Published:Updated:

`அது கார்த்தி சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து!’ -டாஸ்மாக் விவகாரத்தில் திருநாவுக்கரசர் விளக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்
காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர், `மத்திய அரசும், மாநில அரசும் எந்த விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையோ ஆலோசனைகளையோ கேட்பதில்லை’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருநாவுக்கரசர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்டோர் நேற்று இரவு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் கொரோனா மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் திருநாவுக்கரசர், ``மத்திய - மாநில அரசுகள் மக்களுக்கு ஆலோசனை மட்டும் வழங்காமல் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். மாநில அரசு குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு 1,000 ரூபாய் வழங்கினார்கள். மொத்த வாழ்வாதாரமும் முடங்கிப்போயுள்ள மக்களுக்கு இந்தப் பணம் போதுமானது அல்ல. அதனால் தமிழக அரசு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்.

`அது கார்த்தி சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து!’ -டாஸ்மாக் விவகாரத்தில் திருநாவுக்கரசர் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் உரை மோசமானது மட்டுமல்லாமல் வேதாந்தம் பேசுவதாகதான் உள்ளது. அவரின் உரையில் மக்களுக்குத் தேவையான எவ்வித அறிவிப்பும் இல்லை. அந்த உரையில், 20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மக்களை நேரடியாகச் சென்று சேரும் திட்டம் எதுவுமில்லை. மோடி அறிவித்த 20 லட்சம் கோடியில், ஒரு லட்சம் கோடி ஒதுக்கினாலே, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 வழங்கலாம்.

தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மத்திய அரசு என்ன சொன்னாலும் அதைக் கேட்கக்கூடிய செயலற்ற அரசாக உள்ளது.

மக்களைக் காக்கும் திட்டங்களுக்கு, அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசின் மற்ற திட்டங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். உடனடியாக மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், மத்திய - மாநில அரசுகள் போதுமான அளவில் மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவில்லை.

காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்.
காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்.

பூரண மதுவிலக்கு என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் பிரதான கொள்கை. `தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைதூக்கும். மதுவிலக்கு சாத்தியமில்லை. தினமும் 2 மணிநேரமாவது டாஸ்மார்க் கடைகள் திறக்க வேண்டும்’ என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து. குறைந்தபட்சம், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும்.

தி.மு.க எம்.பி-க்களை, தலைமைச் செயலாளர் அவமதித்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தற்போது அறிவித்திருக்கக் கூடாது. அதைத் தள்ளி வைக்க வேண்டும், இல்லையென்றால் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பதில் தவறு ஏதும் இல்லை.

மத்திய அரசும், மாநில அரசும் எந்த விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையோ ஆலோசனைகளையோ கேட்பதில்லை” என்றார்.

அரசு உத்தரவை மதித்து வீட்டிலேயே இருந்தேன்

அப்போது பத்திரிகையாளர்கள், `ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போதுதான் திருச்சி தொகுதிக்குள் வந்துள்ளீர்கள்' எனக் கேட்டனர்.

அதற்கு திருநாவுக்கரசர், ``நான் நேரில் வரவில்லை என்றாலும், தேவையான பணிகளை வீட்டிலிருந்தே மேற்கொண்டு வந்தேன். நான் வந்தால் தேவையற்ற கூட்டம் சேரும். பின்னால் நான்கு கார்கள் வரும். யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் கூறியுள்ளன. அதை மதித்து நானும் வெளியில் செல்லவில்லை. ஆனாலும் மக்களுக்குத் தேவையான பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

`நாங்கள் உதவி செய்வதும் ஓட்டு வாங்கத்தானே சார்...!' - திருச்சியில் கலகலத்த கே.என்.நேரு

திருநாவுக்கரசரைத் தொடர்ந்து பேசிய ஜோதிமணி, ``மத்திய அரசு 20 லட்சம் கோடி நிதி தொகுப்பை அறிவித்துள்ளார்கள். ஆனால், மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை இன்னும் தரவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு