Published:Updated:

`அன்று `பாபா’... இன்று `ஜெய் பீம்’; பணத்துக்காகத்தான் மிரட்டுகிறார்கள்!’ - எம்.பி பாரிவேந்தர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்
பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்

``தங்களது இருப்பைத் தெரிவித்துக்கொள்ளவும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் அடிக்கடி அவர்களைப் பற்றிப் பேச வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர்” என்கிறார் பாரிவேந்தர் எம்.பி

`` `ஜெய் பீம்’ பட விவகாரத்தில் பணத்துக்காகத்தான் சிலர் மிரட்டுகிறார்கள். ஒரு புகைப்படத்தைவைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்... அவர்களுக்கு வேறு பிரச்னை கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். இதேபோல், `பாபா’ படத்துக்கும் நடந்திருக்கிறது" என்று பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தேவாலயப் பணிகளுக்காகத் தனது சொந்த நிதியை வழங்கினார்.
தேவாலயப் பணிகளுக்காகத் தனது சொந்த நிதியை வழங்கினார்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கோயில்கள், தேவாலயப் பணிகளுக்காகத் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.66 லட்சத்தை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``புதிய கோயில்கள் கட்டவும், பழைய கோயில்களைப் புனரமைக்கவும், பழுதான நிலையில் உள்ள தேர்ச் சக்கரங்களைச் சீர்செய்யவும் தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்டு அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிவருகிறேன். திராவிட இயக்கத்தினர்கூட இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

எம்.பி பாரிவேந்தர்
எம்.பி பாரிவேந்தர்

ஒரு குடும்பம், ஒரு கட்சி மட்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவது ஜனநாயகம் அல்ல. எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைத்தால்தான் ஜனநாயகம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் ஒருசில காரணங்களால் கூட்டணி வைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. வரும் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்து நிற்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிப்பது நிற்கவில்லை. மக்களுக்கும் நல்லது கிடைப்பதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நல்லவர்கள் யார் என்று பார்த்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார். அவர் பேசியபோது ஓர் இடத்தில்கூட தி.மு.க என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்
பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்

பிறகு, அடுத்தடுத்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். ``திமுக-வுடன் எங்களுக்கு எந்த நட்பும் இல்லை, உறவும் இல்லை, அவர்களை எதிர்க்கவும் இல்லை” என்றார்.

``கொஞ்ச நாளைக்கு ஊர்ப்பக்கம் வராதனு சொல்றாங்க"- ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாகப் பேசிய ’சந்திரலேகா’அருண்

`ஜெய் பீம்’ பட விவகாரம் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்விகேட்டபோது. ``பணத்துக்காகத்தான் மிரட்டுகிறார்கள். ஒரு புகைப்படத்தைவைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்... அவர்களுக்கு வேறு பிரச்னை கிடைக்கவில்லை. இறுதியில் பணத்தைத்தான் பிரதானமாக வைக்கிறார்கள். இது அவர்களுக்குப் புதிதல்ல.

எம்.பி பாரிவேந்தர்
எம்.பி பாரிவேந்தர்

ஏற்கெனவே `பாபா’ படத்துக்கு இதேபோல் செய்திருக்கிறார்கள். தங்களது இருப்பைத் தெரிவித்துக்கொள்ளவும், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் அடிக்கடி அவர்களைப் பற்றிப் பேச வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர்” என்று எந்தக் கட்சி எனக் குறிப்பிடாமல் பேசி முடித்தார் .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு