Published:Updated:

`என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வையுங்கள்; கேள்விகளை எழுப்பினால் போதும்!' -டி.எம்.கிருஷ்ணா

டி.எம்.கிருஷ்ணா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

``எனது புத்தகம் மீது என்ன விமர்சனம் வேண்டுமானால் வைக்கலாம். இந்தப் புத்தகம் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்'' என்று டி.எம்.கிருஷ்ணா பேசினார்.

`என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வையுங்கள்; கேள்விகளை எழுப்பினால் போதும்!' -டி.எம்.கிருஷ்ணா

``எனது புத்தகம் மீது என்ன விமர்சனம் வேண்டுமானால் வைக்கலாம். இந்தப் புத்தகம் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்'' என்று டி.எம்.கிருஷ்ணா பேசினார்.

Published:Updated:
டி.எம்.கிருஷ்ணா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதிய `செபாஸ்டியன் & சன்ஸ்' நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி நூலை வெளியிட எம்.பி-யும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அரங்கில் இன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த விழாவுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இசைக்கருவியான மிருதங்கம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குறித்து 4 ஆண்டுகள் தொடர் ஆய்வுக்குப் பின், அதை டி.எம்.கிருஷ்ணா புத்தகமாக வெளியிடுகிறார். அனுமதி ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய காலசார துறையின் கீழ் இயங்கும் கலாஷேத்ரா வெளியிட்டிருந்த அறிக்கையில், ``காலாஷேத்ரா, அரசு நிறுவனமாக இருப்பதால் அரசியல், கலாசாரம், சமூகரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே அனுமதிக்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எனது புத்தகம் மீது என்ன விமர்சனம் வேண்டுமானால் வைக்கலாம். இந்தப் புத்தகம் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்
டி.எம்.கிருஷ்ணா

இன்றைய செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக மதிப்புரைகளில் சில பகுதிகளைப் பார்க்கும்போது இந்தப் புத்தகம் சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது. மேலும், நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன. புத்தக வெளியீட்டு விழாவுக்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆகையால் புத்தக வெளியீட்டு விழாவுக்காக எங்கள் அரங்கத்தை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

டி.எம்.கிருஷ்ணா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி
டி.எம்.கிருஷ்ணா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் கல்லூரி அரங்கில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அதேநாளில் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. அனுமதி மறுப்பு விவகாரம் பெரிய அளவில் விவாதத்தை எழுப்பியிருந்தநிலையில், நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அரங்கு நிறைந்த நிலையில், வெளியில் திரை மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், `தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் எம்.பி, ``வர்ணம் அடிப்படையிலான சாதியப் பாகுபாடு இன்றும் இருக்கிறது என்பது, இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதில் இருந்தே அறிந்துகொள்ளலாம். உலகில் தோன்றிய முதல் தோல் இசைக்கருவி பறைதான். அதன் பரிணாம வளர்ச்சியாகவே தபேலா, மிருதங்கம் போன்றவைகள் வந்தன. ஆனால், பறை இழிவாகப் பார்க்கப்படுகிறது. கோயிலுக்குள் அதற்கு இடமில்லை.

டி.எம்.கிருஷ்ணா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி
டி.எம்.கிருஷ்ணா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

ஆனால், மிருதங்கமும் ஒருவகையான பறைதான். ஆனால், அதற்கு கோயிலுக்குள் இடமுண்டு. அதேபோல், மிருதங்கம் தயாரிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் தலித்துகளே. அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருக்கிறார்கள். அப்படி மதம் மாறினாலும் அவர்களை சாதியப் பாகுபாடு துரத்துகிறது. அதேபோல், ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். அவர்களும் ஒடுக்கப்படும் போக்கு இருப்பது அதனால்தான். இந்தப் புத்தகம் புனைவாக எழுதப்பட்டது அல்ல. உண்மையான வரலாற்றையே டி.எம்.கிருஷ்ணா இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

தஞ்சாவூர், மதுரை, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து மிருதங்கம் தயாரிக்கும் கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். டி.எம்.கிருஷ்ணா புத்தகம் குறித்து நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். மிருதங்கம் தயாரிக்கும் தொழிலாளர்கள் குறித்தும் அவர், தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ``எனது புத்தகம் மீது என்ன விமர்சனம் வேண்டுமானால் வைக்கலாம். இந்தப் புத்தகம் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

வரலாற்று ஆய்வாளரும் காந்தியின் பேரனுமான ராஜ்மோகன் காந்தி பேசுகையில், ``ஒருசிலர் இன்று செய்யும் காரியங்களால், அம்பேத்கர், காந்தி, பெரியார் போன்ற தலைவர்களின் கொள்கைகளை விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது'' என்றார். மேலும், டி.எம்.கிருஷ்ணவை நோக்கி, ``உங்களுக்கு கதவை மூடியவர்களுக்கு, நீங்கள் நன்றிக் கடிதம் ஒன்றை எழுதுங்கள். ஒரு கதவை மூடியதாலேயே இன்று உங்களுக்காக பல கதவுகள் திறந்திருக்கின்றன'' என்று ராஜ்மோகன் காந்தி கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism