Published:Updated:

விஜயபாஸ்கரின் `கொசுக்கடி' பாலிடிக்ஸ்... முதல்வர் பதவிக்காக `கம்பு சுத்தும்' அமைச்சர்!

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகரின் சார்பில் புதிய கட்சிக்கான விண்ணப்பம், டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குப் போயிருக்கிறது

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

மாநகராட்சிப் பூங்காவுக்கு வரச்சொல்லியிருந்த கழுகார், தாமதமாக வந்தார். ''சீக்கிரமா வரக் கூடாதா... கொசுக்கடி பின்னிவிட்டது!'' என்று கோபம் காட்டினோம்.

''இங்கேயும் அதே பிரச்னையா... இந்தக் கொசுக்களைவைத்து தமிழக அமைச்சர்களுக்குள்ளேயே அடிதடி ஆரம்பமாகியிருக்கிறது!'' என்ற கழுகாரிடம் ''அதிலிருந்தே ஆரம்பியும்!'' என்றோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2MDizcK

''சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கொசு கடிப்பதால்தான் காய்ச்சல் வருகிறது. கொசு கடித்த பிறகுதான் அது சுகாதாரத் துறைக்குள் வரும். கொசுவைக் கட்டுப்படுத்துவது உள்ளாட்சித் துறையைச் சேர்ந்தது' எனக் கொளுத்திப் போட்டிருந்தார். இதில்தான் இப்போது பாலிடிக்ஸ் ஆரம்பித்திருக்கிறது!''

எப்படி இருந்தாலும் கட்சிரீதியாக சில அதிரடி முடிவுகளை எடுக்கப்போகிறாராம் எடப்பாடி. சசிகலாவின் விடுதலை பற்றி பல்வேறு தகவல்கள் பரபரக்கின்றன.

''என்ன பாலிடிக்ஸ்?''

"உள்ளாட்சித் துறைதான் இதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். அதை கவனிக்க வேண்டியது அந்தத் துறைக்குரிய அமைச்சர்தான். அவரைச் சீண்டும்விதமாகவே அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படிப் பேசியிருக்கிறார் என்கிறார்கள். விஜயபாஸ்கர் தரப்புக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டபோது மேற்கண்ட அமைச்சர் தரப்பிலிருந்து எதுவும் உதவவில்லை என்பதே சுகாதாரத் துறை அமைச்சரின் கோபத்துக்குக் காரணமாம்!''

''இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமாம்?''

''எப்படி இருந்தாலும் கட்சிரீதியாக சில அதிரடி முடிவுகளை எடுக்கப்போகிறாராம் எடப்பாடி. சசிகலாவின் விடுதலை பற்றி பல்வேறு தகவல்கள் பரபரக்கின்றன. அதனால், எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென நினைக்கிறார். அ.தி.மு.க பொதுக்குழுவை இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு நடத்தலாமா, உள்ளாட்சித் தேர்தலை நடத்திய பிறகு நடத்தலாமா என்றும் ஆலோசித்துவருகிறாராம்.”

''ஓஹோ!''

''வேறு கட்சி மேட்டர் ஏதாவது?''

''தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகரின் சார்பில் புதிய கட்சிக்கான விண்ணப்பம், டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குப் போயிருக்கிறது. ஆனால், அது ரஜினியுடைய விண்ணப்பம் இல்லை. 'சங்கம்' தொடர்புடைய விவகாரத்துக்குப் பெயர்பெற்ற நடிகர் அவர்!'' என்ற கழுகார் சிறகுகளை விரித்தார்.

*

விஜயபாஸ்கரின் `கொசுக்கடி' பாலிடிக்ஸ்... முதல்வர் பதவிக்காக `கம்பு சுத்தும்' அமைச்சர்!

முதல்வர் பதவிக்கு எனக்கும் ஒரு சான்ஸ்!

வாயைத் திறந்தாலே சர்ச்சையை வீசும் அமைச்சர் ஒருவர், கடந்த வாரம் நண்பர்களுடன் தாகசாந்தியில் அமர்ந்துள்ளார். ''இப்படி குண்டக்க மண்டக்கப் பேசிட்டு இருக்கீங்க... இப்ப கேஸ் வரைக்கும் வந்துடுச்சுல்ல'' என்று ஒரு நண்பர் கேட்க, "யோவ், மோடி சப்போர்ட் இருக்கிற வரைக்கும்தான் எடப்பாடிக்குப் பதவி. ஒருவேளை எடப்பாடியைத் தூக்கணும்னு டெல்லி முடிவுபண்ணிட்டா, அவங்களுக்கு தோதான ஆளைத்தான் முதல்வர் பதவிக்கு தேடுவாங்க. நான் டி.வி-யில பேசுறதையெல்லாம் மோடி பார்த்துட்டு இருப்பாரு. முதல்வர் பதவிக்கு எனக்கும் ஒரு சான்ஸ் இருக்குல்ல. அதுக்காகத்தான் இப்படி கம்பு சுத்துறேன். எடப்பாடியே முதல்வராகும்போது நான் ஆகக் கூடாதா?" என்று கூற, நண்பர்கள் வட்டாரம் கிறுகிறுத்துவிட்டதாம்!

- இடைத்தேர்தல் முடிவைவைத்து பலமான கணக்குகள் ஓடுகிறது. அது தொடர்பான கழுகாரின் அப்டேட்ஸ்களை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: விக்கிரவாண்டியில் தோற்பது அ.தி.மு.க-வுக்கு நல்லது! - பின்னணியில் பலே கணக்கு https://www.vikatan.com/government-and-politics/policies/mister-kazhugu-politics-and-current-affairs-by-election

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |