Published:Updated:

`நூறு நாள் ஆட்சியில் சாதனை எதுவுமில்லை; எல்லாமே வேதனைதான்!' - திருமாவளவன்

கா.முரளி

இந்த நூறு நாள்களில் நாட்டு மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. இந்த நூறு நாள் ஆட்சியில், சாதனைகள் என்று எதுவும் இல்லை. எல்லாமே மக்களுக்கு வேதனைதான்.

Thirumavalavan
Thirumavalavan ( கா.முரளி )

திருவண்ணாமலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் வி.சி.க தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று 100-நாள்கள் ஆகின்றன. இந்த நூறு நாள்களில் நாட்டு மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. இந்த நூறு நாள் ஆட்சியில், சாதனைகள் என்று எதுவும் இல்லை. எல்லாமே மக்களுக்கு வேதனைதான்.

'லண்டன் கூட்டத்தில் நிதி கேட்டேனா?' - சலசலப்புக்கு திருமாவளவன் பதில்

குறிப்பாக, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முத்தலாக் தடை சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தது, என்.ஐ.ஏ சடத்தை தங்களுக்குச் சாதகமாக வலிமைப்படுத்திக் கொண்டது போன்றவையே சான்று.

``சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமணியை மேகாலயா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்தது பா.ஜ.க அரசின் பழிவாங்கும் செயலாக இருக்கிறது. காரணம், தஹில்ரமணி குஜராத்தில் நீதிபதியாக இருந்தபோது மோடிக்கும், அமித் ஷாவுக்கும் எதிராகச் செயல்பட்டார் என்ற நோக்கில் அவரை இடமாற்றம் செய்யப்படுவதாகவே இதைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

Thirumavalavan
Thirumavalavan
கா.முரளி

சென்னை உயர் நீதிமன்றம் இந்திய அளவில் பெரிய நீதிமன்றங்களில் ஒன்று. அப்படி இருக்கும்போது, மூன்று நீதிபதிகள் மட்டுமே இருக்கும் மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது நிச்சயமாகப் பழிவாங்கும் நோக்கமே” என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,``கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.சி பள்ளிகளின் பாடப்புத்தகத்தில் தலித் மக்களையும், முஸ்லிம் மக்களையும் இழிவுபடுத்துவது போன்று பாடங்களை அமைத்துள்ளார்கள்.

Thirumavalavan
Thirumavalavan
க.முரளி

இவற்றிற்கு முக்கிய காரணமே பா.ஜ.கதான். கல்வியிலும் காவி அரசியலை நடத்துகிறது பா.ஜ.க. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் கண்டித்து வருகின்ற 12-ம் தேதி எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கும்” என்றார்.