Published:Updated:

'நான் ரஜினிக்கு ஆதரவளிப்பதைப் புரிந்துகொள்வது எப்படி?' - ராஜேந்திர பாலாஜி 'அடேங்கேப்பா' பேட்டி!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அரசியலைப் பொறுத்தவரை அதிசயமும் அற்புதமும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என இவர்கள் எல்லோருமே முதல்வரானது அதிசயம்தான்.

துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றிப் பேசி ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் தகிக்கவைத்திருக்கிறார் ரஜினிகாந்த். துணை முதல்வரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை அனைவரும் ரஜினிகாந்தின் பேச்சைக் கண்டித்துப் பேச, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ 'ரஜினி பேசியதில் தவறு இல்லை' என்று 'யூ டர்ன்' எடுத்து திகைக்கவைத்திருக்கிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 'இதெப்படி இருக்கு?' அரசியலைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

''துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலரும் ரஜினிகாந்த்தின் பேச்சை விமர்சிக்கும்போது, நீங்கள் மட்டும் ஆதரவு தெரிவிப்பது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகாதா?''

''ரஜினிகாந்தை எதிர்க்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு கிடையாது. ரஜினிகாந்த் பற்றிய கேள்வி வந்தபோது, 'பெரியார் பற்றிய பேச்சை அவர் தவிர்த்திருக்கலாம்' என்றுதான் துணை முதல்வர் சொன்னாரே தவிர, ரஜினிகாந்தை பெரிதாகக் கண்டித்தெல்லாம் எதுவும் சொல்லவில்லை. அதேசமயம், என்னுடைய நிலையிலிருந்து நான் என் கருத்தைச் சொல்கிறேன். பெரியார் பற்றி அவமரியாதையாக ரஜினிகாந்த் எதுவுமே பேசியிராத சூழலில், அவருக்கு எதிராக கொடும்பாவி எரிப்பது, கட் அவுட் உடைப்பது, வீட்டை முற்றுகையிடுவது என திராவிடர் கழகத்தினர் செய்த அக்கிரமங் களைக் கண்டித்து நான் குரல்கொடுத்தேன். இதில் என்ன தவறு? இந்தக் கொடுமைகளைக் கண்டு ஒரு தமிழனாக, ஓர் அமைச்சராக எதிர்த்துக் குரல்கொடுக்காமல் இருந்தால், அதுதான் சமூகத்துக்கு நான் இழைக்கின்ற அநீதி!''

மறுபடியும் சொல்கிறேன்... நான் யாரையும் சண்டைபோடச் சொல்லவில்லை. ரஜினிகாந்த் கொடும்பாவியை எரிப்பதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்? அப்படியென்றால், ரஜினியையும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் நீங்கள் அச்சுறுத்துகிறீர்கள் என்றுதானே அர்த்தம்!

''அதிசயம் - அற்புதம் என அ.தி.மு.க-வை நேரடியாக அட்டாக் செய்த ரஜினிகாந்துக்கு நீங்கள் ஆதரவளிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?''

''திட்டமிட்டு எவரையும் வெறுத்துப் பேசக்கூடியவர் அல்ல ரஜினிகாந்த். அந்தந்த நேரங்களில் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசுகிறார். எல்லா கட்சித் தலைவர்களையும் அவர் வாழ்த்தவும் செய்திருக்கிறார், விமர்சனமும் செய்திருக்கிறார். விமர்சனம் செய்தவர்களையெல்லாம் நாங்கள் எதிரிகளாகவே பார்க்க முடியாது. விமர்சனங் களில் உள்ள நியாயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ரஜினியின் கருத்தை பொதுவான கருத்தாக மட்டும் பார்க்க வேண்டுமே தவிர, பிரச்னைக்குரிய கருத்தாக விவாதம் செய்து அவரை குற்றவாளியாகப் பார்க்க வேண்டியதில்லை. விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/37EL4PE

அரசியலைப் பொறுத்தவரை அதிசயமும் அற்புதமும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என இவர்கள் எல்லோருமே முதல்வரானது அதிசயம்தான். அடுத்து 'நாமும் முதலமைச்சர் ஆக வேண்டும்' என எவரும் நினைத்திருந்து, அது நடந்தாலும் அதிசயம்தான். இப்படி, அரசியலில் எது நடந்தாலும் அது அதிசயம் - அற்புதம்தான். இதைத்தான் ரஜினிகாந்தும் சொல்லியிருக்கிறார். அதை ஏன் அ.தி.மு.க-வுக்கு எதிரான கருத்தாக நீங்கள் பார்க்கிறீர்கள்?''

