Published:Updated:

திருச்செந்தூர்:`ரஜினி பேச்சில் உண்மை இருக்கிறது; நியாயம் இருக்கிறது!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

``தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிவந்த தகவலுக்குத்தான் ரஜினி விளக்கம் அளித்திருக்கிறார். அவர் பேச்சில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அரசுப் பள்ளி மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த அரசாணையை பிறப்பித்திருக்கிறது. ஆனால், அரசு இந்த இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எங்களின் போராட்டம்தான் காரணம் எனக் கூறி தனக்கு விளம்பரம் தேடியிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்.

`அறிக்கை என்னுடையது அல்ல; தகவல்கள் உண்மை!’ - மௌனம் கலைத்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து வெளிப்படைத் தன்மையுடன்தான் பேசியிருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவலை அடுத்து, உண்மைநிலையை வெளிப்படுத்தவே கருத்து சொல்லியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் 70 வயதைக் கடந்த பின்னரும், கதாநாயகனாக நடிக்ககூடிய அளவுக்குத் திகழ்ந்துவருகிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இன்றைய இளம் நாயகிகள்கூட அவருடன் நடிக்க ஆவலாக இருக்கிறார்கள். ரஜினியின் பேச்சில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. திடீரென கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றி வர அவரது உடல் நிலை ஒத்துவருமா என்று அவரது நண்பர்கள் அச்சப்படுகிறார்கள்.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அவருக்குக் கூறிய அறிவுரைகள் குறித்த தகவல் அனைத்தும் உண்மை எனச் சொல்லியிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அவரது அறிக்கையாக வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் புதிய கட்சி தொடங்கி, அரசியலைச் சந்திக்க வேண்டுமென்றால், மாநிலம் முழுவதும் சுற்றி வந்து மக்களைச் சந்திப்பதென்பது கடினம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதற்கு அவரின் உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது அவருக்குத்தான் தெரியும். அதற்காக ரஜினி கட்சி தொடங்க பயப்படுகிறார் என்ற அர்த்தமல்ல. மொத்தத்தில் ரஜினியின் எண்ணம் நல்ல எண்ணம். அவர் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்; வராவிட்டாலும் ஏற்றுக்கொள்வோம். அவ்வாறு அவர் கட்சி தொடங்கினால் நல்லாட்சி கொடுப்பவர்களை மட்டுமே ஆதரிப்பார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு