Published:Updated:

``அதிமுக-வுக்கு இதுதான் என் இலவச ஆலோசனை!" - சொல்கிறார் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

``இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தேசியக் கட்சியிலோ, மாநிலக் கட்சியிலோ இரட்டைத் தலைமை என்பதே கிடையாது. இரட்டைக் குதிரையில் சவாரியோ, இரட்டைப் படகில் பயணமோ செய்ய முடியாது." - திருநாவுக்கரசர்

``அதிமுக-வுக்கு இதுதான் என் இலவச ஆலோசனை!" - சொல்கிறார் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

``இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தேசியக் கட்சியிலோ, மாநிலக் கட்சியிலோ இரட்டைத் தலைமை என்பதே கிடையாது. இரட்டைக் குதிரையில் சவாரியோ, இரட்டைப் படகில் பயணமோ செய்ய முடியாது." - திருநாவுக்கரசர்

Published:Updated:
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருச்சி தெப்பக்குளம் அருகேயுள்ள அருணாச்சல மன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருநாவுக்கரசர், ``அ.தி.மு.க-வில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனச் சொல்வதற்கு நான் ஜோசியர் கிடையாது. 45 - 50 வருடங்களாக அரசியலில் இருப்பவன் என்கிற முறையிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அந்தக் கட்சியில் இருந்தவன் என்கிற முறையிலுமே என்னுடைய கருத்தைச் சொல்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தேசியக் கட்சியிலோ, மாநிலக் கட்சியிலோ இரட்டைத் தலைமை என்பதே கிடையாது. இரட்டைக் குதிரையில் சவாரியோ, இரட்டைப் படகில் பயணமோ செய்ய முடியாது. ஒரு தலைமையாக அது இருந்தால்தான் சரியாக இருக்கும். அது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் அல்லது சசிகலாவாக இருக்க வேண்டும் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. அந்தக் கட்சியினுடைய தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து அந்தக் கட்சியில் யாரை விரும்புகிறார்களோ அவரைத் தேர்தெடுக்கலாம். அப்படித் தேர்ந்தெடுப்பவரின் தலைமையில் அந்தக் கட்சி செயல்படுவது நல்லது” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்
திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

தொடர்ந்து பேசியவர், ``மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி ஒரு வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். மோடியே ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்’ எனச் சொன்னார். ஆனால், இன்றைக்கு அவரே ‘பலமான எதிர்க்கட்சி இருக்க வேண்டும்’ என்கிறார். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல, ஜனநாயக நாட்டில் ஒருபக்கம் எதிர்க்கட்சியும், இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியும் இருப்பது தேவையான ஒன்று. எனவே, அ.தி.மு.க ஒரு வலுவான, பலமான எதிர்க்கட்சியாக இருக்க, ஒற்றைத் தலைமை தேவை. எனவே அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை என்கிற கோரிக்கை நியாயமானது. அதில் கருத்து வேறுபாடுகளோ, பிரச்னைகளோ வருகிறபோது அனைத்துத் தரப்பினரும் முறையாக நடந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து தண்ணீர் பாட்டில் வீசுவதோ, கூச்சல் போடுவதோ அநாகரிகமான ஒன்று. இது ஜனநாயத்தில் கண்டனத்துக்குரியது. அதனால், ஜனநாயகரீதியாக இந்தப் பிரச்னைகளுக்கு அவர்கள் தீர்வுகாண முற்பட வேண்டும். இதுவே என்னுடைய இலவச ஆலோசனை” என்றார்.