Published:Updated:

கோவை கார் வெடிப்பு: ``தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?” - டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்

``தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாசாரம் பெருகிவருகிறது. விடியலாட்சி தருவோம் என்று கூறிவிட்டு, முதல்வரே `ஏண்டா விடியுது?’ எனப் புலம்பும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.” - டி.டி.வி.தினகரன்

கோவை கார் வெடிப்பு: ``தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?” - டி.டி.வி.தினகரன்

``தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாசாரம் பெருகிவருகிறது. விடியலாட்சி தருவோம் என்று கூறிவிட்டு, முதல்வரே `ஏண்டா விடியுது?’ எனப் புலம்பும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.” - டி.டி.வி.தினகரன்

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

`இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரையும் ஏற்கெனவே யார் சேர்த்து வைத்தார்களோ, அவங்க மனசுவைத்தால்தான் அவங்க ரெண்டு பேரும் சேர்வார்கள்’ என தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் வந்தவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``கோவையில் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காமல் மெளனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இனிமேலாவது தீவிரவாதிகள் விஷயத்தில் தமிழக அரசு கடுமையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்குகிறது. அதனால், வாக்குவங்கி அரசியலை மட்டும் மனதில்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பொறுப்பேற்று அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

கோவை கார் வெடிப்பு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயம் என்பதால், அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாசாரம் பெருகிவருகிறது. `விடியலாட்சி தருவோம்’ என்று கூறிவிட்டு, முதல்வரே `ஏண்டா விடியுது?’ எனப் புலம்பும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும்.

தமிழகத்தில் தமிழ்தான் தாய்மொழி. எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தாய்மொழிக் கல்வி அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதுபோல, தமிழக மக்கள் எந்தவொரு மொழியையும் விரும்பித்தான் ஏற்றுக்கொள்வார்களே தவிர, திணிப்பை விரும்ப மாட்டார்கள்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

வருகிற 2024-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் தமிழகத்தில் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைக்கும். ஏற்கெனவே கடந்த 1965-ம் ஆண்டில் இந்தித் திணிப்பு காரணமாகவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. தமிழகத்தில் இதுவரை காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு இந்தித் திணிப்பு முயற்சிக் காரணம். எனவே, அது போன்ற விபரீத முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபடாது என நினைக்கிறேன்.

செய்தியாளர்கள் மடக்கும்விதத்தில்தான் கேள்வி கேட்பார்கள். அண்ணாமலை இப்பதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். பட்டு வரும்போது நிதானமாகிவிடுவார். ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், தேசியக் கட்சியின் தமிழகத் தலைவரான அவர் ஏற்கெனவே ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் போக்கு குறித்து அவர் கட்சியின் தேசியத் தலைமையும் உன்னிப்பாக கவனிக்கிறது.

தினகரன்
தினகரன்

நிறைய விஷயங்களைச் சரியாக எடுத்துச் சொல்கிறார். ஆனால் இது மாதிரி கோபப்படுவது ஏன் எனத் தெரியவில்லை. மக்கள் மனதில் உள்ளதைக் கேள்வியாகக் கேட்கும் பத்திரிகையாளர்களுக்கு அவர் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரையும் ஏற்கெனவே யார் சேர்த்துவைத்தார்களோ அவங்க மனசுவைத்தால்தான் அவங்க ரெண்டு பேரும் சேர்வார்கள் என்பது என் கருத்து” என்றார்.