Published:Updated:

ராஜ்ய சபா சீட்: காங்கிரஸில் பி.சி-க்கும் பி.சி-க்கும் டஃப்... வெல்லப்போவது யார்?

பிரவீன் சக்ரவர்த்தி - பி.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு ராஜ்ய சபா சீட்டைப் பிடிப்பதற்கு காங்கிரஸில் கடும் மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ராஜ்ய சபா சீட்: காங்கிரஸில் பி.சி-க்கும் பி.சி-க்கும் டஃப்... வெல்லப்போவது யார்?

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு ராஜ்ய சபா சீட்டைப் பிடிப்பதற்கு காங்கிரஸில் கடும் மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
பிரவீன் சக்ரவர்த்தி - பி.சிதம்பரம்

நாடு முழுவதும் 57 ராஜ்ய சபா எம்.பி சீட்களுக்கானத் தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் 6 ராஜ்ய சபா சீட்கள் காலியாகிறது. ஒரு ராஜ்ய சபா எம்.பி-யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ-க்களின் வாக்குகள் தேவை. இதனடிப்படையில், 159 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள தி.மு.க கூட்டணி 4 எம்.பி-க்களையும், 70 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட அ.தி.மு.க கூட்டணி 2 எம்.பி-க்களையும் தேர்வுசெய்ய முடியும். இதனடிப்படையில், தி.மு.க சார்பில் எம்.பி தேர்தலில் போட்டியிடும் மூவரின் பெயரை முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் அறிவித்துவிட்டார். நான்காவது எம்.பி சீட் காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸில் யாருக்கு அந்த எம்.பி பதவி செல்லப்போகிறது? என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரிடம் பேசினோம். ``3 எம்.பி-க்களைத் தேர்வுசெய்ய வேண்டிய தி.மு.க-வுக்குள்ளும், 2 எம்.பி-க்களைத் தேர்வுசெய்ய வேண்டிய அ.தி.மு.க-வுக்குள்ளும் எழுந்திருக்கும் சச்சரவுகளுக்கெல்லாம் மேலாக காங்கிரஸில் எழுந்துவருகிறது. தி.மு.க-வில் தலைவராக ஸ்டாலின் ஒருவர்தான் இருக்கிறார், அ.தி.மு.க-வில் இருவர்தான் தலைவர்கள். ஆனால், காங்கிரஸிலோ தொண்டர்களைவிட தலைவர்கள்தான் அதிகம் என்ற அளவில் கோஷ்டி பூசல் இருக்கிறது. அந்தத் தலைவர்களுக்குள்தான், இந்த ராஜ்ய சபா சீட்டுக்கான மோதல் நடந்துவருகிறது. ஒரு சீட் காங்கிரஸுக்கு என்று ஒதுக்கியபோதே அனைவரது பேச்சிலும் உச்சரிக்கப்பட்டப் பெயர் பி.சி என்றழைக்கப்படும் ப.சிதம்பரம் மட்டுமே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது மராட்டிய மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டு, பணியாற்றிவரும் பி.சி-யின் பதவிக்காலமும் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. அதனால், மீண்டும் இந்த எம்.பி பதவியும் பி.சி-க்குத்தான் செல்லும் என்கிறார்கள். பல மாதங்களுக்கு முன்பாகவே முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இதுகுறித்த கோரிக்கையை பி.சி வைத்ததாக சொல்லப்படுகிறது.

ஸ்டாலின்- பி.சிதம்பரம்
ஸ்டாலின்- பி.சிதம்பரம்

அதனடிப்படையில்தான் ஸ்டாலின் ஒரு சீட்டை காங்கிரஸுக்கு ஒதுக்கினார் என்ற தகவலும் ஓடுகிறது. ஆனால், ‘எத்தனை காலம்தான் ஒருவரே எம்.பி-யாகிக்கொண்டே இருப்பார்? ’ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி’ என்று காங்கிரஸில் செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறை பி.சி-க்குப் பொருந்தாதா? மகன் கார்த்தி சிதம்பரம் மக்களவை எம்.பி-யாக இருக்கும்போது, தந்தை மீண்டும் உடனடியாக ராஜ்ய சபா எம்.பி-யாக அமரவேண்டுமா?’ என்ற கேள்வி தற்போது கட்சிக்குள் பலமாக எதிரொலிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.சி உள்துறையில் இருந்து, பல்வேறு மத்திய அரசுப் பதவிகளை அலங்கரித்தவர். பலமொழிப் புலமை வாய்ந்தவர், பொருளாதாரம் அறிந்தவர், கட்சியையும் காத்துக்கொண்டு, ஆளும்கட்சியுடனும் மோதுவதற்கு தகுதியான நபர் என்றெல்லாம் சொல்கிறார்கள். பி.சி-க்கு கொடுக்கக் கூடாது என்றால், அவருக்கு நிகரான ஒருவரைக் காட்டுமாறு சிலர் கேட்கிறார்கள்.

ப.சிதம்பரம் , கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம் , கார்த்தி சிதம்பரம்

எனினும், பி.சி-க்குப் போட்டியாக இன்னொரு பி.சி-யை சிலர் கைகாட்டுகிறார்கள். அதாவது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் டேட்டா அனலிசிஸ் பிரிவுத் தலைவராக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தியைத்தான் இன்னொரு பி.சி. என்கிறார்கள். பழைய பி.சி-க்கு ஒருவேளை சீட் இல்லை என்றால், புதிய பி.சி-க்குத்தான் வாய்ப்பு அதிகமாம்.

பிரவீன் சக்ரவர்த்தி
பிரவீன் சக்ரவர்த்தி

இவர்கள் தவிர, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் கோதாவில் குதித்துள்ளார். ஏற்கெனவே, மாநிலத் தலைவராவதற்கு முன்பாக கடலூர் எம்.பி-யாக ஒருமுறை பணியாற்றி இருக்கிறார் அழகிரி. சிலபல ஆண்டுகளாக டெல்லி சோர்ஸ் விட்டுப்போய்விட்டது, அதனை ரிட்ரீவ் செய்ய ராஜ்ய சபா எம்.பி பதவியை எதிர்பார்க்கிறார் அழகிரி.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

அதற்குப் பதிலாக தற்போதிருக்கும் மாநிலத் தலைவர் பதவியை வேறொருவருக்கு விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறாராம் அழகிரி. அப்படி அழகிரிக்கு வாய்ப்படித்தால், அடுத்ததாக மாநிலத் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு ஒரு கும்பல் முட்டிமோதும்.

இவர்கள் அல்லாமல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, தமிழக காங்கிரஸின் செய்தித் தொடர்பாளரும் சீனியருமான ஹிதாயத்துல்லா என இன்னும் சிலரும் ஒரு சீட்டுக்காக முட்டிமோதுகிறார்கள். ‘தலைவராக இருந்து வெளியேறி, பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், கட்சியினர் தன்னை மறந்துவிடுவார்கள். அதனால், கரன்ட் அரசியலில் இருப்பதற்கு பதவி தேவை’ என்கிறது தங்கபாலு தரப்பு.

கே.வி.தங்கபாலு
கே.வி.தங்கபாலு

‘காங்கிரஸ் கட்சியிலும் சரி, தேர்தல்களிலும் சரி முஸ்லிம்களுக்கு ஒரு இடம்கூட கொடுக்கப்படவில்லை என்பதால், இந்த ஒரு சீட்டைக் கொடுக்க வேண்டும்’ என்கிறது ஹிதாயத்துல்லா தரப்பு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism