Published:Updated:

"எதிர் மனநிலையையே 'அசுரன்' ஹீரோயிசம் உருவாக்கும்" - திருமாவளவன் விமர்சனம்

திருமாவளவன்
திருமாவளவன்

பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம் போன்ற சமூகப் புரட்சிகளை மக்களுடன் இணைந்துதான் அம்பேத்கர் நிகழ்த்திக் காட்டினார்

1990-களில் பஞ்சமி நில மீட்பு இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள், தமிழ்நாட்டையே தடதடக்கவைத்தன. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சமி நிலம் குறித்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது வெற்றி மாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம். இந்தச் சூழலில், தமிழக அரசியல் களத்தில் நில உரிமைக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Jm4Mp0

''ஆதரவும் எதிர்ப்புமாக 'அசுரன்' திரைப்படம் மக்களிடையே பரவலாகப் பேசப்படுகிறதே... நீங்கள் படம் பார்த்தீர்களா?"

" 'அசுரன்' படம் வெளியான இரண்டாவது நாளே மதுரையில் பார்த்துவிட்டேன். இயக்குநர் வெற்றி மாறன், ஒரு ஜனநாயகச் சிந்தனையாளர்; தலித் மக்களின் பிரச்னைகள் பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். அதன் அடிப்படையில்தான் 'அசுரன்' திரைப்படத்தையும் அவர் இயக்கி யிருக்கிறார். திரைப்படங்களில் தனி மனிதர்களின் சாகசங்கள்தான் முன்னிறுத்தப்படுகின்றன என்பது என் தனிப்பட்ட விமர்சனம். தலித் பிரச்னைகளைப் பேசும் படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் போக்குதான் சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற பொதுமக்களின் போர்க்குணத்தை மழுங்கச் செய்துவிடுகிறதோ என்று என்னளவில் எண்ணுகிறேன்.''

'தனுஷ் மாதிரியான ஹீரோவால் மட்டுமே இதையெல்லாம் செய்ய முடியும். நம்மால் எதுவும் செய்ய முடியாது' என்றரீதியில்

''பஞ்சமி நிலம் குறித்த விழிப்புணர்வையோ, பொதுவெளியில் அது பற்றிய விவாதத்தையோ 'அசுரன்' படம் உருவாக்கவில்லை என்கிறீர்களா?''

''பஞ்சமி நில மீட்பு என்பது என்ன... மக்களுக்கான போராட்டம்தானே! அப்படியென்றால், அதைப் பற்றிப் பேசும் ஹீரோ, மக்களுடன் இணைந்துதானே அதை வென்றெடுக்க வேண்டும். அப்படி எந்தக் காட்சியும் படத்தில் இல்லையே. பஞ்சமி நிலம் குறித்த ஒரு வசனம் படத்தில் இடம்பெறுகிறது. ஆனால், பஞ்சமி நிலம் குறித்த விழிப்புணர்வு காட்சி எதுவும் படத்தில் இல்லை.''

"ஹீரோயிசம் இல்லாத திரைப்படத்தை வணிகரீதியாக வெற்றிபெறவைக்க முடியாதல்லவா?"

"ஹீரோயிசம் என்ற ஓர் அம்சம் இருந்தால்தான் திரைப்படத்தை வணிகரீதியாக வெற்றிபெறவைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், சாராயக்கடை அதிபரை வீடு புகுந்து வெட்டுகிறார் படத்தின் நாயகன். அதேபோல், தன் காதலி செருப்பு அணிந்ததை அவமானப்படுத்தியதால், செருப்பாலேயே எதிரிகளை அடிக்கிறார். 'தனுஷ் மாதிரியான ஹீரோவால் மட்டுமே இதையெல்லாம் செய்ய முடியும். நம்மால் எதுவும் செய்ய முடியாது' என்றரீதியில் ஒருவித எதிர் மனநிலையைத்தான் இது சமூகத்தில் உருவாக்கும்.

"எதிர் மனநிலையையே 'அசுரன்' ஹீரோயிசம் உருவாக்கும்" - திருமாவளவன் விமர்சனம்

இயக்குநர் வெற்றி மாறன் இந்த நோக்கத்தில் படம் எடுக்கவில்லை என்றாலும்கூட, இதுபோன்ற ஹீரோயிசம் சார்ந்த படங்கள் சமூகத்தில் எதிர் விளைவைத்தான் உண்டாக்குகின்றன என்பது என் கருத்து. பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம் போன்ற சமூகப் புரட்சிகளை மக்களுடன் இணைந்துதான் அம்பேத்கர் நிகழ்த்திக் காட்டினார். இப்படியான உண்மை நிலையை உணர்த்தும்வகையில் மக்களுடன் இணைந்த ஒரு ஹீரோயிசக் கதை என்பது தமிழ் சினிமாவின் இன்றைய சூழலில் இல்லை."

> " 'அசுரன்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஆண்ட பரம்பரை' குறித்த வசனமே பெரும்சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே?'

> "முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலப்பத்திரத்தை வெளியிட வேண்டும் என்றும் சொல்கிறாரே பா.ம.க நிறுவனர் ராமதாஸ்?"

> "இவ்வளவு காலத்துக்குப் பிறகும் பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்துவிட முடியுமா?"

> "இலங்கை இறுதிப்போரின்போது, 'தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் வி.சி.க இருந்ததை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர் என்ற விஷயத்தை அண்ணன் திருமா அப்போதே சொல்லாமல், இப்போது சொல்வது ஏன்?' எனச் சீமான் கேட்கிறாரே..."

- இந்தக் கேள்விகளுக்கு தொல்.திருமாவளவன் அளித்த விரிவான பதில்களை, ஜூனியர் விகடன் பேட்டியில் முழுமையாக வாசிக்க > "இதற்கு முன்பு பஞ்சமி நில மீட்புக்கு குரல்கொடுத்திருக்கிறாரா ராமதாஸ்?" https://www.vikatan.com/government-and-politics/news/bsnl-privatisation-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z

பின் செல்ல