Published:Updated:

`மாவட்டம் நல்லா இருக்கு, கலகம் ஏற்படுத்தப் பார்க்கிறார்!'-சிவபதிக்கு எதிராகப் பொங்கும் அரசு கொறடா

அரசு கொறடா ராஜேந்திரன்

``சிவபதியால் அவருடைய சொந்த ஊரில் எதையும் செய்ய முடியாமல் அடுத்த மாவட்டத்தில் மூக்கை நுழைப்பது சரியா. இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.''

`மாவட்டம் நல்லா இருக்கு, கலகம் ஏற்படுத்தப் பார்க்கிறார்!'-சிவபதிக்கு எதிராகப் பொங்கும் அரசு கொறடா

``சிவபதியால் அவருடைய சொந்த ஊரில் எதையும் செய்ய முடியாமல் அடுத்த மாவட்டத்தில் மூக்கை நுழைப்பது சரியா. இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.''

Published:Updated:
அரசு கொறடா ராஜேந்திரன்

``தனது தோல்வியை மறைக்க வேண்டும். மீண்டும் எடப்பாடியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே நல்லா இருக்கும் மாவட்டத்தில் குட்டிக் கழகம் ஏற்படுத்த நினைக்கிறார் என்.ஆர் சிவபதி. அவர் மீது நடவடிக்கை எடுங்கள்'' என்று அரசுக் கொறடா ராஜேந்திரனும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கமும் சேர்ந்து முதல்வரிடம் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

`பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 60 சதவிகிதம் முத்தரையர் வாக்குகள் இருக்கின்றன. நான் போட்டியிட்டால் கண்டிப்பாக வேந்தரை எளிதாகத் தோற்கடித்துவிடுவேன்' என்று கூறி முதல்வர் எடப்பாடியிடம் சீட் வாங்கினார் சிவபதி. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியிலிருந்த பாரிவேந்தர் (ஐ.ஜே.கே.) 6,83,697 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் பாரிவேந்தர். அ.தி.மு.க-விலிருந்து விலகிச்சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து எடப்பாடியிடம் இழந்த பெருமையை நிலைநாட்டத் தீவிரமாக முயன்று வருகிறார் சிவபதி. இதில்தான் சர்ச்சைகள் எழத்தொடங்கியுள்ளன.

என்.ஆர்.சிவபதி
என்.ஆர்.சிவபதி

என்ன நடந்தது என்று கொறடாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``முன்னாள் அமைச்சர் சிவபதி எடப்பாடியிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்பதற்காக நல்லா இருக்கும் மாவட்டத்தில் கலகத்தை ஏற்படுத்த நினைக்கிறார்'' என்று ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார்கள்.

``அரசு கொறடாவான தாமரை ராஜேந்திரனுக்கும் அதே தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான ராமஜெயலிங்கத்துக்கும் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.ம.மு.க-வில் அம்மா பேரவை துணைச்செயலாளராக இருந்த அண்ணாதுரையையும் மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு முதல்வரிடம் இணைப்பு விழா நடத்தியிருக்கிறார் சிவபதி. அத்தோடு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.பி-யான சந்திரகாசிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூரில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு திரிகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு நான் சொல்லும் நபரைத்தான் எங்கள் மாமா (எடப்பாடி) போடப் போகிறார் என்று அங்கும் பிரச்னை செய்துவருகிறார். அதுவும் அங்கிருக்கும் மாவட்டச் செயலாளர் ஆர்.டி ராமச்சந்திரனுக்குத் தெரியும். சிவபதியால் அவருடைய சொந்த ஊரில் எதையும் செய்ய முடியாமல் இதுபோன்ற பிரச்னைகளை அடுத்த மாவட்டங்களில் செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் சிவபதி மீது நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைக்கும் அவரின் அதிகப்படியான செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது எங்கள் அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகிகளின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது'' என்று முடித்துக்கொண்டார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தகவலைச்செல்லி என்.ஆர் சிவபதியிடம் பேசினோம். அவர் முழுமையாகக் கேட்டுக்கொண்டு நேரில் வாங்க என்று போனை துண்டித்தார். பிறகு தொடர்புகொண்டோம். போனை எடுக்கவில்லை. அவர் தன்னுடையே விளக்கத்தைக் கூறினால், உரிய பரிசீலனைக்குப் பிறகு அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism