Published:Updated:

`தலைமைக்குக் கடிதம்; கூட்டங்களுக்குத் தடை!' -அரசகுமாருக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழக பா.ஜ.க

நிகழ்ச்சியில் பேசும் அரசகுமார்

திருமண விழாவுக்குச் சென்றால் மணமக்களையோ அல்லது அவரது தாய் தந்தையையோ புகழ்ந்து பேசவேண்டும். அதைவிட்டு உடன்பிறப்பாக மாறிப் பேசியதை ஏற்க முடியாது.

`தலைமைக்குக் கடிதம்; கூட்டங்களுக்குத் தடை!' -அரசகுமாருக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழக பா.ஜ.க

திருமண விழாவுக்குச் சென்றால் மணமக்களையோ அல்லது அவரது தாய் தந்தையையோ புகழ்ந்து பேசவேண்டும். அதைவிட்டு உடன்பிறப்பாக மாறிப் பேசியதை ஏற்க முடியாது.

Published:Updated:
நிகழ்ச்சியில் பேசும் அரசகுமார்

மு.க.ஸ்டாலின் அரியணையில் ஏறுவார் என பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பேசிய விவகாரம், பா.ஜ.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளன.

சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினரிடையே கருத்துமோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் புதுக்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் அரசகுமார் பேசுகையில், ``உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே இரவில் கூவத்தூர் விடுதிக்குள் புகுந்து முதல்வர் பதவியைத் தட்டிப் பறித்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. காரணம், அவர் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயகத்தின் வாயிலாகப் பெற வேண்டும் எனப் பொறுமையாகக் கடைப்பிடித்து வருகிறார். அவர் முதல்வராகும் திருநாள் அரங்கேறப்போகிறது" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க நீடிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், பி.டி.அரசகுமார் ஏன் அவ்வாறு பேசினார் என பா.ஜ.க நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ``திருமண விழாவுக்குச் சென்றால் மணமக்களையோ அல்லது அவரது தாய் தந்தையையோ புகழ்ந்து பேசவேண்டும் அதைவிட்டு அவர் தி.மு.க-காரனாகவே மாறிப் பேசியது கண்டிக்கத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று எதிர்க்கட்சித்தலைவரை புகழ்ந்து பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்துத்துவ அமைப்புகள் மீது தினசரி சேறுவாரி வீசும் தி.மு.கவினருக்கு சந்தன அபிஷேகம் செய்தது தி.மு.க வின் மீதான அரசகுமாரின் பழைய விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. அவரின் பேச்சை எந்தவொரு பா.ஜ.க தொண்டனும் ஏற்க மாட்டான். அவரை உடனே கட்சியிலிருந்து நீக்கவேண்டும். அப்போதுதான் யாரும் பழைய உறவுகளைப் பற்றிப் பார்க்காமல், தற்போது இருக்கும் கட்சியில் விசுவாசமாகச் செயல்படுவார்கள்" என்றார் கொந்தளிப்புடன்.

இந்நிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் நரேந்திரன் அகில இந்தியத் தலைமைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், `பி.டி அரசக்குமாரின் பேச்சு கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் மீறும் செயல். தேசிய தலைமையிலிருந்து தகவல் வரும் வரையிலும் அரசக்குமார் எந்தவித பொதுக்கூட்டங்களிலும் கலந்துக் கொள்ளகூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

`தலைமைக்குக் கடிதம்; கூட்டங்களுக்குத் தடை!' -அரசகுமாருக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழக பா.ஜ.க

அரசகுமார் பேச்சு குறித்து தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம்.``அவர் ஏன் இப்படிப் பேசினார் என எங்களுக்குத் தெரியவில்லை. அவர் மீது கட்சி மேலிடத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள். கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்" என்றதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism