Published:Updated:

``ராகுல் காந்தி அரசியலில் ஜூனியர்; அவருக்கு காங்கிரஸின் சித்தாந்தமே தெரியாது" -மேற்கு வங்க அமைச்சர்

மேற்கு வங்க அமைச்சர் சோபந்தேப் சட்டோபாத்யாய்

`ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் தெரியுமா என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவருக்கு காங்கிரஸின் சித்தாந்தமே தெரியாது.' - சோபந்தேப் சட்டோபாத்யாய்

9 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் சிந்தனை அமர்வு கூட்டத்தை, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி நடத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை (மே-13) தொடங்கிய மூன்று நாள் கூட்டமானது, நேற்றுடன் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தின் கடைசி நாளில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``இது சித்தாந்தங்களின் சண்டை. பிராந்தியக் கட்சிகளுக்கென சொந்த இடம் உள்ளது. ஆனால், அந்த சித்தாந்தம் அவர்களிடம் இல்லாததால், அவர்களால் பா.ஜ.க-வை தோற்கடிக்க முடியாது" எனப் பேசியிருந்தார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

இந்த நிலையில், ராகுல் காந்தியின் இத்தகைய பேச்சுக்கு, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மேற்கு வங்க அமைச்சர் சோபந்தேப் சட்டோபாத்யாய் அவரை விமர்சித்திருக்கிறார்.

கொல்கத்தாவில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றியம் பேசிய மேற்கு வங்க அமைச்சர் சோபந்தேப் சட்டோபாத்யாய், ``முதலில், ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் தெரியுமா என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவருக்கு காங்கிரஸின் சித்தாந்தமே தெரியாது. தற்போதைய சூழலில் காங்கிரஸானது ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவிழந்து வருகிறது. சில சமயங்களில் பிராந்தியக் கட்சிகள் பலம் பெறுகின்றன. ஒரு தேசமாக நம்மிடம் உள்ள பன்முகத்தன்மையே இதற்குக் காரணம். இந்திய அரசியலில், பிராந்தியக் கட்சிகள் நிறைய பங்காற்றிஇருக்கின்றன. மேலும், ராகுல் காந்தி அரசியலில் ஜூனியர் என்பதும் எனக்குத் தெரியும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism