Published:Updated:

`வெங்காய விலை உயர்வினால் ஆட்சி கவிழ்ந்த வரலாறு உண்டு!’- திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

வெங்காயம் விலை உயர்வு காரணமாகக் கடந்த காலங்களில் ஆட்சியே கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் பேசினார்.


திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், "வெங்காய விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.வெங்காய விலை உயர்வினால் ஆட்சியே கவிழ்ந்த வரலாறும் உண்டு. கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அது தெரியும். வெங்காய விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து கூறி வந்தாலும் விலை குறைந்தபாடில்லை.

`வெங்காய விலை உயர்வினால் ஆட்சி கவிழ்ந்த வரலாறு உண்டு!’- திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

வெங்காய விலையைக் குறைக்க உடனே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளியே வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 105 நாட்கள் வரையிலும், சிறையில் கஷ்டப்பட்டு உள்ளார். குறிப்பாக, திட்டமிட்டே அவரை சிறையில் வைத்துள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் சரியான வழிகாட்டுதலின் படி வெளியில் வந்துள்ளார்.

தெலுங்கான பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே வேலையில் என்கவுன்டர் செய்த முறை சரிதானா? போலீஸாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால் தான் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

`வெங்காய விலை உயர்வினால் ஆட்சி கவிழ்ந்த வரலாறு உண்டு!’- திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

அப்போதுதான் சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். என்னைப்பொறுத்தவரையில் ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதே சிறந்தது. மறைமுகத் தேர்தலைத் தவிர்த்து நேரடியாகத் தேர்தலை நடத்த வேண்டும்" என்றார்.