Election bannerElection banner
Published:Updated:

``ரஜினி எனது ஆன்மிக குரு மட்டுமே; அரசியல் குரு அல்ல!" - அண்ணாமலை ஓப்பன் டாக்

அண்ணாமலை
அண்ணாமலை

பெரியாருக்கு பயப்படுவது பா.ஜ.க அல்ல... தி.மு.க-தான். மேலும், பெரியாரின் கருத்துகளுக்கு எதிராக இருக்கும் ஒரே கட்சியும் தி.மு.க-தான்

கரூர் மாவட்டம், தொப்பம்பட்டியிலுள்ள வீட்டில் தமிழகத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிப்பதற்கான 'தீவிர' டிஸ்கஷனில் இருந்த அண்ணாமலையைச் சந்தித்துப் பேசினோம்.

''நீங்கள் ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்தது, ஆடு வளர்ப்பில் இறங்கியது, பா.ஜ.க-வில் இணைந்தது... என எல்லாமே சங் பரிவார் அமைப்பு போட்டுக்கொடுத்த திட்டங்கள்தான் என்கிறார்களே?"

''இது தி.மு.க கிளப்பிவிட்ட புரளி. நான் விருப்பப்பட்டே அரசியலுக்கு வந்தேன். கைலாயம் மற்றும் மானசரோவர் ஆன்மிகப் பயணங்கள் பா.ஜ.க-வை நோக்கி என்னை ஈர்த்தன. அதனாலேயே அந்தக் கட்சியில் இணைந்தேன்.''

''ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், பா.ஜ.க-வுக்குள் நுழைந்திருக்கிறீர்கள். ரஜினி உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?''

''ஆமாம், வாழ்த்து தெரிவித்தார். ஆனாலும், ரஜினி எனது ஆன்மிக குரு மட்டுமே; அரசியல் குரு அல்ல. அதேபோல 'அரசியலுக்கு வா' என்றும் அவர் என்னிடம் சொன்னதில்லை. ஆன்மிகம் பற்றிப் பேசியிருக்கிறார். அவரது அரசியல் பார்வையே வேறு. நிச்சயம் அவர் ஒரு மாற்று அரசியலைத் தருவார். அதேசமயம் அவர் சொன்ன முதல்வர் வேட்பாளர் நிச்சயம் நானில்லை.''

''பெரியார் கொள்கைகளைக் கண்டு பா.ஜ.க அஞ்சுகிறதா?"

''பெரியாருக்கு பயப்படுவது பா.ஜ.க அல்ல... தி.மு.க-தான். மேலும், பெரியாரின் கருத்துகளுக்கு எதிராக இருக்கும் ஒரே கட்சியும் தி.மு.க-தான். 'தேர்தலில் போட்டியிடக் கூடாது' என்று பெரியார் சொன்னார். ஆனால், அண்ணா கட்சி ஆரம்பித்து, தேர்தலைச் சந்தித்தார். 'குடும்ப அரசியல் செய்யக் கூடாது' என்றார் பெரியார். இப்போது அந்தக் கட்சியில் குடும்ப அரசியல் மட்டுமே நடக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியை ஒரு தொழிலாகவே நடத்திக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் குடும்பம்.''

> ''தமிழகத்தில் இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி பா.ஜ.க-வை வளர்த்துவிட முடியும் என்று எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?''

> ''சமீபத்தில், 'கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்துடனும் தமிழகத்தை ஒப்பிட முடியாது' என்று சொல்லியிருந்தீர்கள். அப்படியென்றால், அந்த வளர்ச்சியைக் கொண்டு வந்தது இங்கு ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சிகள்தானே... அந்த இயக்கங்களைத் தாண்டி, பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் என்ன தேவை இருக்கிறது?''

> ''ஆனால், கட்சியில் ரௌடிகளையும், சினிமா நடிகைகளையும் அல்லவா சேர்த்துக்கொண்டே போகிறீர்கள்?"

> ''சமூக வலைதளங்களில், 'இந்தி தெரியாது போடா' என்று சொன்னால், பதிலுக்கு 'தமிழ் தெரியாது போடா' என்று குழாயடிச் சண்டை போடுவதால் மட்டுமே தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?"

> ''தி.மு.க-வை விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் அ.தி.மு.க-வை விமர்சிப்பதில்லையே... 'பா.ஜ.க-வின் இந்தப் பாசத்துக்குக் காரணம், அதன் கைப்பாவையாக அ.தி.மு.க இருப்பதுதான்' என்று கூறப்படுவது உண்மைதானா?''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3mBtbZO > "பா.ஜ.க-வில் ரௌடிகள் சேர்ந்ததைக் கடுமையாக எதிர்க்கிறேன்!" - அண்ணாமலை அதிரடி https://bit.ly/3mBtbZO

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு