Published:Updated:

'டிகிரி வாங்கும் முன்பே ட்ரீட்மென்ட்?' - பாஜக நிர்வாகி மீதான சர்ச்சையும் பதிலும்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அலிஷா அப்துல்லா

சென்னையில் மருத்துவம் படிக்கும் பாஜக நிர்வாகி அலிஷா என்பவர் 'டிகிரி' வாங்கும் முன்பே 'ட்ரீட்மென்ட்' பார்த்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

'டிகிரி வாங்கும் முன்பே ட்ரீட்மென்ட்?' - பாஜக நிர்வாகி மீதான சர்ச்சையும் பதிலும்

சென்னையில் மருத்துவம் படிக்கும் பாஜக நிர்வாகி அலிஷா என்பவர் 'டிகிரி' வாங்கும் முன்பே 'ட்ரீட்மென்ட்' பார்த்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

Published:Updated:
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அலிஷா அப்துல்லா

பாஜக நிர்வாகி அலிஷா சமீபத்தில் இந்தி மொழி குறித்துப் பேசியது சர்ச்சை ஆனது. அப்போது அவர், 'எனக்குத் தமிழ் படிக்க கஷ்டமாக இருந்தது. ஆனாலும் என்னைத் தமிழ் படிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தனர். இந்தித் திணிப்பு என்று சொல்கிறார்களே... இது தமிழ்த் திணிப்பு இல்லையா... வட இந்தியாவில் செல்லும்போது நான்கு ஆண்கள் வந்து தொல்லை செய்தால் இந்தியில் கத்த முடியும், தப்பிக்க முடியும். இதற்காக இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இதற்குக் கடுமையான விமர்சனம் எழுந்தது. குறிப்பாக திமுக-வினர் கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கிருக்கிறார். அதாவது அலிஷா அப்துல்லா தனது படிப்பை முடிக்கும் முன்பே கிளினிக் ஒன்றை நடத்திவருவதாகக் கூறி ஆன்லைன் மூலமாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

பிஜேபி
பிஜேபி

மேலும் சிலர் ட்விட்டர் பக்கத்திலும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். குறிப்பாக, 'நீங்கள் இன்னும் மருத்துவம் படித்தே முடிக்கவில்லையே... எப்படி கிளினிக் நடத்துகிறீர்கள்?' என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும் சிலர், விதவிதமான 'மீம்ஸ்'களையும் பதிவிட்டுவருகின்றனர். மறுபுறம் இதற்கு அலிஷாவும் பதில் அளித்திருக்கிறார்.

அவரது பதிலில், 'நான் எனது மருத்துவப் பட்டப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். எங்களின் கிளினிக்கில் எம்பிபிஎஸ் படித்த இரண்டு மூத்த டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். நான் பட்டம் பெற்ற அழகுக்கலை நிபுணர். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எனது கிளினிக்கில் வந்து பார்க்கலாம். அழகுக்கலை நிபுணர்கள் லேசர் கருவிகளைப் பயன்படுத்த டாக்டராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

'டிகிரி வாங்கும் முன்பே ட்ரீட்மென்ட்?' - பாஜக நிர்வாகி மீதான சர்ச்சையும் பதிலும்
Premkumar SK

இது குறித்து நம்மிடம் பேசிய அலிஷா தரப்பினர், "இதற்கான விளக்கத்தை ட்விட்டரில் அலிஷா தெரிவித்துவிட்டார். இது தவறான குற்றச்சாட்டு. ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் எங்களுக்கு எவ்விதமான பின்னடைவும் இல்லை" என்றனர்.