Published:Updated:

``ஒரே இரவில் மனுஸ்மிருதியை `அரசியலமைப்புச் சட்டம்' என மோடி அறிவிப்பார்!" - திருமாவளவன்

தொல் திருமாவளவன்

``திரௌபதி முர்மு பல்வேறு பதவியிலிருந்தும் சொந்த கிராமத்தில் மின்சாரம் பெற்றுத்தர முடியாதவர்." - திருமாவளவன்

``ஒரே இரவில் மனுஸ்மிருதியை `அரசியலமைப்புச் சட்டம்' என மோடி அறிவிப்பார்!" - திருமாவளவன்

``திரௌபதி முர்மு பல்வேறு பதவியிலிருந்தும் சொந்த கிராமத்தில் மின்சாரம் பெற்றுத்தர முடியாதவர்." - திருமாவளவன்

Published:Updated:
தொல் திருமாவளவன்

மதுரை மாவட்டம், மேலவளவில் ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் 25-வது நினைவு தினத்தில் 'சமூகநீதி காப்போம்' என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தினார்கள்.

முதலில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றார்கள். இந்தக் கூட்டத்தில் மதுக்கூர் ராமலிங்கம், வீரபாண்டியன், பசும்பொன் பாண்டியன், நெல்லை முபாரக், ஹென்றி திபேன், எவிடென்ஸ் கதிர் ஆகியோர் பேசினார்கள்.

தொல் திருமாவளவன்
தொல் திருமாவளவன்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொல்.திருமாவளவன் பேசும்போது, ``தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வி.சி.க செயல்பட்டு வருகிறது. இதே புதூர் பஸ் ஸ்டாண்டில்தான் வி.சி.க தொடங்கப்பட்டது. அப்போது ஒரேயொரு சின்ன கம்பத்தில் கொடியேற்றினோம். இப்போது தமிழ்நாட்டின் அனைத்து கிராமத்திலும் நம் கொடி பறக்கிறது. இங்கு மட்டுமல்ல, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மராட்டியம் என தேசிய அளவில் பரவியுள்ளது. வி.சி.க-வின் கொடி விடுதலை கொடியாக உள்ளது.

சமூக நீதி காப்போம் பொதுக்கூட்டம்
சமூக நீதி காப்போம் பொதுக்கூட்டம்

அங்கனூர், சென்னைக்கு அடுத்து என்னை வாரி அனைத்து கொண்டது மதுரைதான். இங்கு யாரையும் தெரியாது. மதுரை எனக்கு புதிது. இங்குள்ள கலாசாரமும் புதிது. 25 வருடங்களுக்கு முன்பு அரசு வேலைக்காக மதுரைக்கு வந்தேனா, அல்லது மக்களுக்கு வேலை செய்ய வந்தேனா எனத் தெரியவில்லை. மதுரை மண்தான் என் வாழ்வை மடைமாற்றம் செய்தது, பொது வாழ்க்கைக்கு அழைத்து வந்தது.

வி.சி.க-வின் ஒவ்வொரு முழக்கத்துக்கும் பின்பும் பிரச்னையும், காரணமும் உள்ளது. அந்தளவுக்கு அடக்குமுறைகளை சந்தித்தோம். இன்று வி.சி.க-வை தவிர்த்து தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது.

மேலவளவு படுகொலை அரசியல் அறியாமையால் நடந்தது. வன்முறையை உண்டாக்க ஒரு ரௌடிபோதும். ஆனால், அமைதியை உண்டாக்க ஒரு தலைவானல் மட்டுமே முடியும். திரௌபதி முர்மு, எல்.முருகன் ஆகியோர் பாகன் கையில் இருக்கும் யானை போன்றவர்கள். பா.ஜ.க சொல்வதைத்தான் திரௌபதி முர்மு, எல்.முருகன் செய்வார்கள்.

சமூக நீதி காப்போம் பொதுக்கூட்டம்
சமூக நீதி காப்போம் பொதுக்கூட்டம்

2024-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முதலில் அரசியல் அமைப்புச் சட்டத்தில்தான் கை வைப்பார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் நாடு விடுதலைக்கு முன்பு இந்து மகாசபை என்ற அமைப்பை வைத்திருந்தார்கள்.

பெண்கள் பிள்ளைகள் பெறும் இயந்திரம், ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. மெல்ல மெல்ல ஆயுதமில்லா ஆயுதமாக வந்ததுதான் அரசியலமைப்புச் சட்டம். அரசியலமைப்பு சட்டம்தான் சமூகத்துக்கு கல்வி, பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என அனைத்தையும் கொடுத்தது.

வேத காலத்தில் பிராமணர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க முயன்றார்கள். அப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அவர்கள் இருந்தார்கள். பிராமணர்களுக்கு நாடு இல்லை என்பதால் இந்தியாவை ஒரே தேசம் ஒரே கொள்கை என்ற ஹிட்லரின் கொள்கையை பின்பற்றி கோஷமிடுகின்றனர். அப்படிதான் பணமதிப்பிழப்பு, தனியார்மயம், ஜி.எஸ்.டி, புதிய பென்சன் திட்டங்கள் உள்ளன. ஒருபுறம் சனாதான பாதுகாப்பு மற்றொரு பக்கம் கார்ப்பரேட் பாதுகாப்பு.

