Published:Updated:

"சீமானுக்கு இதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் உண்டா?'' - தடதடக்கிறார் திருச்சி வேலுச்சாமி

உலகம் முழுக்க விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனாலும்கூட, ராஜீவ் காந்தி கொலையை விசாரிப்பதற்கென்றே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, இப்போது வரை சீமானிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை

வேலுச்சாமி
வேலுச்சாமி

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமானின் சர்ச்சைப் பேச்சு விவகாரம் அவ்வளவு சீக்கிரம் ஓயாதுபோலிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், ஈழத்தமிழர்கள், ஈழம் தொடர்பான இயக்கங்கள் மற்றும் அரசு விசாரணை அமைப்புகளின் கவனத்தை ஒருசேர திருப்பியிருக்கிறது, சீமானின் சர்ச்சைப் பேச்சு. சீமானுக்கு எதிரான போராட்டங்கள், கொடும்பாவி எரிப்பு என்று தமிழக காங்கிரஸார் கொந்தளிக்கிறார்கள். இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் 'ராஜீவ் படுகொலை - தூக்குக் கயிற்றில் நிஜம்!' என்ற புத்தகத்தை எழுதியவருமான திருச்சி வேலுச்சாமியைச் சந்தித்தோம். விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/31GHVe4

" '25 வருடங்களாக இதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். வேறு வேலை இல்லாததால், காங்கிரஸ்காரர்கள் பிரச்னை செய்கிறார்கள்' என்கிறாரே சீமான்?''

"என்னுடைய பார்வையில், ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப்புலிகளுக்கோ அல்லது தமிழர்களுக்கோ தொடர்பு இருப்பதாக சீமான் இதுவரை பேசியதில்லை. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் மற்றும் நான் தனித்தனியே எழுதிய புத்தக வெளியீட்டு விழாக்களிலும் சீமான் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அப்போதுகூட அவர், 'ராஜீவ் காந்தி படுகொலை, சர்வதேச சதி. இதில் தமிழர்கள் யாருக்கும் பங்கு இல்லை' எனப் பேசினார். அப்படி இருக்கும் போது இப்போது, 'நாங்கள்தான் கொன்றோம்' என்று அவர் பேசியிருப்பது உண்மை என்றால், கடந்த 25 ஆண்டுகளாக அவர் பேசிவந்தது பொய் என்றே ஆகிறது. இது ஒன்றும் வேடிக்கையான பேச்சு அல்ல... உலகையே உலுக்கிய கொலைச் சதியைப் பற்றியப் பேச்சு.''

"சீமானுக்கு இதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் உண்டா?'' - தடதடக்கிறார் திருச்சி வேலுச்சாமி

"சீமான் பேச்சின் பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதேனும் இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா?''

"உலகம் முழுக்க விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனாலும்கூட, ராஜீவ் காந்தி கொலையை விசாரிப்பதற்கென்றே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, இப்போது வரை சீமானிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. ஒருவேளை அவர்களுக்கு சீமானின் பேச்சு இன்னும் கேட்கவில்லையா அல்லது கேட்டும் கேளாததுபோல் நடிக்கிறார்களா? ஆக, சி.பி.ஐ-யின் கரங்களைக் கட்டிப் போட்டிருப்பது மத்திய பா.ஜ.க அரசுதானோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது!''

"அதேசமயம் 'அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்தது ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு' என்ற சீமானின் பேச்சில் உண்மை இருக்கிறதுதானே?''

"இந்திய அமைதிப்படை என்பதே நம் ராணுவத்தின் ஒரு பகுதிதான். அதில், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில வீரர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அந்தப் படைக்கு தலைமை ஏற்றிருந்தவர் ஒரு சீக்கியர். ஆக, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமைதிப்படை வேலை செய்தது எனச் சொன்னால், படையில் இடம் பெற்றிருந்த தமிழர்களைக் குற்றம்சாட்டுகிறாரா சீமான் அல்லது தலைமைப் பொறுப்பேற்றிருந்த சீக்கியரை குற்றம்சாட்டுகிறாரா? இதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் சீமானுக்கு உண்டா?''

"எழுவர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி காட்டிவரும் எதிர்ப்பு நிலையில், உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?"

"சீமானுக்கு இதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் உண்டா?'' - தடதடக்கிறார் திருச்சி வேலுச்சாமி

"காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய தொண்டர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை என்ற இந்த வழக்கைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்டவர் களோடு எனக்கிருந்த தொடர்பால், உலகத்துக்கே தெரியாத ஒரு மறுபக்கம் எனக்குத் தெரிந்திருந்தது. என் உயிருக்கே ஆபத்து இருந்தாலும்கூட அதையெல்லாம் பொருட்படுத்தாமல், எனக்குத் தெரிந்த உண்மையை ஜெயின் கமிஷனிடமும் வாக்குமூலமாகக் கொடுத்துவிட்டேன். 'இந்த வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படவில்லை' என்று ஜெயின் கமிஷனும் தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டது. அதனால்தான் 20 ஆண்டுகளைக் கடந்தும் இப்போதுவரை விசாரணை நடந்துவருகிறது. ஆனாலும், இந்த விசாரணையை ஏன் விரைவு படுத்தவில்லை என்பதுதான் என் கேள்வி!"

> "இந்தியா திரும்பிய அமைதிப்படையை, 'வரவேற்க மாட்டேன்' என்று அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதே அமைதிப்படை அத்துமீறல்களை எடுத்துக்காட்டுகிறதுதானே?'' > "இலங்கை இறுதிப்போரின்போது, அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகள் செய்தது உண்மைதானே?'' > "கடந்த வருடம் இந்தியா வந்திருந்த இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, 'இறுதிப்போரில், இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது' என்று அன்றைய மத்திய காங்கிரஸ் அரசைப் பாராட்டினாரே?'' > " 'இந்திய அரசு, எங்களுக்கு உதவியது' என்ற ராஜபக்சேவின் கூற்றை எந்தக் காங்கிரஸ் தலைவரும் மறுக்கவில்லையே?'' > "ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தண்டனை அனுபவித்துவரும் எழுவரை விடுதலை செய்யக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறதே?"

- இந்தக் கேள்விகளுக்கு திருச்சி வேலுச்சாமி அளித்துள்ள விரிவான பதில்களை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > சி.பி.ஐ ஏன் சீமானை விசாரிக்கவில்லை? - ராஜபக்‌சே ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல! https://www.vikatan.com/social-affairs/politics/spokesperson-trichy-velusamy-interview

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |