Published:Updated:

"குனிந்து போகும் அளவுக்கு பலவீனம் இல்லை" - 'தோழமை சுட்டுதல்' குறித்து திருமா!

திருமா

திருமா; கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, புதுச்சேரிக்கு ஷிஃப்ட்டான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இணையம் வழியாகக் கட்சிப் பணிகளை கவனிக்கிறார். திருமா -விடம் சில கேள்விகள்

"குனிந்து போகும் அளவுக்கு பலவீனம் இல்லை" - 'தோழமை சுட்டுதல்' குறித்து திருமா!

திருமா; கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, புதுச்சேரிக்கு ஷிஃப்ட்டான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இணையம் வழியாகக் கட்சிப் பணிகளை கவனிக்கிறார். திருமா -விடம் சில கேள்விகள்

Published:Updated:
திருமா

''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கேற்ற ஆங்கிலப் பெயர் மாற்றம் போன்ற பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ச்சியாகப் பாராட்டிவருகிறீர்கள்... ஒருவேளை வி.சி.க., அ.தி.மு.க-வை நோக்கி நகர்கிறதா?''

''எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காகவே ஆளுங்கட்சியின் அத்தனை செயல்பாடுகளையும் விமர்சிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களைப் பாராட்டலாம். அது நம்முடைய கடமையும்கூட. அந்த அடிப்படையில்தான் சில விஷயங்களை வரவேற்று, பாராட்டினோம். அதில், அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை.''

''பா.ஜ.க-வில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகன் தலைவராகியிருக்கிறார்; அதே சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தற்போது தி.மு.க-விலிருந்து விலகி, பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கிறார். இதற்கிடையே தி.மு.க-வைக் கண்டித்து, பட்டியல் சமூக மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சம்பவங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பட்டியல் சமூக மக்களின் வாக்குகளைக் குறிவைத்து காய் நகர்த்துகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?''

''இதனால் மட்டுமே பட்டியல் சமூகம் பா.ஜ.க-வின் பின்னாலோ, அ.தி.மு.க-வின் பின்னாலோ போய்விடும் என்று நினைப்பது கற்பனாவாதம். தி.மு.க-வில் தனிநபர்கள் சிலர், பட்டியல் சமூக மக்களின் மனதைப் புண்படுத்தும்படி பேசியதால் ஒட்டுமொத்தமாக அதை தி.மு.க-வின் கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

ஒருவேளை தி.மு.க தலைவர் அப்படிப் பேசியிருந்தால், அதை தி.மு.க-வின் கருத்தாக எடுத்துக்கொள்வதில் ஒரு நியாயமுண்டு. தனிப்பட்ட நபர்கள் தவறாகப் பேசும்போது, தனிப்பட்ட முறையில்தான் அதைக் கண்டிக்க முடியும்; விமர்சிக்க முடியும். அதுதான் நேர்மையான அரசியலாக இருக்க முடியும்.''

''ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு திருச்சி 'தேசம் காப்போம்' மாநாட்டில் கடுமையாக எதிர்வினையாற்றிய திருமாவளவன், தயாநிதி மாறனின் பேச்சுக்கு 'தோழமை சுட்டலோடு' நின்றுகொள்ளக் காரணம், அவர் கருணாநிதியின் குடும்ப வாரிசு என்பதாலா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''தயாநிதி மாறனின் பேச்சு எனக்குள்ளும் வலி உண்டாக்கியதால்தான் உடனடியாக எதிர்வினையாற்றினேன். சில நாள்களுக்குப் பிறகு, பலர் என்னை விமர்சித்த பிறகு நான் கருத்துச் சொல்லியிருந்தால் அது விமர்சனத்துக்குரியது. அதேவேளை, தயாநிதி மாறனின் பேச்சை நான் கேட்டேன். அது உள்நோக்கத்தோடு சொல்லப்பட்ட கருத்து இல்லை.

அதோடு, என் ட்விட்டர் பதிவைப் பார்த்துவிட்டு, அவரே என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு. 'நான் உள்நோக்கத்துடன் பேசவில்லை. ரியலி ஐ ஆம் ஸாரி' என விளக்கம் தந்தார். உள்நோக்கத்துடன், ஒரு சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் எனப் பேசியிருந்தால் நிச்சயமாக நாம் அமைதிகாக்க முடியாது. எதற்காகவும், எந்த நிலையிலும் வளைந்துபோகும், குனிந்து போகும் அளவுக்கு திருமாவளவன் பலவீனமானவன் இல்லை.''

"குனிந்து போகும் அளவுக்கு பலவீனம் இல்லை" - 'தோழமை சுட்டுதல்' குறித்து திருமா!

''அப்படியென்றால், தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதி பேசியதில் உள்நோக்கம் இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?''

''அப்படிச் சொல்லவில்லை. ஆர்.எஸ்.பாரதி கொள்கை சார்ந்து ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அரசியல் அமைப்பில் உறுதி செய்தது அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதைத்தான் நான் பேரணியில் தெளிவுபடுத்தினேன்.''

- விரிவான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க > "பா.ஜ.க., பா.ம.க இருக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்கமாட்டோம்!" - திருமா திட்டவட்டம் https://bit.ly/3dftuU9

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV