்றனர். இதனால் சிவசேனாவில் மிகப்பெரிய பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்கள் போனால்கூட பரவாயில்லை... கட்சியையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே முழு உறுதியோடு செயல்பட்டு வருகிறார். எனவேதான் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு பல வழிகளில் நெருக்கடி கொடுப்பதோடு, அவர்களை தங்களது பக்கம் இழுக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார். இதில் உத்தவ் தாக்கரே குடும்பமே ஈடுபட்டுள்ளது என்று கூறலாம்.

மும்பை தானேயில் ஷிண்டே ஆதரவாளர்கள்
மும்பை தானேயில் ஷிண்டே ஆதரவாளர்கள்

உத்தவ் தாக்கரே மனைவி ரேஷ்மி தாக்கரே தற்போது வீட்டில் இருந்துகொண்டே அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் மனைவிகளை தொடர்புகொண்டு பேசி வருகிறார். `உங்கள் கணவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் சிவசேனாவுக்கு அழைத்து வாருங்கள்' என அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் மனைவிகளிடம் ரேஷ்மி தாக்கரே போனில் பேசி வருகிறார். அதோடு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு பயத்தை காட்டவேண்டும் என்பதற்காக அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொடுக்கப்பட்ட பாதுகாப்பை அரசு திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கிடையே இன்னும் எத்தனை நாள்களுக்கு பதுங்கி இருக்க போகிறீர்கள் என்று சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

16 எம்.எல்.ஏ-க்களுக்கு துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பதையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் வரும் 30-ம் தேதி வரை அஸ்ஸாமில் தங்கியிருக்க சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தாலும், நாங்கள் இன்னும் சிவசேனாவில்தான் இருக்கிறோம் என்றும், எங்களது அணியை சிவசேனா பாலாசாஹேப் என்று அங்கீகரிக்க0வேண்டும் என்றும் அதிருப்தி கோஷ்டியின் செய்தித் தொடர்பாளர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார். மற்றொரு புறம் சட்டமன்றத்தில் நடக்கவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவோம் என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே உறுதியாக தெரிவித்துள்ளார். சரத் பவாரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.