அனைத்து துறைகளையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டு அரசாங்கம் மது விற்பனை செய்கிறது. உழைக்கும் மக்களை வீணாக்கும் மது விற்பனை நாடு முழுவதிலும் உள்ளது. மது குடித்தால் சாதிதான் தெரியும், அரசியல் தெளிவு தெரியாது. டாஸ்மாக், இளைஞர்களின் மூளையை சிந்திக்க விடுவதில்லை, உழைப்பவனை குடிக்க வைக்கிறது.

இந்தியா மதச்சார்பற்ற தேசமாக இருக்க வேண்டும் என எண்ணியவர் மகாத்மா காந்தி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றார் காந்தி. ராம பக்தரான காந்தியை ஏன் சுட்டுக் கொன்றார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை வணங்குகிறது ஆர்.எஸ்.எஸ். நுபுர் ஷர்மா, நவின் ஜிண்டால் பேசியது ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம். இஸ்லாமியர்களை வம்பிழுக்கத்தான் இது போன்று தூண்டுதல்களை செயல்படுத்துகிறார்கள்.

வந்திருந்த கூட்டம்
வந்திருந்த கூட்டம்

தமிழ்நாட்டில் பிள்ளைகள் கையில் லேப்டாப் கொடுக்கிறோம். கர்நாடகாவில் காவி துண்டை கொடுத்து ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை கற்றுத் தருகின்றனர். இந்துக்களின் முதல் எதிரியே பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும்தான். இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இந்து மதத்துக்கு எதிராகப் பேசவில்லை பின்னர் ஏன் அவர்களை தாக்கச் சொல்கிறார்கள்? இந்துவாக பிறந்த அம்பேத்கரும், பெரியாரும் இந்து மதத்தை ஏன் குறை கூறினார்கள்? ஒரே நாளில் அம்பேத்கரின் பேச்சைக் கேட்டு 10 லட்சம் பேர் பௌத்த மதத்தை தழுவினார்கள். இங்குள்ள இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் நம் சகோதரர்கள் என்ற நிலையில் மோதலை ஏற்படுத்துகின்றனர்.

சாதி, மத மோதலைத் தூண்டி சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-தான். சமூக நீதியை காப்பதால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது. இந்திய அரசு பட்டியல் மக்களைப் புறக்கணிக்க முடியாது.

30 கோடி பட்டியலின மக்களை மோடியின் பாட்டன் நினைத்தாலும்... அமித் ஷா நினைத்தாலும் இவர்களைப் புறக்கணிக்க இயலாது.

அம்பேத்கரை தெய்வமாக ஏற்றுள்ளவர்கள் 30 கோடி பட்டியலின மக்கள். அம்பேத்கருக்கு சிலர் காலணி மாலை அணிவிக்கலாம். ஆனால், அம்பேத்கரை யாராலும் தவிர்க்க இயலாது. அம்பேத்கர் உலகளாவிய தலைவர், நாடாளுமன்றத்தில் தினந்தோறும் உச்சரிக்கப்படும் ஒரே தலைவர் அம்பேத்கர். ஏனென்றால் அவர் தொடாத துறை இல்லை. அம்பேத்கரை பட்டியல் தலைவர் என நினைத்தால் அது அரசியல் அறியாமை.

ராம்நாத் கோவிந்த் முன்பாக மோகன் பகவத் கால் மேல் கால் போட்டு அமர்ந்து நாட்டின் முதல் குடிமகனை அவமானப்படுத்தினார். சங்கர மடம் சென்ற தமிழிசையும், பொன்னாரும் சனாதானத்தை புரிந்துகொள்ளவில்லை என்றால் முருகன் எப்படி புரிந்துகொள்வார்? அவர்களுக்கு தேவை பதவிதான். 2024-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு ஒரே இரவில் மனுஸ்மிருதியை சட்டம் என்பார்கள்.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

ஒரே தேசம் என்பது ஜம்மு-காஷ்மீரை இணைப்பதற்காகத்தான், தற்போது ஜம்மு-காஷ்மீரை மூன்றாகப் பிரித்து விட்டார்கள். 2024-ல் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் மன்கி பாத்-தில் மோடி பேசும்போது மனுஸ்மிருதி் அரசியலமைப்புச் சட்டம் என அறிவித்தாலும் அறிவிப்பர். பா.ஜ.க-வினர் அ.தி.மு.க-வை ஸ்வாகா பண்ணிவிடுவார்கள். தற்போதைய அ.தி.மு.க, ஓ.பி.எஸ், இ.பி.எஸ், வி.கே.எஸ் என மூன்றாக உள்ளது. அ.தி.மு.க-வினர் அம்பேத்கர், பெரியாரை படிக்காதவர்கள். அம்மாவையும், எம்.ஜி.ஆரையும் படித்தவர்கள்.

அம்பேத்கரை படிக்காத அ.தி.மு.க-வினருக்கு எப்படி அரசியல் தெரியும்? அம்பேத்கர் இருந்தால் மோடியை பாராட்டிருப்பார் என இளையராஜாவின் கருத்துக்கு அவர் கையெழுத்தை யாரோ போட்டிருப்பார்கள். நிச்சயம் அவர் அப்படி எழுதியிருக்கமாட்டார். பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அம்பேத்கரையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வெளிப்படையாக விமர்ச்சிக்க மாட்டார்கள். திரௌபதி முர்மு பல்வேறு பதவியிலிருந்தும் சொந்த கிராமத்தில் மின்சாரம் பெற்றுத்தர முடியாதவர்" என்றார் காட்டமாக.