Published:Updated:

``ஊராட்சிகளில் நிதித் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை" - அமைச்சர் பெரியகருப்பன்

அமைச்சர் பெரியகருப்பன்

``ஊராட்சிகளில் நிதித் தட்டுப்பாடு என்பது முற்றிலுமாக இல்லை. எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் கூறுங்கள்" என்று மயிலாடுதுறையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு  கடனுதவிகளை வழங்கிய, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

``ஊராட்சிகளில் நிதித் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை" - அமைச்சர் பெரியகருப்பன்

``ஊராட்சிகளில் நிதித் தட்டுப்பாடு என்பது முற்றிலுமாக இல்லை. எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் கூறுங்கள்" என்று மயிலாடுதுறையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு  கடனுதவிகளை வழங்கிய, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

Published:Updated:
அமைச்சர் பெரியகருப்பன்

மயிலாடுதுறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஊரக  வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 138 உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.2.76 கோடி கடனுதவியும், 442 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.15.5 கோடி கடனுதவிகளையும் வழங்கினார்.

அமைச்சர் பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பன்

தொடர்ந்து அவர் பேசுகையில், "பெண்களின் முன்னேற்றத்துக்காக முதன்முதலில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். சமூகநலத்துறையில் இருந்த மகளிர் சுயஉதவிக் குழுப் பிரிவை ஊரக வளர்ச்சித்துறையோடு இணைத்தவர் கருணாநிதி. அவர் வழியிலேயே தமிழ்நாடு முதல்வர் பெண்களின் வளர்ச்சியில் முனைப்போடு பல்வேறு திட்டங்கள் வாயிலாக பெண்களை ஊக்கப்படுத்திவருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற ஆண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.300 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.303 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சென்ற ஆண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.21,260 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 25,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், "ஊராட்சிகளுக்குக் கடந்த 10 ஆண்டுகளைவிட தற்போது குறைவான நிதி அளிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே?" என்ற  கேள்விக்கு, 

``நிதித் தட்டுப்பாடு என்பது முற்றிலுமாக இல்லை. எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் கூறுங்கள்" என்றார்.

அமைச்சர் பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பன்

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்ஷினி, கூடுதல் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் மணிஸ்,  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.