Published:Updated:

காரைக்குடியிலிருந்து திடீரென சிவகங்கைக்கு மாற்றப்பட்ட பாஜக பொதுக்கூட்டம்! - பின்னணி என்ன?

பா.ஜ.க

காரைக்குடியில் வரும் திங்கள்கிழமை அண்ணாமலை தலைமையில் நடைபெறவிருந்த பா.ஜ.க பொதுக்கூட்டம், திடீரென சிவகங்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த திடீர் முடிவின் பின்னணி என்ன..?!

காரைக்குடியிலிருந்து திடீரென சிவகங்கைக்கு மாற்றப்பட்ட பாஜக பொதுக்கூட்டம்! - பின்னணி என்ன?

காரைக்குடியில் வரும் திங்கள்கிழமை அண்ணாமலை தலைமையில் நடைபெறவிருந்த பா.ஜ.க பொதுக்கூட்டம், திடீரென சிவகங்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த திடீர் முடிவின் பின்னணி என்ன..?!

Published:Updated:
பா.ஜ.க

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தச் சிவகங்கை மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்திருக்கின்றன. இந்த நிலையில், அந்தக் கூட்டம் திடீரென சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த காரைக்குடி, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா வசித்துவரும் பகுதியாகும். இதனால் அவரின் தலையீடு அதிகமாகக் காணப்பட்டதால்... மாவட்டத் தலைவர் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்துக் கூட்டத்தைச் சிவகங்கைக்கு மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாகச் சிவகங்கை மாவட்ட பா.ஜ‌.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``காரைக்குடியில் வருகிற திங்கள்கிழமை மாநிலத் தலைவர் அண்ணாமலையை அழைத்துவந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி திட்டமிட்டு அதற்கான இடத்தை தேர்வு செய்து பணிகளைச் செய்துவந்தார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

இதற்கிடையே நேற்று முன் தினம் ஹெச்.ராஜா மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தியிடம், `மாநிலத் தலைவர் அண்ணாமலையை நான்தான் வரவேற்கச் செல்வேன். பொதுக்கூட்டத்துக்கு அவரை அழைத்து வருவது முதல் அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கூட்டத்தில் மட்டும் அவரை வரவேற்றுக் கொள்ளுங்கள்' எனத் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக பா.ஜ.க-வின் ப்ரோடோகால்படி, மாநிலத் தலைவர் எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும் அந்தந்த மாவட்டத் தலைவர்கள்தான் அவரை வரவேற்க வேண்டும். அதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கவைத்து மாவட்டத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்துத் தெரிவிக்க வேண்டும். ஆனால், ஹெச்.ராஜா ப்ரோடோகாலை மீறியிருக்கிறார். அதனால், நிர்வாகிகளிடம் மாவட்டத் தலைவர் கலந்தாலோசித்து அவர்கள் ஒப்புதலுடன் கூட்டத்தைச் சிவகங்கைக்கு மாற்றியிருக்கிறார்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாமலை
அண்ணாமலை

இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தியிடம் பேசினோம்.

``காரைக்குடியில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். தற்போது சில காரணங்களால் அது சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு ஹெச்.ராஜாதான் காரணம் என்ற தகவல் தவறானது" எனக் கூறினார்.

தற்போது கூட்டம் சிவகங்கைக்கு மாற்றப்பட்டிருப்பதால், ஹெச்.ராஜா தான் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்து விட்டதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism