Published:Updated:

ஒப்பந்த ஓட்டுநர்கள்! - தனியார்மயமாகிறதா போக்குவரத்துத்துறை?

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

2018, அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்ட 321, 328 ஆகிய அரசாணையை வைத்துக்கொண்டு அதிகாரிகள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒப்பந்த ஓட்டுநர்கள்! - தனியார்மயமாகிறதா போக்குவரத்துத்துறை?

2018, அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்ட 321, 328 ஆகிய அரசாணையை வைத்துக்கொண்டு அதிகாரிகள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Published:Updated:
போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

“அரசுப் போக்குவரத்துத்துறையைத் தனியார்மயமாக்கும் எண்ணம் துளியும் இல்லை” என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில்தான் உறுதி கொடுத்தார். அதற்குள்ளாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. உண்மையில் என்ன நடக்கிறது?

ஒப்பந்த ஓட்டுநர்கள்! - தனியார்மயமாகிறதா போக்குவரத்துத்துறை?

அரசாங்கப் போக்குவரத்து ஊழியர் சங்க (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் தயானந்த்திடம் பேசியபோது, “532 பேரை ‘வொர்க்‌ஷாப் டிரைவர்கள்’ என்கிற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுக்கிறார்கள். அதுவும் நேரடியாக போக்குவரத்துக் கழகம் வேலைக்கு எடுக்கவில்லை, டெண்டர்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருப்பார்களே... அதேபோன்ற அவுட்சோர்ஸிங். பணிமனைகளில் பேருந்துகளை பார்க்கிங் செய்வது, பழுதான வண்டிகளை ஓட்டிவருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்வதற்காக இவர்களைப் பணி அமர்த்துவ தாகச் சொல்கிறார்கள். ஆனால், ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டால், இவர்களைப் பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்கும் நிலை உருவாகும். நூற்றுக்கணக்கான மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்த முடிவு ஆபத்தானது.

தயானந்த்
தயானந்த்

இது, அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் மயமாக்குவதை நோக்கிய முதல் படியாகவே தோன்றுகிறது. இதைக் கண்டித்து அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில், ஜூலை 18-ல் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம். அதனால், டெண்டரைத் திறக்கவில்லை. எங்களது கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு, அமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்பதாகச் சொல்லியிருக் கிறார்கள்” என்றார்.

நட்ராஜ்
நட்ராஜ்

தி.மு.க-வின் தொ.மு.ச பொருளாளர் நட்ராஜிடம் பேசியபோது, “2018, அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்ட 321, 328 ஆகிய அரசாணையை வைத்துக்கொண்டு அதிகாரிகள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கியது கலைஞர்தான். அது மீண்டும் தனியார் மயத்தை நோக்கிச் செல்வதை தொ.மு.ச வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. முதல்வர் மற்றும் அமைச்சரிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறோம்” என்றார்.

சிவசங்கர்
சிவசங்கர்

மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாமிடம் விளக்கம் கேட்டபோது, “வொர்க்‌ஷாப் ஓட்டுநர்கள் என்பவர்கள் ஏற்கெனவே மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இருக்கிறார்கள். இயக்கப்படாமல் இருக்கும் பேருந்துகளை அவர்களைக்கொண்டு இயக்கி, புதிதாகத் தேர்வு செய்யப்படுபவர்களை பணிமனைத் தேவைகளுக்குப் பயன்படுத்தப் போகிறோம். போக்குவரத்துக் கழகம் மூலம் நேரடியாக ஆட்களைத் தேர்வுசெய்வதற்கு என ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அதனால், தற்காலிகமாக இதுபோன்று வெண்டார்கள் மூலம் பணிக்கு எடுக்கிறோம். எந்நேரமும் ஒப்பந்தத்தை கேன்சல் செய்யும் அதிகாரம் போக்குவரத்துக் கழகத்துக்கு இருக்கிறது” என்றார்.