Published:Updated:

``இந்துக்களின் முதல் எதிரி பாஜக தான்!" - மைக்கேல்பட்டியில் கொதித்த திருமாவளவன்

திருமாவளவன்

`பி.ஜே.பி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்தியாவில் மத அரசியலையும், தமிழகத்தில் சாதி அரசியலையும் செய்து இந்துக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டுகின்றன.' - திருமாவளவன்

``இந்துக்களின் முதல் எதிரி பாஜக தான்!" - மைக்கேல்பட்டியில் கொதித்த திருமாவளவன்

`பி.ஜே.பி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்தியாவில் மத அரசியலையும், தமிழகத்தில் சாதி அரசியலையும் செய்து இந்துக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டுகின்றன.' - திருமாவளவன்

Published:Updated:
திருமாவளவன்

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது .

மைக்கேல்பட்டியில் நடந்த கூட்டம்
மைக்கேல்பட்டியில் நடந்த கூட்டம்

இந்த நிலையில், மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள சர்ச் வளாகத்தில் சமயச் சார்பின்மை மற்றும் சமூகநீதி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஊருக்குள் உள்ள பொதுவெளியில் இந்த கூட்டத்தை நடத்த்துவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துவிட்டதால் சர்ச் வளாகத்தில் நடத்தினர். கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட தலைவர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மைக்கேல்பட்டியில்  நடைபெற்ற சமயச்,சமூக நீதி பாதுகாப்பு கூட்டம்
மைக்கேல்பட்டியில் நடைபெற்ற சமயச்,சமூக நீதி பாதுகாப்பு கூட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், எம்.எல்.ஏ-க்கள் சின்னத்துரை, அப்துல் சமது, சி.பி.ஐ கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மணியரசன், ``பள்ளியில் மதமாறச் சொல்லி வலியுறுத்தியதாக சொல்வது சுத்த பொய். எதை அரசியல் ஆக்குவது எனத் தெரியாமல் பி.ஜே.பி இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறது. இது அவர்கள் தொழில் வழக்கம்" என்றார்.

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பான கூட்டம்
அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பான கூட்டம்

அவரைத் தொடர்ந்து பேசிய கொளத்தூர் மணி, ``பள்ளி மாணவியின் படத்தைப் போட்டு அரசியல் செய்கிறார்கள் பி.ஜே.பி-யினர். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இது தெரியாதா. இது ஒரு தண்டனைக்குரிய குற்றம். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் வலியுறுத்த மாட்டார்கள். மத வன்முறை தடுப்புச் சட்டத்தை முதலில் கொண்டு வர வேண்டும். மதம் மாற்றம் தடுப்புச் சட்டம் குறித்து பின்னர் பேசுவோம்" என்றார்.

அடுத்ததாகப் பேசிய தொல்.திருமாவளவன், ``ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நல்லாட்சியைத் தந்து கொண்டிருக்கும் முதல்வரின் மதசார்ப்பற்ற கொள்கையை வலுப்படுத்தவும் நாம் கூடி உள்ளோம். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு எதிராக நாம் கூடி உள்ளோம். ஆனால், நாம் இந்துக்களுக்கு எதிராக நிற்கிறோம் என்று சனதான அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரித்து கூறுவார்கள். பி.ஜே.பி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்தியாவில் மத அரசியலையும், தமிழகத்தில் சாதி அரசியலையும் செய்து இந்துக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டுகின்றன.

கூட்டம்
கூட்டம்

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே வெறுப்பு அரசியலை ஏற்படுத்தி பி.ஜே.பி ஆதாயம் அடைய துடிக்கிறது. அரசு அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள, அரசியல் சாசன சட்டத்தை தூக்கி எரியவே இவர்கள் இது போன்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். காவல்துறையினரை நான் தொடர்பு கொண்ட போது மீண்டும் இந்த பிரச்னை பெரிதாகிவிடக் கூடாது என்பதாலேயே இந்தக் கூட்டத்தில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்றனர். காவல்துறையோ அல்லது தமிழக அரசோ நமக்கு எதிரானவர்கள அல்ல இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தேவை இல்லை என்பதை நாம் உறுதிப்படுத்தி கூற வேண்டும்.

தமிழக அரசும் காவல்துறையும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறது. சகாய மேரியை கைது செய்தது தவறு அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கட்டாய மதமாற்றம் இங்கு நிகழ்வதாக அவதூறு பரப்புகின்றன. 1956-ல் அம்பேத்கரின் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் பெளத்தத்திற்கு மாறினர் ஏன் இவர்கள் அன்று தடுக்கவில்லை. கல்வியை, சுகாதாரத்தை கொடுத்தவர்கள் கிறிஸ்தவர்கள். அம்பேத்கர் தேவை இல்லை என்றாலும் அம்பேத்கரின் காலில் விழுந்து வணங்குகிறார் மோடி.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பி.ஜி.பி-யின் ஒரே நாடு,ஒரே கலாசாரம், ஒரே மொழி என்பதையெல்லாம் தாண்டி தற்போதைய தேர்தலில் ஒரே ஒரு வாக்கை பெற்றுள்ளனர். இந்தியாவில் 800 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி புரிந்தனர், 400 ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி புரிந்தனர், அப்போதெல்லாம் அவர்கள் நினைத்திருந்தால் இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றி இருக்கலாம்.

ஆனால், அப்படி செய்யவில்லை. அப்போதெல்லாம் நடைபெறாத மதமாற்றம் இப்போது செய்கிறார்கள் என்பதெல்லாம் அரசியலுக்காக சனாதான கும்பல் செய்யும் சதி வேலை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மாஜிஸ்திரேட் விசாரணையில் அந்த மாணவி மதமாற்றம் என்ற ஒரு வார்த்தையைக் கூட கூறவில்லை. ஆனால், இதை பயன்படுத்தி தீப்பொறியை போட கணக்கு போட்டார்கள். இந்துக்களின் முதல் எதிரி பி.ஜே.பி இதை மக்களிடம் நாம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தொல்.திருமாவளவன்,திருவடிக்குடில் சுவாமி
தொல்.திருமாவளவன்,திருவடிக்குடில் சுவாமி

தி.மு.க மற்றும் அ.தி.மு.க தமிழகத்தில் லேப்டாப், சைக்கிள் போன்ற அறிவு சார்ந்த பொருள்களை மாணவர்களுக்கு தருகின்றன. ஆனால், பி.ஜே.பி காவி துண்டை தருகிறது. சாதி ஒழிய வேண்டும். சாதி இல்லை என்று பி.ஜே.பியை சேர்ந்தவர்கள் யாராவது பேசுவார் களா?, மோடி பேசுவாரா... இல்லை அமித் ஷா பேசுவாரா. இத்தகைய கும்பலை நாம் தமிழ் மண்ணிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும். முன்பெல்லாம் அம்பேத்கர் சிலையை அவமதித்தார்கள். தற்போது பி.ஜே.பி உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் தந்தை பெரியார், திருவள்ளுவர் ஆகியோரது சிலைகளை அவமதிக்க தொடங்கியுள்ளனர். நம் தமிழ் மண் மதநல்லிணக்கத்தை பாதுகாக்கும் மண் என்பதை நாம் உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism