Published:Updated:

`அமைச்சர்களின் ஊழல் 2021 ஏப்ரலுக்குப் பின் வெளிவரும்!' - மதுரையில் டி.டி.வி.தினகரன் அதிரடி

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க அரசையும் முதல்வர் பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

''அரசன் எவ்வழியோ முறைகேடும் அவ்வழியிலேயே நடக்கிறது, எடப்பாடி பழனிசாமி ஆட்சி கம்பெனிபோல நடக்கிறது'' என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்
ஈ.ஜெ.நந்தகுமார்

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரை வந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, ''குரூப்-4 தேர்வில் சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருப்பது நம்பும்படியாக இல்லை. அரசன் எவ்வழியோ முறைகேடும் அவ்வழியிலயே நடக்கிறது, எடப்பாடி பழனிசாமி ஆட்சி கம்பெனிபோல நடக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் உண்மை வெளிவரும் வகையில் முறையான விசாரணை நடத்த வேண்டும். ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

தமிழக அரசுத் துறைகளில் நடைபெறும முறைகேடுகள் குறித்து தி.மு.க-வுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறும் அறிக்கை மோதல் நடக்கிறது. கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால் முறைகேடுளை மறைக்க முடியும். அமைச்சர்களின் ஊழல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பின் வெளிவரும்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் அமைச்சர்களின் தலையீடு உள்ளது. துறைகளில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி நேர்மையான அதிகாரிகளை நியமிக்கச் சொன்னதால்தான் எங்களுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் அப்போது சண்டை போட்டனர். எடப்பாடி தன்னிச்சையாகச் செயல்பட முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. மாநகராட்சித் தேர்தல் தேதி அறிவிப்பது சந்தேகம்தான்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு