Published:Updated:

“கூட்டணி ஆட்சி பற்றி பா.ஜ.க தலைமைதான் முடிவெடுக்கும்!”

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

- வரிந்துகட்டும் வானதி சீனிவாசன்

“கூட்டணி ஆட்சி பற்றி பா.ஜ.க தலைமைதான் முடிவெடுக்கும்!”

- வரிந்துகட்டும் வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்
நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிகம் கவனம் ஈர்த்த தொகுதிகளில் ஒன்று, கோவை தெற்கு. பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு எதிராக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனின் அதிரடி பிரசாரமும், வானதியின் சுரீர் பதிலடியும் பிரேக்கிங் செய்திகளாகின. பிரசாரம் முடிந்து ஓய்விலிருக்கும் வானதி சீனிவாசனிடம் பேசினேன்...

“கமல்ஹாசன் உங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்துவிட்டதாகக் குறை சொன்ன நீங்களே ‘லிப் சர்வீஸ் மட்டுமே செய்பவர் கமல்’ என்று பதிலடி கொடுத்தது சரிதானா?’’

“என்னிடமும் நிறைய பேர், ‘உங்களைப் போன்ற அரசியல்வாதியிடமிருந்து இப்படியொரு பதிலடியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று சொன்னார்கள். ‘துக்கடா அரசியல்வாதி’ என்று என்னை அவர் விமர்சித்த வார்த்தை, எனக்குள் ஏற்படுத்திய கோபத்தின் நொடியில் நானும் அப்படிப் பேசிவிட்டேன். கமல்ஹாசன் செய்த விமர்சனத்துக்கான எதிர்வினையாக மட்டுமே இதை நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, கேரக்டருக்குள் நுழைத்துப் பார்க்கத் தேவையில்லை.’’

 “கூட்டணி ஆட்சி பற்றி பா.ஜ.க தலைமைதான் முடிவெடுக்கும்!”

“நாட்டையே அதிரச்செய்த பாலியல் குற்றம் நிகழ்ந்த பொள்ளாச்சியில் நின்றுகொண்டு, ‘பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்’ என்றெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் பேசியிருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது?’’

“பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் எல்லா மாநிலங்களிலும் நடக்கின்றன. பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். பாலியல் சம்பவத்தில், தங்கள் கட்சியினர் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல் வந்ததும், அவர்களையும் கட்சியைவிட்டே நீக்கி நடவடிக்கை எடுத்தனர். ஆனால், இதே கரூரில் தி.மு.க மகளிரணிச் செயலாளர், ‘என் இடுப்பைக் கிள்ளினார், அத்துமீறினார்’ என்றெல்லாம் அந்தக் கட்சியினர் மீதே புகார் கொடுத்தும்கூட தி.மு.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப் பல புகார்கள் உள்ளன. அதனால்தான், ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால், பெண்கள் பாதுகாப்பு கேலிக்குரியதாகிவிடும்’ என்று பா.ஜ.க தலைவர்கள் பேசினார்கள்.’’

“மோடி, அமித் ஷா, யோகி போன்ற பா.ஜ.க தலைவர்களின் பிரசாரத்தால் அ.தி.மு.க கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டது என்கிறார்களே?’’

“தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொண்ட பிறகுதான் இது போன்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியும். அப்போது இது பற்றி நாம் பேசலாம்.’’

“ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க பெயரைப் பயன்படுத்தி வாக்குக் கேட்க அ.தி.மு.க வேட்பாளர்கள் பலரும் தயங்கினார்களே?’’

“அப்படியொரு தயக்கம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.’’

“உங்களது பிரசார நோட்டீஸில்கூட, பா.ஜ.க பெயரோ, பிரதமர் மோடியின் படமோ இடம்பெறவில்லையே?’’

“நீங்கள் குறிப்பிடுகிற மாதிரியான எந்தவொரு நோட்டீஸையும் நான் பார்க்கவில்லை. எங்களது அனைத்து நோட்டீஸ்களிலும் அ.தி.மு.க தலைவர்களுடன் பிரதமர் மோடியின் படமும் ஒரே அளவில் இடம்பெற்றிருக்கிறது.”

“கார்ப்பரேட் சாமியார்கள் சிலர், பொதுமக்களின் சொத்தான கோயில்களையும் ஆக்கிரமிக்க நினைப்பது சரிதானா?’’

“கார்ப்பரேட் சாமியார்கள் எனச் சொல்லப்படுகிற, இந்து சனாதன குருமார்கள் நம் நாட்டினுடைய யோகா, தர்மம் போன்ற கருத்துகளுக்காக உலக அளவில் பிரபலமடைந்துவருகிறார்கள். அவர்கள் யாரும், ‘கோயில் சொத்துகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ என்று கேட்கவில்லை. மற்ற மதத்தினரைப்போலவே, ‘இந்துக் கோயில்களை இந்து மக்களே நிர்வாகம் செய்ய வேண்டும்’ என்ற உரிமையைத்தான் கேட்கிறார்கள். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் பல்லாண்டு காலமாக இதே கோரிக்கையை வலியுறுத்திவருகின்றன.’’

 “கூட்டணி ஆட்சி பற்றி பா.ஜ.க தலைமைதான் முடிவெடுக்கும்!”

“மக்கள் சொத்தான இந்துக் கோயில்களை, அரசிடமிருந்து பிடுங்கி தனியார் வசம் ஒப்படைக்க நினைப்பதே அநீதி இல்லையா?’’

“இது மிக முக்கியமான விஷயம். ஒருகாலத்தில் அரசுகள், முழுமையாக இந்து மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டு கோயில்களுக்குரிய மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கொடுத்துவந்தன. ஆனால், மத நம்பிக்கை இல்லாத அரசுகள் வந்த பின்னர், இன்றைக்குக் கோயில் சொத்துகள், சிலைகள், விக்கிரகங்கள், கோயில் பராமரிப்பு இவையெல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்த விவாதங்கள் இந்து மக்களிடையே பெருகிவருகின்றன. அதனால்தான், மேற்கண்ட கோரிக்கையும் வலுத்துவருகிறது.’’

“தேர்தல் ஆரம்பத்திலேயே, ‘கூட்டணி ஆட்சி கிடையாது’ என்று அ.தி.மு.க சொல்லிவிட்டது. ஆனாலும், பா.ஜ.க தலைவர்கள் ‘கூட்டணி ஆட்சி’ என்று பேச ஆரம்பித்திருக்கிறீர்களே?’’

“வருகிற மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இதுகுறித்து எங்கள் கட்சியின் தலைமைதான் முடிவெடுக்கும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism