Published:Updated:

தேனி: குமாரை `கட்’ செய்த தேனி எம்.பி! - மத்திய அமைச்சர் பதவிக்குப் பெயர் மாற்றமா?

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

தனது பெயரிலுள்ள `குமார்' என்ற வார்த்தையை நீக்கியிருக்கிறார் தேனி எம்.பி. மேலும், பெயரின் ஆங்கில எழுத்துகளிலும் மாற்றம் செய்திருக்கிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத் குமார், தனது பெயரிலுள்ள `குமார்’ என்ற வார்த்தையை நீக்கியிருக்கிறார். மேலும், அவரது பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது, `P.RAVEENDRANATH' என எழுதிவந்தார். இதனை, `RAVINDHRANATH' என மாற்றம் செய்திருக்கிறார். இது தொடர்பாக கெஜட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

இவருடைய தந்தையும், துணை முதல்வருமான ஓ.பன்னிர்செல்வம், அவருடைய தந்தை வைத்த `பேச்சிமுத்து’ என்ற பெயரை மாற்றி, `பன்னீர்செல்வம்’ என வைத்துக்கொண்டார். தற்போது, அவருடைய மகனும், தந்தைவைத்த பெயரில் மாற்றம் செய்திருக்கிறார்.

தேனி: ஓ.பி.எஸ்-ஸுடன் மோதும் தங்க தமிழ்ச்செல்வன்? - தி.மு.க-வில் புதிய பொறுப்பு

`ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம்?’ என்று ரவீந்திரநாத்தின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.``நியூமராலஜி பார்த்து பெயரில் மாற்றம் செய்திருக்கிறார். டெல்லி வட்டாரத்திலுள்ள அவருடைய அரசியல் நண்பர்கள் பெயர் மாற்றம் பற்றி அவரிடம் அறிவுறுத்தியிருக்கலாம். மேலும், அவருடைய அரசியல் நண்பர்கள் அவரை `ரவீந்திரநாத் ஜி’ என்றே அழைக்கின்றனர். குமாரை விட்டுவிடுவதால், அதை `கட்’ செய்யக்கூட நினைத்திருக்கலாம்.

கெஜட்டில் வெளியிடப்பட்ட பெயர் மாற்றம்
கெஜட்டில் வெளியிடப்பட்ட பெயர் மாற்றம்
`ஒரே நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்; எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு!’-அ.தி.மு.க-வில் மாறும் காட்சிகள்

சரியான காரணம் தெரியவில்லையென்றாலும், பெயர் மாற்றம் என்பது சில நன்மைகளைத் தேடித்தரும். அந்த வகையில், நீண்டநாள் எதிர்பார்ப்பான மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம். நாங்களும் அதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு