Published:Updated:

"நம்மை அழித்துவிடுவார்களோ என்ற பயம் நிறைய..." - ஓர் ஆன்மிகவாதியின் சி.ஏ.ஏ எதிர்ப்பு!

பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சி.ஏ.ஏ-வில் சொல்லியிருக்கிறார்கள். ஏன் ஈழத் தமிழர்களை அதில் சேர்க்கவில்லை?

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்துவருகிறார் 'அய்யாவழி' சமயத்தலைவரான பாலபிரஜாபதி அடிகளார். போராட்டங்களில் கலந்துகொள்வதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறும் பாலபிரஜாபதி அடிகளாரை, கன்னியாகுமரியை அடுத்த சாமித்தோப்பில் அமைந்துள்ள அவரது இடத்தில் சந்தித்தேன்.

"ஆன்மிகவாதியான நீங்கள் திடீரென அரசியல் கருத்துகளைத் தீவிரமாகப் பேசுவது ஏன்?"

"அரசியல்தான் என் ஆன்மிகம். தவம் என்பது காட்டுக்குள்ளே, குகைக்குள்ளே போய்விடுவது என்று பலர் நினைக்கிறார்கள். இல்லறம் என்பதுதான் தவம் என்பது அய்யா வைகுண்டரின் கொள்கை. மனு தர்மத்திற்கு எதிராகப் போராடிய அய்யா வைகுண்டர், 'தாழ்ந்தகுடி என எங்களை எப்படிச் சொல்வீர்கள்?' என்று திருவிதாங்கூர் மன்னரிடம் எதிர்த்துக் கேள்வி கேட்டவர்். அவருடைய வழிவந்த நான் அரசியல் பேசக்கூடாதா?"

"சென்னையில் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு மாநாட்டில் அய்யாவழி மடாதிபதியான நீங்கள் பங்கேற்றதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"என்னை எதிர்ப்பவர்கள் அய்யாவழிக்காரர்கள் அல்ல; அரசாங்கத்தின், ஆளும் கட்சியின் சார்பு உள்ள சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். சி.ஏ.ஏ எதிர்ப்பு நிகழ்ச்சியின்போது எனக்கு உடம்பு சரியில்லை. அதனால் போகவேண்டாம் என இருந்தேன். ஆனால், நான் அந்த நிகழ்ச்சிக்குப் போனால் என்னைக் கொலை செய்துவிடுவதாகச் சிலர் மிரட்டினார்கள். எனவேதான் அதையும் பார்த்துவிடுவோம் என்ற வேகத்தில் அந்த மாநாட்டுக்குச் சென்றேன்."

வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று இவர்கள் எப்படி முடிவு செய்வார்கள்? ஏதோ ஒரு பின்புலத்தில் இதைச் செய்கிறார்கள்.

"உங்கள் தலையை எடுப்பதாக மிரட்டினர் என்று அந்த நிகழ்ச்சியில் பேசினீர்கள். உங்களை மிரட்டியது யார்?"

"இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த மறைந்த தாணுலிங்க நாடாரின் பிறந்த தின விழாவில், இந்து முன்னணி இயக்கத்தின் மாநில நிர்வாகியாக இருக்கும் ஒருவர் அப்படிப் பேசியிருக்கிறார். 'சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடச் செல்லும் பாலபிரஜாபதி மீது கல்லெடுத்து எறியுங்கள், அவரது காரை உடையுங்கள்' என்று அவர் பேசினார். அதன் பிறகு, எனது தலையை எடுக்கப்போவதாக வாட்ஸப்பில் சிலர் மிரட்டல் விடுத்தார்கள். அதுகுறித்துக் காவல்துறையில் புகார் கொடுத்தால், அதை காமெடியாகப் பார்க்கிறார்கள். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தந்தால் வேண்டாம் என்று சொல்லமாட்டேன்... தராமல் இருந்தாலும் வருத்தப்பட மாட்டேன்." விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2U2uwv0

"சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி-யை ஏன் எதிர்க்கிறீர்கள்?"

"நம்மை அழித்துவிடுவார்களோ என்ற பயம் நிறைய..." - ஓர் ஆன்மிகவாதியின் சி.ஏ.ஏ எதிர்ப்பு!

"பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சி.ஏ.ஏ-வில் சொல்லியிருக்கிறார்கள். ஏன் ஈழத் தமிழர்களை அதில் சேர்க்கவில்லை? வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று இவர்கள் எப்படி முடிவு செய்வார்கள்? ஏதோ ஒரு பின்புலத்தில் இதைச் செய்கிறார்கள். இந்தச் சட்டத்தால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனக்கும்கூட அச்சம் இருக்கிறது. நம்மை அழித்துவிடுவார்களோ, நம் தனித்தன்மை போய்விடுமோ, மீண்டும் 80 சதவிகித மக்களை அடிமைப்படுத்த அச்சாரம் போடுகிறார்களோ என்ற பயம் நிறைய இருக்கிறது."

> 'அய்யாவழி என்பது இந்து மதம்தான்' என்றும், 'அது தனி மதம் இல்லை' என்றும் உங்கள் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். அதை ஏற்கிறீர்களா?"

> "ஒரு சமயத்தலைவரான நீங்கள் 'இனிமேல்தான் பெரியாருக்கு வேலை' என்று பேசுகிறீர்களே?"

> "மடாதிபதியான நீங்கள், தமிழகத்தில் நடப்பது டெல்லி ஆட்சி என்று விமர்சிக்கிற அளவுக்கு அரசியல் பேசவேண்டிய தேவை என்ன?"

> "சாமித்தோப்பு பதியை அறநிலையத்துறை எடுப்பதில் அரசியல் தலையீடு இருக்கிறதா?"

> "தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள். அந்த நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்?"

> "மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு பற்றி...?"

> "கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உங்கள் பார்வை என்ன?"

- இந்தக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > https://www.vikatan.com/news/politics/bala-prajapathi-adigalar-talks-about-his-protests-against-caa

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு