Published:Updated:

"தமிழகத்தில் எடுபடாது!" - பெரியார் மீதான பா.ஜ.க விமர்சனத்துக்கு செல்லூர் ராஜு பதில்

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

நான் உட்பட பலர் அரசியலில் மேலே வரவும், இன்று கல்வியிலும், அதிகாரமிக்க பதவிகளிலும் சாதாரண மக்கள் உட்காரக் காரணமே பெரியார்தானே

செல்லூர் ராஜு என்றால் தெர்மாகோல், சயின்டிஸ்ட், மதுரையை சிட்னியாய் மாற்றும் குறிக்கோள் என்று கேலி, கிண்டல் மீம்ஸ் நாயகனாக இருந்தார். ஆனால் ரஜினி - பெரியார் சர்ச்சையில் செல்லூர் ராஜு பேசியதைப் பார்த்ததும், 'அட செல்லூர் ராஜுவா இப்படி?' என்று பலருக்கும் ஆச்சர்யம். அவருடன் ஒரு சந்திப்பு...

"சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், 'நாங்கள் திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர்கள்தான், பெரியாரைப் பற்றித் தெரியாமல் ரஜினி பேசியதால் பெரியார் பெயர் மீண்டும் டிரெண்டாகியுள்ளது என்று பேசினீர்கள், பெரியார் மீது அவ்வளவு ஈடுபாடா?"

"என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நான் உட்பட பலர் அரசியலில் மேலே வரவும், இன்று கல்வியிலும், அதிகாரமிக்க பதவிகளிலும் சாதாரண மக்கள் உட்காரக் காரணமே பெரியார்தானே! பெரியார் இல்லையென்றால் தமிழகத்தில் சமூக மாற்றமே வந்திருக்காது.

அதெல்லாம் தமிழகத்தில் எடுபடாது. சும்மா பேசிட்டுப் போக வேண்டியதுதான். பெரியாரின் கொள்கைகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சேர்த்துதான்

பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட அறிஞர் அண்ணா, அண்ணாவைத் தலைவராக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், எம்.ஜி,ஆர் வழியில் வந்த ஜெயலலிதா, அவர்கள் வழியில் வந்த நாங்கள் எப்படி பெரியாரை மறக்க முடியும்? அப்படிப்பட்டவரின் முழு வரலாறும் தெரியாமல் யார் பேசினாலும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்." முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/38sZXoy

"பெரியார், பெரும்பாலான மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?"

"அதெல்லாம் தமிழகத்தில் எடுபடாது. சும்மா பேசிட்டுப் போக வேண்டியதுதான். பெரியாரின் கொள்கைகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சேர்த்துதான். வீட்டுக்குள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள பெண்கள் இன்று சுதந்திரமாக வெளியே வரவும், வேலை மற்றும் அரசியலுக்கு வரவும் காரணம் பெரியார்தான். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாடுபட்டவர் பெரியார். இன்று தமிழகத்தில் கோடிக்கணக்கான சுய உதவிக்குழுக்களில் பெண்கள் செயல்பட ஜெயலலிதா காரணம். அதற்குப் பெரியார் காரணம்."

"தமிழகத்தில் எடுபடாது!" - பெரியார் மீதான பா.ஜ.க விமர்சனத்துக்கு செல்லூர் ராஜு பதில்

> "திராவிட இயக்கச் சிந்தனை, பெரியார் கொள்கைகள் பற்றிச் சிறு வயதிலேயே தெரியுமா?"

> "பெரியார் இல்லையென்றால் இந்த மாற்றம் வந்திருக்காதா என்ன?"

> "பெரியார் பற்றி ரஜினி பேசியதை உங்களைப் போன்றவர்கள் எதிர்த்தபோது, அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் ஆகியோர் ஆதரித்துப் பேசுகிறார்களே?"

> "அ.தி.மு.க, திராவிடக் கொள்கைகளிலிருந்து விலகி விட்டது என்று தி.மு.க உட்பட பலரும் அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார்களே?"

> "பெரியாரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?"

- இந்தக் கேள்விகளுக்கு செல்லூர் ராஜு அளித்த பதில்களுடன் முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்காது!" https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-minister-sellur-raju

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு