Published:Updated:

டி.டி.வி.தினகரன் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி - பிறந்தநாளில் விரைந்த சம்பந்தி

டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் ஃபுட் பாய்சன் ஆகியிருக்கிறது. இதனால் கடந்த இரண்டு நாள்களாகவே வயிற்றில் பிரச்னை இருந்திருக்கிறது. சொரிமானக் கோளாறாலும் அவதிப்பட்டிருக்கிறார்.

டி.டி.வி.தினகரன் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி - பிறந்தநாளில் விரைந்த சம்பந்தி

டி.டி.வி.தினகரன் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் ஃபுட் பாய்சன் ஆகியிருக்கிறது. இதனால் கடந்த இரண்டு நாள்களாகவே வயிற்றில் பிரச்னை இருந்திருக்கிறது. சொரிமானக் கோளாறாலும் அவதிப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தினகரன் நலமாக இருப்பதாக அ.ம.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன்
தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, கடந்த 28-ம் தேதி தஞ்சாவூர் செனறார். 29-ம் தேதி மன்னார்குடியில் நடைபெற்ற திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் மீண்டும் தஞ்சாவூருக்குச் சென்று மகர்நோன்பு சாவடியிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினகரனின் சம்பந்தியான காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு 1-ம் தேதி பிறந்தநாள் என்பதால் அவருக்கு நேரில் வாழ்த்து சொல்வதற்காக தினகரன் தஞ்சாவூரில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணசாமி வாண்டையார் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரின் ஆதரவாளர்கள் பலர் காலை முதலே வீட்டில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் தினகரன் போனிலேயே வாழ்த்து கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தினகரனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அவசரமாக தினகரன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தினகரனின் மனைவி உடனிருந்து அவரை கவனித்துவருகிறார்.

சம்பந்தி தினகரனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் பதறிப்போன கிருஷ்ணசாமி வாண்டையார், இரவே மருத்துவமனைக்கு ஓடிச் சென்று பார்த்திருக்கிறார். இது குறித்து தினகரன் வட்டாரத்தில் பேசினோம். `டி.டி.வி.தினகரன் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் ஃபுட் பாய்சன் ஆகியிருக்கிறது. இதனால் கடந்த இரண்டு நாள்களாகவே வயிற்றில் பிரச்னை இருந்திருக்கிறது. சொரிமானக் கோளாறும் ஏற்பட்டிருக்கிறது.

கிருஷ்ணசாமி வாண்டையார்-டி.டி.வி.தினகரன்
கிருஷ்ணசாமி வாண்டையார்-டி.டி.வி.தினகரன்

இதைத் தொடர்ந்து லேசான காய்ச்சலும் அடிக்க, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு பத்து மணியளவில் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தோம். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை கொடுக்கப்பட்டதையடுத்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருக்கிறது’ எனத் தெரிவித்தனர்.