Published:Updated:

தூத்துக்குடி: அன்று கனிமொழிக்காக விட்டுக்கொடுத்தவர்... மேயர் வேட்பாளரான அமைச்சரின் சகோதரர்!

ஜெகன் - தி.மு.க மேயர் வேட்பாளர்

’கலைஞரின் முரட்டு பக்தன்’ என அழைக்கப்பட்ட மறைந்த தூத்துக்குடி தி.மு.கவின் மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகனும், அமைச்சர் கீதாஜீவனின் சகோதரருமான ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சியின் தி.மு.க மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி: அன்று கனிமொழிக்காக விட்டுக்கொடுத்தவர்... மேயர் வேட்பாளரான அமைச்சரின் சகோதரர்!

’கலைஞரின் முரட்டு பக்தன்’ என அழைக்கப்பட்ட மறைந்த தூத்துக்குடி தி.மு.கவின் மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகனும், அமைச்சர் கீதாஜீவனின் சகோதரருமான ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சியின் தி.மு.க மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:
ஜெகன் - தி.மு.க மேயர் வேட்பாளர்

தமிழகத்தின் கடல்வழி நுழைவு வாயிலான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினை உள்ளடக்கியது தூத்துக்குடி மாநகராட்சி. மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை முக்கியத் தொழிலாக உள்ளன. இந்தியாவிலேயே குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சாலை, ரயில், விமானம், கப்பல் என நான்கு வகைபோக்குவரத்து வசதிகளைப் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் தி.மு.க மேயர் வேட்பாளராக ஜெகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 30 ஆண்டுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்ட தி.மு.கவை தன் கைக்குள்ளும், கண் அசைவிலும் வைத்திருந்த கலைஞர் கருணாநிதியின் ’முரட்டு பக்தன்’ என அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., என்.பெரியசாமியின் இளைய மகன் ஆவார்.

ஜெகன்
ஜெகன்

இவர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏவும், மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரான கீதாஜீவனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு மெரின் பேபி நிஷா என்ற மனைவியும், அக்சய் பெரிசன் டேவிட் என்ற மகனும், டிவேனா எபி பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், தி.மு.க பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமில்லாமல், தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர், தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர், தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். கடந்த 2014-ல் நடந்த 16-வது மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு 2,42,050 வாக்குகள் பெற்றார் ஜெகன். ஆனால், இவரை விட 1,24,002 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க வேட்பாளரான வழக்கறிஞர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி எம்.பி ஆனார். ஜெகனின் தந்தை பெரியசாமி, உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த போதே, ”என்னோட மாவட்டச் செயலாளர் பதவியை எனது மகன் ஜெகனுக்குக் கொடுங்க” எனச்சொல்லி அப்போதைய தி.மு.க செயல்தலைவராக இருந்த ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்தார். பெரியசாமியின் மறைவுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி, கீதாஜீவனுக்கே வழங்கப்பட்டது.

கனிமொழி - கீதாஜீவன்
கனிமொழி - கீதாஜீவன்

கட்சிப் பதவி கிடைக்காதததால் அதிருப்தியில் இருந்தார் ஜெகன். முந்தைய மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் தி.மு.க வேட்பாளராக ஜெகனுக்கு சீட் கிடைக்க இருந்தது. ஆனால். , எம்.பி., சீட் தி.மு.கவின் மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு வழங்கப்பட்டது. அப்போதே தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவி ஜெகனுக்குதான் எனவும் பேசப்பட்டது.

தனது தம்பியை மேயர் நாற்காலியில் அமர வைக்க அதற்கான வியூகங்களை அமைச்சர் கீதாஜீவன் ஆரம்பத்தில் இருந்தே வகுத்து வந்தார். இந்த நிலையில்தான், தி.மு.கவின் மாநில இளைஞரணி துணைச் செயலாளரான ஜோயலும் மேயர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தினார். உதயநிதியின் குட்புக்கில் இடம் பெற்றுள்ள ஜோயல் தலைமையின் கிரீன் சிக்னலுக்காக நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில் உதயநிதிக்கும், கனிமொழிக்கு கட்சிக்குள் பனிப்போரால் ஜோயலுக்கு வாய்ப்பு மறுக்கபப்டடது. ``ம.தி.மு.கவில் இருந்து தி.மு.கவிற்கு வந்தவர் ஜோயல். அவருக்கு மேயர் பதவி கொடுத்தால் கட்சியில் ஆரம்பத்தில் இருந்து உழைத்தவர்களுக்கு என்ன பயன்?” என உள்ளூர் உடன்பிறப்புகளும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சி

மேயர் பதவிக்கு தனது தம்பிக்கு போட்டியாக இந்த ஜோயலுக்கு வாய்ப்ப் மறுக்கப்பட்டதால், ஜெகனுக்குக் கட்சிக்குள் யாரும் போட்டி இல்லை என்ற நிலை உருவானது. “முந்தைய மக்களவைத் தேர்தலில் எம்.பி., சீட்டை தனக்காக விட்டுக் கொடுத்த ஜெகனை மேயராக்கிவிட வேண்டும் என ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார் கனிமொழி. அமைச்சர் கீதாஜீவனும் தன் தந்தை பெரியசாமியின் ஆசைப்படி தம்பிக்கு அரசியலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திட நினைத்ததால் ஜெகனின் மேயர் கனவு நிறைவேற அனைத்துமே சாதகமானது. கனிமொழி, கீதாஜீவன் ஆகிய இருவரின் ஒத்துழைப்பும் ஜெகனுக்கு கூடுதல் பலமாக உள்ளது!