பிப்ரவரி 5-ம் தேதி, தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இரு மொழிகளிலும் கோலாகலமாக நடைபெற்றது தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா. 23 ஆண்டுகள் கழித்து நடந்த குடமுழுக்கு விழாவில், தமிழக முதலமைச் சரும், துணை முதலமைச்சரும் கலந்துகொள்ளவில்லை! மற்ற அமைச்சர்களில் ஓ.எஸ்.மணியனைத் தவிர எவரும் கலந்துகொள்ளவில்லை. இவ்வளவு ஏன்... அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்கூட விழாவில் கலந்துகொள்ளவில்லை. ‘பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டால் பதவி பறிபோய்விடும் என்ற சென்டிமென்ட் காரணமாகவே அவர்கள் கலந்துகொள்ள வில்லை’ என்று பரவும் தகவல் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான அமைச்சர் துரைக்கண்ணு, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் காமராஜ் ஆகியோரும் குடமுழுக்கு விழாவைப் புறக்கணித் திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது, தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்ற 1000-வது ஆண்டு சதய விழாவில் அப்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் உட்பட பல அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் யாருக்கும் பதவி பறிபோகவில்லை’’ என்று சொல்லும் தி.மு.க-வினர், அ.தி.மு.க-வின் சென்டிமென்டைக் கிண்டலடிக்கின்றனர்.

இதுகுறித்து தங்கம் தென்னரசுவிடம் பேசினோம். ‘‘1997-ம் ஆண்டு குடமுழுக்கின்போது, அப்போதைய அமைச்சர் கோ.சி.மணி பெரிய கோயிலுக்கு பலமுறை வந்து சென்றுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முன்வாசல் வழியாகத்தான் பெரிய கோயிலுக்குள் சென்று பார்வையிட்டார். அவர்கள் யாரும் பதவி இழக்கவில்லை. ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்தார்கள்.

2010-ம் ஆண்டு 1000-வது ஆண்டு சதய விழாவுக்காக, நான் உட்பட அப்போது பதவியில் இருந்த பெரும்பாலான அமைச்சர்கள் முன்வாசல் வழியாகத்தான் பெரிய கோயிலுக்குள் சென்று வந்தோம். அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினும் அந்த வழியாகத்தான் கோயிலுக்குள் வந்தார். அந்த விழாவில் கலந்துகொள்ள வந்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, மேடைக்கு எளிதாகச் செல்வதற்காகத்தான், வேறு வழியைப் பயன்படுத்தினார். 1000-வது ஆண்டு சதய விழாவுக்குப் பிறகும் நாங்கள் அனைவருமே ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்தோம். கலந்துகொண்டவர்களில் ஒருவர்கூட பதவி இழக்கவில்லை. இனியும் இப்படி வதந்திகளை நம்புவது அறிவார்ந்த செயலல்ல’’ என்றார்.

அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசியபோது, ‘‘நான் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டேன். யாருக்கும் தெரியாமல், மக்களோடு மக்களாக கூட்டத்தில் நின்று குடமுழுக்கு நடப்பதைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டுக் கிளம்பிவிட்டேன்’’ என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, ‘‘பிப்ரவரி 4-ம் தேதி மருந்தீசுவரர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜையிலும், 5-ம் தேதி திருவண்ணா மலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தாலும், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் கலந்துகொள்ள இயலவில்லை’’ என்றார்.

*‘தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்முறைப்படிதான் குடமுழுக்கு நடத்த வேண்டும்’ என்று பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் வலியுறுத்திவந்தனர். அத்துடன், மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் தர வேண்டும்’ என உத்தரவிட்டது.

இதையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி பெரிய கோயிலில் தமிழ் மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், தெய்வப் படிமங்கள், குண்டம், வேதிகை ஆகியவற்றின் அருகில் ஓதுவார்கள் அனுமதிக்கப் படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து பெ.மணியரசன் உள்ளிட்டோர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளையும் விழாக் குழுவினரையும் சந்தித்து, நீதிமன்ற உத்தரவுகுறித்து வலியுறுத்தினர். அதன் பிறகு, தமிழுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கன்று, கோபுரக் கலசம் அருகே தமிழ் மந்திரங்கள் ஒலித்தன.

* குடமுழுக்கை முன்னிட்டு, தஞ்சாவூர் நகர சுவர்களில் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் வரைந்த அழகிய ஓவியங்கள், மக்களை வெகுவாகக் கவர்ந்தன. ‘குடமுழுக்குக்குப் பிறகும் இவற்றை நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும்’ என கோரிக்கைவைக்கிறார்கள் தஞ்சை மக்கள்.

* குடமுழுக்கு விழாவுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழக அரசு மிகவும் கஞ்சத்தனமாகவே நடந்துகொண்டது. உலகப் புகழ்பெற்ற கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கு வெறும் 75 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியது. நன்கொடை யாளர்கள் கொடுத்த தொகையினாலேயே குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.