Published:Updated:

`என் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார்கள்!' - தமிழக பா.ஜ.க தலைவர் பதவி குறித்து மஹாலக்ஷ்மி

`டெல்லித் தலைமையில் உள்ளவர்களுக்கு இவரை நன்றாகத் தெரியும். தமிழகத் தலைவர் பொறுப்புக்கு இவரைத்தான் சிபாரிசு செய்வார்கள்'

மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி

மதுரையின் பவர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார் என்று ஆதரவாளர்களால் புகழ்ந்து அடிக்கடி வாழ்த்து போஸ்டர்களில் காட்சி தரும் மஹாலக்ஷ்மியைப் பார்த்து பா.ஜ.க தலைமை நிர்வாகிகளே கொஞ்சம் ஜெர்க் ஆவார்கள்.

மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி

அதே நேரம், கட்சி நிகழ்ச்சிகளுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு வருவதற்கு இவரே காரணமாக இருப்பதால், இதுபோன்ற அவரின் சுய விளம்பர புரமோஷனை கட்சியினர் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்.

`ஜெயலலிதாதான் இன்ஸ்பிரேஷன்!' -தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமான ஜீவஜோதி

தமிழக பா.ஜ.க-வுக்கு அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளவர் என்று சிலரின் பெயர்களை அவ்வப்போது பா.ஜ.க-விலுள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் பரப்பி வருகின்றனர். ஆனால், `அவர்களெல்லாம் கிடையாது. அடுத்து தலைவராகப் போகிறவர் எங்கள் அக்காதான்' என்கிறார்கள் மஹாலக்ஷ்மியின் ஆதரவாளர்கள்.

மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி

``பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். பல மொழிகள் தெரியும். இவர் படிக்காத படிப்பே இல்லை, பெயருக்குப் பின்னால் அவ்வளவு பட்டங்கள் உள்ளன. தொழில் நிறுவனம் நடத்துகிறார். ஆயிரக்கணக்கான பெண்களை வைத்து சுய உதவிக்குழுக்களை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

இவர் கட்சியில் இருப்பதால்தான் சௌராஷ்டிரா மக்கள் பா.ஜ.க-வை தீவிரமாக ஆதரிக்கிறார்கள். கட்சி நிகழ்சிகளுக்கு நன்றாக செலவு செய்கிறார். அது மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் பல லட்சங்களை செலவு செய்து நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். பா.ஜ.க-வின் டெல்லி தலைமையில் உள்ளவர்களுக்கு இவரை நன்றாகத் தெரியும். தமிழகத் தலைவர் பொறுப்புக்கு இவரைத்தான் சிபாரிசு செய்வார்கள்'' என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மியிடம், ``தமிழக பா.ஜ.க-வின் தலைவராக வருவதற்கான வாய்ப்பு எப்படியுள்ளது?'' என்று கேட்டோம்.

``தற்போது மாநில மகளிரணித் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். கட்சியில் 22 வருடங்களாக இயங்கி வருகிறேன். என்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறேன். அது கட்சிக்குத்தான் ஆதரவைப் பெற்றுத் தருகிறது'' என்றவரிடம்,

மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி

``தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்களா?'' என்றோம், ``நிச்சயமாக பல தலைவர்கள் என் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார்கள். பார்க்கலாம்'' என்றார் நம்பிக்கையோடு.