'' 'ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருப்பது எனக்கு சங்கடமாக இருக்கிறது' என்று நீங்கள் கூறியிருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?''

''அரிவாள், கத்தி, துப்பாக்கி வைத்துக்கொண்டு மிரட்டி உருட்டுவதெல்லாம் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல; அனைவருக்கும் சொந்தமானவை தான். கத்தியை எடுத்துக்கொண்டு வருகிறவனுக்கு எதிராக நாம் குச்சியை வைத்து ஆட்டிக்கொண்டிருக்க முடியாது; கத்தியை காட்ட வேண்டும். குறிப்பிட்ட ஓர் அமைப்பைச் சார்ந்தவர்கள், ரஜினிகாந்த் மற்றும் இந்து கடவுள்களைப் பற்றி கெட்டவார்த்தைகளைப் பேசிக்கொண்டு அவர் வீடு நோக்கிப் போகிறார்கள். அ.தி.மு.க தலைவர்களைப் பற்றி இப்படியொரு விமர்சனம் வந்தால், நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போமா? ரஜினிக்காக உயிரைக் கொடுக்கிற ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். எங்களைப்போல், ரஜினி ரசிகர்களும் மாற்று நடவடிக்கைகளில் இறங்கினால்தானே அவர்கள் பயப்படுவார்கள்!''

''ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரே இதுபோல் வன்முறையைத் தூண்டிவிடலாமா?''

''அவர்களை வெட்டுங்கள்; இவர்களை அடியுங்கள் என வன்முறையைத் தூண்டி விடவில்லை. அவர்கள் நூறு பேர் வந்தால், நீங்கள் 500 பேராகத் திரண்டு நின்றால்தானே எதிரில் நிற்பவனுக்கு பயம் வரும். அடிக்கு அடி; ரத்தத்துக்கு ரத்தம்... இதுதான் இனி சரிப்பட்டுவரும். ஒரு சாரார் மட்டுமே பயங்கர வாதத்தை வைத்துக்கொண்டு மற்ற சமுதாயங்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தால், அதை எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்?''

'நான் ரஜினிக்கு ஆதரவளிப்பதைப் புரிந்துகொள்வது எப்படி?' - ராஜேந்திர பாலாஜி 'அடேங்கேப்பா' பேட்டி!

''பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது' என்று குற்றம்சாட்டிவரும் வேளையில், அ.தி.மு.க அமைச்சரான நீங்கள் இப்படிப் பேசுவது தவறில்லையா?''

''மறுபடியும் சொல்கிறேன்... நான் யாரையும் சண்டைபோடச் சொல்லவில்லை. ரஜினிகாந்த் கொடும்பாவியை எரிப்பதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்? அப்படியென்றால், ரஜினியையும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் நீங்கள் அச்சுறுத்துகிறீர்கள் என்றுதானே அர்த்தம்! இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ரஜினிக்கு எதிராக கொடும்பாவி எரித்தால், ரசிகர்களாகிய நீங்களும் அவர்களுக்கு எதிராக கொடும்பாவி எரியுங்கள் என்றுதான் சொல்கிறேன்!''

> ''அமைச்சர் பாஸ்கரன் 'பா.ஜ.க-விலிருந்து விலக நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்' என்கிறாரே, உண்மைதானா?''

> ''அ.தி.மு.க அரசை, பா.ஜ.க பிரமுகர்கள் தான் ஆட்டுவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதுபோல், அமைச்சர் பாஸ்கரனை மிரட்டும்விதமாக 'ஹலோ ராஜ்பவனா...' என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறாரே எஸ்.வி.சேகர்?''

> ''அ.தி.மு.க - பா.ஜ.க என இரு கட்சிகளுமே கூட்டணியிலிருந்து விலகிவிட நினைப்பதால் தான் தொடர்ந்து உரசிக்கொள்கின்றனவா?''

> ''திராவிடக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜ.க மீது தொடர்ந்து தனிப்பட்ட கரிசனம் காட்டிவருவதன் ரகசியம் என்ன?''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > அடிக்கு அடி; ரத்தத்துக்கு ரத்தம்... இனிமேல் இதுதான்! - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி https://www.vikatan.com/government-and-politics/politics/minister-rajendra-balaji-interview

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு