Published:Updated:

முதல்வர் எடப்பாடி வந்தவுடன்தான் முழுமையா தெரியும்?- எதைக் குறித்து சொல்கிறார் திருமாவளவன்

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

``மோடி அரசு பலரை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையிலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார் என ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan
thirumavalavan

நெல்லை, மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர். சொக்கலிங்கத்துக்கு நடைபெறும் பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

thirumavalavan
thirumavalavan

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததைப் பார்க்கும் பொழுது, அந்தத் திட்டத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் வட மாநிலத்திலிருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்த மக்களின் சதவிகிதத்தைப் பொறுத்து உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்பதால், இது மத்திய- மாநில அரசுகளுக்கு இத்திட்டம் சிக்கலாகும். தமிழகத்தில் தொழில் துறையில் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் வந்த பிறகுதான் அது குறித்து முழுமையாகத் தெரியும்.

மோடி அரசு பலரை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையிலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார் என ஹெச்.ராஜா பேசியிருக்கிறார். சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது அதிர்ச்சி அளிக்கிறது. சுங்கச்சாவடி தொடங்கப்பட்டது குறித்தான அறிவிப்பு பலகைகளை சுங்கச்சாவடி முன்பு வைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

இக்கட்டண உயர்வைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும். திடீரென அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதுமையாக இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செல்லவில்லை. தற்போது இந்த அரசு முடியப் போகின்ற தருணத்தில் அமைச்சர்கள் அரசு செலவில் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்களது சுற்றுப் பயணம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருந்தால் அது வரவேற்கத்தக்கது” என்றார்.