Published:Updated:

பேச்சு பேச்சுதான் இருக்கணும்!

பேச்சு பேச்சுதான் இருக்கணும்!
பிரீமியம் ஸ்டோரி
பேச்சு பேச்சுதான் இருக்கணும்!

கொரோனா காலத்தில் ஓடோடி வேலை பார்த்ததால், ஏழரை கிலோ எடை குறைந்துவிட்டேன். எனக்கும் பி.பி., சுகர், தலைசுற்றல், மயக்கம் பிரச்னைகள் இருக்கின்றன

பேச்சு பேச்சுதான் இருக்கணும்!

கொரோனா காலத்தில் ஓடோடி வேலை பார்த்ததால், ஏழரை கிலோ எடை குறைந்துவிட்டேன். எனக்கும் பி.பி., சுகர், தலைசுற்றல், மயக்கம் பிரச்னைகள் இருக்கின்றன

Published:Updated:
பேச்சு பேச்சுதான் இருக்கணும்!
பிரீமியம் ஸ்டோரி
பேச்சு பேச்சுதான் இருக்கணும்!

எடப்பாடி பழனிசாமி

‘‘ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று, தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று பெட்டியில் போட்டுப் பூட்டிவைக்கிறார். பெட்டி, பூட்டு என்று ஸ்டாலின் எந்தக் காலத்தில் இருக்கிறார்?’’

ஜெயக்குமார்

‘‘என்னை எதிர்த்து ராயபுரம் தொகுதியில் போட்டியிட முடியுமா என்று ஸ்டாலினிடம் சவால் விட்டிருந்தேன். அவர் பயந்துபோய் இந்தத் தொகுதிக்கு வரவில்லை. ஸ்டாலினுக்கு தைரியம், தெம்பு இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து நிற்கட்டும்!’’

திண்டுக்கல் சீனிவாசன்

‘‘தற்போது ஒரு சிலிண்டரின் விலை 4,500 முதல் 5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும். மேலும் ஸ்டவ் அடுப்புக்கு டீசல் தேவையில்லை.’’

விஜயபாஸ்கர்

‘’கொரோனா காலத்தில் ஓடோடி வேலை பார்த்ததால், ஏழரை கிலோ எடை குறைந்துவிட்டேன். எனக்கும் பி.பி., சுகர், தலைசுற்றல், மயக்கம் பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் மறந்து இயேசுநாதர் சிலுவையைச் சுமந்ததுபோல், நான் விராலிமலைத் தொகுதியைச் சுமந்துகொண்டிருக்கிறேன்!’’

செல்லூர் ராஜூ

‘‘அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார்தான் முதலமைச்சர் ஆவார். தி.மு.க எதிர்க்கட்சியாகக்கூட வரமுடியாது.’’

அன்புமணி ராமதாஸ்

‘‘பண்ருட்டி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு ரவுடி. கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் செய்பவர். ஆனால் அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன். அந்த வேல்முருகனை பா.ம.க-வுக்குக் கொண்டு வந்தவன் நான்.’’

பேச்சு பேச்சுதான் இருக்கணும்!

மன்சூர் அலிகான்

‘’தொகுதியில எங்க போனாலும், `பாய் எவ்ளோ பணம் வாங்கினீங்க... ஓட்டைப் பிரிக்கத்தானே நிக்கிறீங்க?’ன்னு எல்லாருமே கேக்கறாங்க. அதனால வாபஸ் வாங்கிக்கறேன்.’’

விஜய பிரபாகரன்

‘‘தே.மு.தி.க டெல்லிப் பக்கம் போகும்; உலக அளவில் இந்தக் கட்சியை எப்படிக் கொண்டுவரப்போகிறேன் என்று வெய்ட் பண்ணிப் பாருங்கள்!’’

திண்டுக்கல் லியோனி

‘’ஊழல் எஸ்.பி.வேலுமணியின் அராஜகத்துக்கு அடிக்கப்போகிறார் கார்த்திகேய சிவசேனாதிபதி சாவுமணி.’’

ராஜேந்திர பாலாஜி

“ராஜபாளையம் இனிமேல் நான் ஆளும் ராஜா ஆலயம்.”

ஹெச்.ராஜா

“ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகவே இருக்கும்.”

சீமான்

‘‘மோடி முகத்தில் தாடி வேண்டுமானால் வளருமே தவிர... தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது!’’

அண்ணாமலை

“செந்தில் பாலாஜியைத் தூக்கிப் போட்டு மிதித்தால் பல்லு கில்லெல்லாம் வெளியே வந்துவிடும். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அதை இங்கே காட்டவேண்டாம்னு நினைக்கிறேன்.’’