Published:Updated:

கோடீஸ்வரர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ்... குற்ற வழக்குகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க!

வேட்பாளர்களின் பயோடேட்டா
பிரீமியம் ஸ்டோரி
வேட்பாளர்களின் பயோடேட்டா

- வேட்பாளர்களின் பயோடேட்டா

கோடீஸ்வரர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ்... குற்ற வழக்குகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க!

- வேட்பாளர்களின் பயோடேட்டா

Published:Updated:
வேட்பாளர்களின் பயோடேட்டா
பிரீமியம் ஸ்டோரி
வேட்பாளர்களின் பயோடேட்டா

ஒருவழியாக தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது. வாக்காளர்களின் விரலிலுள்ள ‘மை’ அழிய சில நாள்களாகும். ஆனால், குற்றப் பின்னணிகொண்ட வேட்பாளர்கள் மீதான வழக்குகள்..? அது, நீதிமன்றங்களின் கைகளில்தான் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி, தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தவிர, இடதுசாரிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே கணிசமான எண்ணிக்கையில் பெரும் கோடீஸ்வரர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளன.

கோடீஸ்வரர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ்... குற்ற வழக்குகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 1998-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 2019-ம் ஆண்டு மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணா ரெட்டி, தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதை அடிப்படையாகவைத்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், ‘குற்றப் பின்னணிகொண்ட வேட்பாளர்கள் குறித்த விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இந்த நடை முறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், முழுமையாகச் செயல் படுத்தப் படவில்லை. 2021-ம் ஆண்டு தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்ட மன்றத் தேர்தலில், குற்றப்பின்ன ணியைக் கொண்ட வேட்பாளர்கள் குறித்த விவரங்களை விளம்பரமாக வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகு வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது.

குற்றப் பின்னணி தொடர்புடைய வேட்பாளர்கள் பற்றி கவனம் செலுத்திவரும் அறப்போர் இயக்கம், இதுதொடர்பாக தனியாக ‘ஆப்’ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. நம்மிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ‘‘ஜனநாயக சீர்த்திருத்த சங்கமும், தேசிய தேர்தல் கண்காணிப்பகமும் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது. இதில், தேர்தலில் போட்டியிடும் 3,998 வேட்பாளர்களில் 3,559 வேட்பாளர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களில் 202 பேர் தேசியக் கட்சி வேட்பாளர்கள், 489 பேர் மாநிலக் கட்சி வேட்பாளர்கள், 1,001 பேர் பதிவுபெற்ற அங்கீகாரம் பெறாத கட்சி வேட்பாளர்கள், 2,867 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

கோடீஸ்வரர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ்... குற்ற வழக்குகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க!

இந்த வேட்பாளர்களில் 466 பேர்மீது குற்ற வழக்குகள் உள்ளன. 207 பேர்மீது கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்குகள் உள்ளன. இந்தக் குற்ற வழக்கு பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருப்பது தி.மு.க-தான். அந்தக் கட்சியின் 136 வேட்பாளர்கள்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடுத்ததாக, அ.தி.மு.க வேட்பாளர்கள் 46 பேர்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பா.ஜ.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 பேர்மீதும், தே.மு.தி.க வேட்பாளர்கள் 18 பேர்மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன. பா.ம.க-வின் 10 வேட்பாளர்கள்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

குற்ற வழக்குகள் நிலுவையிலிருக்கும் வேட்பாளர்கள் மூன்று முறை, தங்களின் சுயவிவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும். கட்சியின் இணையதளங்களிலும் தங்கள்மீதான வழக்குகள் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையை ஒவ்வொரு வேட்பாளரும் கண்டிப்பாகப் பின்பற்றுகிறாரா என்பதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எளிமைப்படுத்தும் விதமாகத்தான், வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ‘ஆப்’ ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அதில், 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் பற்றிய முழு விவரங்கள் உள்ளன’’ என்றவர், கோடீஸ்வர வேட்பாளர்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

கோடீஸ்வரர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ்... குற்ற வழக்குகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க!

‘‘மொத்தம் 652 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். கோடீஸ்வரர் வேட்பாளர்கள் பட்டியலில், 164 கோடீஸ்வரர்களுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது அ.தி.மு.க. 155 கோடீஸ்வரர்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது தி.மு.க. 25 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, 19 கோடீஸ்வரர்களைக் களமிறக்கியிருக்கிறது. அதே எண்ணிக்கையில் தே.மு.தி.க-வும் கோடீஸ்வரர்களுக்கு வாய்ப்பளித்திருக் கிறது. பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகளில், 15 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்’’ என்றார் விரிவாக.

அலெஸிஸ் சுதாகரோ
அலெஸிஸ் சுதாகரோ

அதேசமயம், வழக்கறிஞர் அலெஸிஸ் சுதாகரோ, ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்கள் 33 A, 125 (A), 100, 10 A ஆகிய பிரிவுகளின்படி, எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருந்தாலே அவர்கள் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் என்று கருத முடியாது. . நீதிமன்றம் குற்றத்தைச் சுட்டிக்காட்டியிருந்தால் (Charge Frame) மட்டுமே அவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனச் சொல்ல முடியும். அவர்களைத்தான் தேர்தல் ஆணையம் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று அறிவித்துள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்டவர் களுக்கு நீதிமன்றம் மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதித்தால் மட்டுமே, அவர்களைப் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய முடியும். மேலும் இவ்வழக்குகளில் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினர்மீது போடும் அரசியல் வழக்குகளும் அடக்கம். இருப்பினும் தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்திருக்கும் இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது’’ என்கிறார்.

என்ன... உங்கள் தொகுதி வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை ஆராய்ந்த பிறகுதானே நீங்கள் வாக்களித்தீர்கள்?